தொழில் நியாய சபை தலைவர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

தொழில் நியாய சபையின் தலைவர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 21ஆம் திகதி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொழில் நியாய சபையின் நிலுவையிலுள்ள வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிப்பதே நீதிச் சேவை ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும். அந்த நோக்கத்தை வெற்றிகொள்வதற்காக, அனைத்து விடயங்களையும் பரிசீலித்த பின்னர், வருடாந்த சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்கள் நிறைவேற்ற வேண்டிய குறைந்தபட்ச கட்டளைகளின் எண்ணிக்கை குறித்து […]
கிளினிக் நிலையம் நடத்தி வந்த போலி வைத்தியர் கைது

வாழைச்சேனையில் கிளினிக் நிலையம் ஒன்றை நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்யதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியர்கள் போல உடையணிந்து புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி தான் வைத்தியர் என வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் சம்பவ […]
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் […]
பணிப்புறக்கணிப்பில் அரச வைத்தியர்கள்

இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமையினாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் என்பன […]
தமிழர் வளங்களைச் சூறையாடி சிங்களக் குடியேற்றங்களுக்கு மேலும் வசதியளிக்கவே கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம்!

தமிழர் வளங்களைச் சூறையாடி வன்னிப் பெருநில பரப்பில் கட்டமைக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு மேலும் வசதியளிக்கவே கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை அரசாங்கம் இப்போது முன்னெடுக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “கிவுல் ஓயா திட்டமானது 2011ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு நான்கு வருடங்களில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசு இப்போது திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரத்தை […]
திருமலையில் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்?

திருகோணமலை கோமரங்கடவல -அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம் (22.1.2026) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் குறித்த சிறுவர்களை அழைத்துச் சென்று கசிப்பு அருந்த கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோமரங்கடவல பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களை கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் மேலதிக சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு […]
வீதிகளில் குப்பைகளை கொட்ட முற்பட்ட நபர்களை மடக்கி பிடித்த மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்கள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறப்படாமல் நடப்பட்ட பதாகைகளை சட்டத்தின் கீழ் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் […]
அமெரிக்க நிர்வாகத்தை கண்டித்து கனடாவின் நிலைப்பாட்டில் ஒரு திருப்பத்தை அறிவிக்க ஆலோசனை!

அமெரிக்க நிர்வாகத்தை கண்டித்து, கனடாவின் நிலைப்பாட்டில் ஒரு திருப்பத்தை அறிவிக்கும் வகையில் இந்த வாரம் உலக மேடையில் கவனத்தை ஈர்த்த உரையாற்றிய பின்னர், பிரதமர் மார்க் கார்னி புதிய ஆண்டுக்கான அரசின் திட்டங்களை வகுக்க க்யூபெக் நகரில் தனது அமைச்சரவையுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சீனா, கட்டார் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) அவர் ஆற்றிய தீவிரமான உரையில், […]
ஒன்டாரியோ நிறுவனங்களின் வேலை வாய்ப்பு உருவாக்கம்

மாகாணத்தில் தொழிலாளர்களை ஆதரித்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஒன்டாரியோ நிறுவனங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில், வான் நகரில் அமைந்துள்ள Foamite Industries மற்றும் Burnac Produce நிறுவனங்களை நான் பார்வையிட்டேன் என ஒன்ராறியோவின் பிரதமர் டக் ஃபோர்ட் (Doug Ford) பதிவிட்டுள்ளார்.
பனிச்சறுக்கு விடுதி ஊழியர்கள் கியூபெக்கில் பொது வேலைநிறுத்தம்!

கியூபெக்கின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ’லெ மாசிஃப் டி சார்லிவோக்’ (Le Massif de Charlevoix) பனிச்சறுக்கு விடுதி ஊழியர்கள், இன்று முதல் காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். ஊதிய உயர்வு மற்றும் பணிப்பாதுகாப்பு தொடர்பாக நிர்வாகத்துடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 400 ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், நிர்வாகத்தின் சமீபத்திய ஒப்பந்த வாய்ப்பை நிராகரித்துள்ளது. குளிர்காலச் சுற்றுலா உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இந்த வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதால், பனிச்சறுக்கு […]