கனடா – பிராம்ப்டன் நகர மன்றத்தில் தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் பாரம்பரிய கொண்டாட்டங்கள்!

கனடா பிராம்ப்டன் நகராட்சி அரசாங்கம், ஜனவரி 31 அன்று பிராம்ப்டன் நகர மன்றத்தில் (City Hall) நடைபெறும் தமிழ் பாரம்பரிய மாதம் மற்றும் தைப்பொங்கல் தொடர்பான சிறப்பு சமூகக் கொண்டாட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வின் போது சமூகக் கொடியேற்ற விழா, உற்சாகமிக்க பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய தமிழ்ச் சமையல் – இலவச உணவு வழங்கல் ஆகியவை இடம்பெறும். இதன் மூலம், பிராம்ப்டனின் வசிக்கின்ற தமிழ் சமூகத்தின் செழுமையான வரலாறு, பண்பாடு மற்றும் […]

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 25 செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை […]

திமுக ஆட்சியை மாற்றுவதற்கு விஜய்யால் மட்டுமே முடியும்

திமுக ஆட்சியை மாற்றுவதற்கு தவெக தலைவர் விஜய்யால் மட்டுமே முடியும் என்று கட்சியின் தலைமை நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் செங்கோட்டையன் பேசுகையில், “இனிவரும் காலங்களில் போலீஸ், நடத்துநர்களிடமும் விசில் அடிக்கக் கூடாது என்ற சொல்லப் போகின்றனர். விஜய்யை திரைப்படத்தில்தான் ஹீரோ என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அரசியல் ஹீரோவாகவும் அவர்தான் வரவிருக்கிறார். தேர்தல் எப்போது வரப் போகிறது என்று பல நாடுகளிலிருந்து கேட்டு […]

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்

ஜம்மு காஷ்மீரில் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் மலைப்பாங்கான மாவட்டங்களில் பாடசாலைகள் நேற்று மூடப்பட்டன. பனிப்பொழிவு ஏற்பட்டதால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேநேரத்தில் ஜம்மு நகரம் உள்பட சமவெளிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்த வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு பிரிவில் உள்ள பூஞ்ச் நகரம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பொழிவை சந்தித்துள்ளது, இது உள்ளூர்வாசிகளிடையே உற்சாகத்தை […]

மனைவியையும் உறவினர்களையும் சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது!

அமெரிக்காவில் குடும்பத் தகராறில் மனைவியைச் சுட்டுக் கொன்றதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த விஜய் குமார் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தமது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் அடிக்கடி குடும்பத் தகராறும் அதனால் வீண் வாக்குவாதமும் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை(ஜன. 23) ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டிலிருந்த தமது மனைவியையும் உறவினர்களையும் விஜய் குமார் சுட்டுக் கொன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு […]

பிரச்சினையுடைய அரசாகவே திமுக போய்க் கொண்டிருக்கின்றது – தமிழிசை சௌந்தரராஜன்

திமுக அரசு பிரச்சினையுடைய அரசாகப் போய்க் கொண்டிருப்பதாக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில் “இரட்டை மட்டுமல்ல; மூன்று என்ஜின் ஆட்சியாகவும் பல மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிபுரிந்து வருகிறது. மாநிலங்கள் மட்டுமின்றி, மாநகராட்சிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று வருகிறது. நாங்கள் இரட்டை என்ஜின் அரசாக போய்க் கொண்டிருக்கிறோம். ஆனால், நீங்கள் (திமுக) பிரச்சினையான என்ஜின் அரசாக போய்க் கொண்டிருக்கிறீர்கள். சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் […]

உலக கிண்ணத்தில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்!

துகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய, ஸ்காட்லாந்து அணி தற்போது ‘சி’ (Group C) குழுவில் இத்தாலி, நேபாளம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் போட்டியிடவுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உத்தரவின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் […]

இலங்கை விமானப்படைக்கு இரட்டை வெற்றி

83வது தேசிய மல்யுத்த செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் செம்பியன் பட்டங்களை வென்று இலங்கை விமானப்படை இரட்டை வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இப்போட்டித் தொடர் ஜனவரி 21 முதல் 23 வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 10 முன்னணி அணிகள் பங்கேற்றதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 170 மல்யுத்த வீரர்கள் போட்டியிட்டனர். ஆண்கள் பிரிவில் இலங்கை விமானப்படை அணி மொத்தமாக 34.5 […]

குற்றத்தடுப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 524 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் நேற்று (23) 524 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, நேற்றைய தினம் 30,236 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போதே இந்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களுடன் நேரடி தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 200 பேரும் இதன்போது […]

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பணி இடைநிறுத்தம்

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.