திருமணத்திற்கு புறம்பான உறவினை கொண்டிருந்த கணவனையும் காதலியையும் தாக்கிய மனைவி கைது
தென்னிலங்கையில் திருமணத்திற்கு புறம்பான உறவினை கொண்டிருந்த கணவன், மற்றும் காதலியை தாக்கிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். பாதுக்கை பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான மனைவி, தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய பின்னர் பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த கணவனும் அவரது காதலியும் பாதுக்கை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் […]
உப்பூறல் கிராமத்தில் ஆறு வீடுகள் யானைகளால் சேதம்

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் சனிக்கிழமை (24) அதிகாலை உட்கொகுந்த காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. அத்தோடு வீட்டிலிருந்த உபகரணங்களும் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்குள் உப்பூறல் கிராமத்தில் ஆறு வீடுகள் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்தோடு காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை நஷ்ட ஈடுகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் […]
சமூக வலுவூட்டல் ஊடாக வறுமையை ஒழித்தல் பிரஜாசக்தி வேலைத்திட்டம்; புதிய டிஜிட்டல் கட்டமைப்பு

சமூக வலுவூட்டல் ஊடாக வறுமையை ஒழித்தல் மற்றும் பொருளாதார நீதியை உறுதி செய்வதற்காக புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பிரஜாசக்தி’ தேசிய இயக்கம், தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இத்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்காக புதிய டிஜிட்டல் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘பிரஜாசக்தி’ தேசிய வேலைத்திட்டம் குறித்து நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமையாற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பூளர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இன்று (24) அலரி மாளிகையில் […]
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலக குற்றவாளி நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்!

சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் இந்தியாவிலிருந்து இன்று (24) பிற்பகல் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சந்தேகநபர் அழைத்து வரப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபருக்கு எதிராக பல […]
இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இன்று (23) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சரித் […]
முத்துக்குமாரசுவாமி; தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா

தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். ஈழ விடுதலை போராடடத்தின் ஆரம்ப கார்தாவான முத்து குமார சுவாமி அமெரிக்காவில் மரணமடைத்துள்ளார். அவரது நினைவாக எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவருமான சட்டத்தரணி தம்பித்துரை முத்துகுமாரசுவாமி கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் காலமானார். […]
பந்தயத்தில் பலியான பாடசாலை மாணவன்; பலரை கைது செய்ய உத்தரவு

ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. ஹொரணையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றிருந்த போது, காரில் மோதி குறித்த உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து, இடம்பெற்ற மாணவனின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது, உயிருக்கு ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை […]
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அபராதத்துடன் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த டிச.23ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை படையால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கும் தலா ரூ.44,500 [இந்திய மதிப்பு] இலங்கை மன்னார் நீதிமன்றம் அபராதம் விதித்தது.
ஆண்டின் முதல் 22 நாட்களில் போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன சாரதிகள் கைது

2026 ஆம் ஆண்டின் முதல் 22 நாட்களில் போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 135 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களினால் 15 சாரதிகளும் 50 பாதசாரிகளும் உயிரிழந்துள்ளன. சாரதிகள் அனைவரும் தங்களது […]
காசா அமைதி வாரியத்திலிருந்து கனடா நீக்கம்: பிரதமர் மார்க் கார்னியுடன் டிரம்ப் மோதல் எதிரொலி

காசா மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்ட ‘அமைதி வாரியம்’ என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தொடங்கினார். தற்போது இந்த வாரியத்தில் துருக்கி, ஹங்கேரி, அர்ஜென்டினா உள்ளிட்ட 35 நாடுகள் இணைந்துள்ள நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இதில் இணைய மறுத்துவிட்டன. இந்த நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு வழங்கப்பட்ட அழைப்பை அதிபர் டிரம்ப் அதிரடியாக ரத்து செய்தார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார […]