லொறியும் நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்து

தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியின் ஹபரணை, ஹிரிவடுன்ன பகுதியில் சிறிய லொறி ஒன்று நோயாளர் காவு வண்டியுடன் மோதி இன்று (25) நண்பகல் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளர் காவு வண்டியில் வந்த நோயாளி ஒருவரும் காயமடைந்துள்ளதோடு, அதன் சாரதியும் மற்றுமொரு பெண் ஊழியரும் காயமடைந்து அவர்களும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் ஹபரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நோயாளர் காவு […]

ஊழல் செய்யவே மாட்டேன்; தவெகவை மக்கள் நம்புகின்றனர் – விஜய்

ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசாவையும் தொட மாட்டேன். எனக்கு அதைத் தொட வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன். நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா? நமக்கா? அதெல்லாம் இல்லை. இந்த மாதிரி அழுத்தங்களுக்கு எல்லாம் அடங்கிப் போகிற ஆளா […]

பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சிறீதரனின் பதவி பறிப்பு?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று (25) பிற்பகல் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த […]

வட்டுவாகலில் மாபெரும் பட்டத் திருவிழா

முல்லைத்தீவில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும் வட்டுவாகல் மக்களும் இணைந்து மாபெரும் பட்டத் திருவிழாவை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, இன்றைய தினம் (25.01.2026) பிற்பகல் 2 மணிக்கு முல்லைத்தீவு சுற்றுலாமைய நகரக் கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வின் பிரதம அதிதிகளாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சிறுவர்களுக்கு சிறந்த […]

ஆண் செவிலியர் போலீசால் சுட்டுக் கொலை: அதிபர் டிரம்ப் அரசுக்கு கவர்னர் கண்டனம்

அமெரிக்காவில் அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராடிய நர்சு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸ் நகரில், குடியேற்ற விவகாரம் தொடர்பாக கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 7ம் தேதி ரெனி குட் என்பவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள், கடந்த 3 வாரங்களில் மூன்றாவது முறையாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. விட்டியர் பகுதியில் நேற்று அலெக்ஸ் ஜெப்ரி […]

திருநெல்வேலியில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய் மரணம்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி – கலாசாலை வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான 49 வயதுடையவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அந்தத் தாய் கழிப்பறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராத காரணத்தால் அவரை தேடிச்சென்று மகன் பார்த்தவேளை மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். […]

தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார். குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்களுமே என அவர் தெரிவித்துள்ளார். கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்லாது, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் […]

தேசிய மக்கள் சக்தி பதவியேற்று ஒரு வருடமாகியும் அரசியல் தீர்வு இதுவரை இல்லை – இரா.சாணக்கியன்

மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு காலத்தில் முன்வைத்த “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை, தற்போதைய ஆட்சியின் கீழ் கேள்விக்குறியாகியுள்ளது – இரா.சாணக்கியன் எம்.பி மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு காலத்தில் முன்வைத்த “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை, தற்போதைய ஆட்சியின் கீழ் கேள்விக்குறியாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் (24)இலங்கை தமிழரசு கட்சி ஏற்பாடு செய்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு […]

காவல் தெய்வங்களாக வெகுஜன ஊடகங்களை அழைக்கலாம்!

ஜனநாயக அமைப்பில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தூண்களில் நான்காவது தூணாக அமைந்திருக்கும், நிறைவேற்று அதிகாரம், சட்டமியற்றல் மற்றும் நீதித்துறையைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக சுதந்திர ஊடகங்களை அழைக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (25) கோட்டே அங்கம்பிட்டிய மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். சுதந்திர ஊடகத்தால் நல்ல நாடு உருவாகி, […]

கட்சியை எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுங்கள் – டக்ளஸ் தேவானந்தா

தேசிய மாநாட்டினை நடாத்தி கட்சி எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை எதிர்காலம், நாம் நேசிக்கின்ற மக்களுக்கு வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற கலந்துரையாடலில், தன்னுடைய கைது மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கட்சி செயற்பாட்டாளர்களுக்கு தெளிபடுத்தும்போதே இதனைத் தெரிவித்தார். மேலும், மாற்றம் பற்றிய எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களுக்கு […]