அமெரிக்கா இருப்பதால் தான் கனடா இன்று உயிர் வாழ்கிறது – ட்ரம்ப்

அமெரிக்கா இருப்பதால் தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். கனடா நாட்டை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணைக்கவேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனிடையே கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் ஒரு AI படத்தையும் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிற நாடுகளை அச்சுறுத்த பொருளாதார பலம் தற்போது ஆயுதமாக மாறியுள்ளதாக அமெரிக்காவை கனடா பிரதமர் சாடியிருந்தார். இந்தநிலையில், […]
கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – மேலும் ஒருவர் கைது
ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடற்கரை வீதியின் 95 வத்தை பகுதியில் வைத்து நேற்று (22.01.2026) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைதானவரிடம் இருந்து 24 கிராம் 300 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் இன்று (23) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், […]
யாழ்.சர்வதேச சட்ட மாநாடு: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் – இந்தியாவின் சுரானா & சுரானா சட்ட நிறுவன இணைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2026ம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் 2024ம் ஆண்டில் முதல்முதலாக கரம்கோர்த்து முதலாம் யாழ்ப்பாண சட்ட மாநாட்டை ஒழுங்கு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது, 2025ம் ஆண்டில் சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து அதனை யாழ்ப்பான சர்வதேச சட்ட மாநாடாக பரிணாமிப்பதில் வெற்றி […]
யாழ் போதனா வைத்தியசாலை சேவைகள்; பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழு ஆய்வு
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பான விடயங்கள், பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன. மேற்படி குழுக் கூட்டம் கௌரவ வைத்தியர் நிஹால் அபேசிங்கே அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில், யாழ்ப்பாண போதனா […]
மாநகர சபையில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து அறிவிக்க சந்தர்ப்பம்

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளையும் தகவல்களையும் கோரத் தொடங்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள், குற்றவியல் நம்பிக்கை துரோகம், அதிகாரம் மற்றும் அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்தல், சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கள் மற்றும் கொள்முதல் விதிமீறல்கள் தொடர்பில் அந்த ஆணைக்குழு விசாரிக்கவுள்ளது. […]
விவசாயத்துறையை மேம்படுத்த சீனாவின் ஒத்துழைப்பு

சீன – இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சீனாவும் இலங்கையும் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டமாக, நாட்டின் விவசாயத் துறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து உற்பத்தித்திறனை அதிகரிப்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், நாட்டின் விவசாயத் துறை […]
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி

ற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று (22) கொழும்பில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை […]
இலங்கை விமான சேவைகள், துறைமுகங்களை மேம்படுத்த பிரான்ஸ் எதிர்பார்ப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert) மற்றும் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது பிராந்தியத் தொடர்புகளை வலுப்படுத்துதல், விமானப் போக்குவரத்து உட்கட்டமைப்பு அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் […]
முன்னாள் அமைச்சர் அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று (22) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அதிக விலையில் ‘ஸ்பொட் டெண்டர்கள்’ மூலம் மசகு […]
பல இடங்களில் மழை
வடக்கு, வட- மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (23) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி உருவாவதற்கான […]