சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் வைத்து 43 நாட்களின் பின்னர் 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.இந்த கைது நடவடிக்கையானது கடந்த புதன்கிழமை (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 2025.12.11 அன்று 12 வயது மதிக்கத்தக்க தனது சொந்த மகளை கூட்டு பாலியல் […]

யாசகரை கொலை செய்த இளைஞன் பொலிஸில் சரண்!

கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான இளைஞன் கண்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார். யாசகப் பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த […]

புத்தர் சிலை விவகாரம்; விளக்கமறியலில் உள்ள கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி கஜநாயக்க தெரிவித்துள்ளார். பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 6 பேர், திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் […]

இளைஞர்கள் இருவர் விபத்தில் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கெப்ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், கெப்ரக வாகனமொன்றுடன் மோதியதில், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு ஏறாவூர் […]

தமிழர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்; சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய தமிழர் தேசிய பேரவை

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்த காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்து சர்வதேச ரீதியான பொறுப்புக்கூறலை அவசியம் என்பதை கனேடிய தமிழர் தேசிய பேரவை (National Council of Canadian Tamils – NCCT) மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜனவரி 13, 2026 அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) வெளியிட்ட “We Lost Everything – Even Hope for Justice: Accountability for Conflict-Related Sexual Violence in […]

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைத் தாக்குதல்: 7 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் தற்கொலைப்படைத் தாக்குதல் இடம்பெற்றதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல், கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு தரப்பு சமாதானக் குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் நூர் ஆலம் மெஹ்சூத் என்பவரின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (23) இரவு நடைபெற்ற திருமண நிகழ்வின் போது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமண விழாவில் விருந்தினர்கள் […]

கண்காணிப்பு விமானம் மலை மீது மோதியது; 10 பேர் உயிரிழப்பு; இந்தோனேசியாவில் சம்பவம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரிலிருந்து தெற்கு சுலவாசி மாகாணத்திற்கான கண்காணிப்பு பணிக்காக புறப்பட்ட சிறிய ரக விமானம் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17) புறப்பட்ட இந்த ATR 42-500 வகை விமானம், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் மற்றும் பாங்க்கெப் மாவட்டங்களுக்கிடையிலான வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, பிற்பகல் 1.30 மணியளவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மலைப்பாங்கான பகுதியில் […]

சுழிபுர முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்

யாழ்ப்பாணம் –  சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்து, கடிதமொன்றை 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்தார். அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் நீண்டகாலமாக […]

ஆறாம் தர கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக பெற்றோர்கள் கவனயீர்ப்பு

ஆறாம் தரத்திற்கான புதிய கல்வி சீர்திருத்தத்தை அமல்படுத்தக் கோரி நாவலப்பிட்டி நகரில் இன்று சனிக்கிழமை (24) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ‘எங்கள் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக அனைத்து ஆறாம் தர வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களும் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ், கல்வி மறு சீரமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆறாம் தர மாணவர்களின் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கல்வி […]

வவுனியாவில் பொலிஸ் வாகனத்தை மோதிவிட்டு ஓடிய லொறியின் சாரதி கைது!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா பகுதியில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை மோதி தப்பிச் சென்ற லொறியின் சாரதி இன்று சனிக்கிழமை (24) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை லொறி ஒன்று மோதிவிட்டு தப்பிச் செல்லும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வந்தது. இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த லொறி ஒன்று பொலிஸ் மோட்டார் சைக்கிளை மோதி […]