டி20 உலகக்கிண்ணம் யாழுக்கும் வருகிறது

டி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது. டி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகின்றது. இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் உலகக்கிண்ணம் வியாழக்கிழமை (22) அன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உலகக்கிண்ணம் இலங்கையில் பல்வேறு நகரங்களில் […]

தலதா மாளிகைக்கு முன்பாக மண் நிரப்பி ரேஸ் ஓடும் போது பௌத்த மதம் பற்றி நாமல் ராஜபக்ச ஏன் நினைக்கவில்லை?

புதிய கல்விக் மறுசீரமைப்பு ஊடாக பௌத்த மதமும் நாட்டின் கலாசாரமும் இல்லாமல் போகும் என்று நாமல் ராஜபக்ச கூறுகின்றார் . தலதா மாளிகைக்கு முன்பாக மண் நிரப்பி ரேஸ் ஓடும் போது பௌத்த மதம் பற்றி ஏன் நினைக்கவில்லை? கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான பணிப்பெண்ணை அலரி மாளிகையில் வைத்துக் கொண்டு மக்களின் வரிப்பணத்தில் அவருக்கு சம்பளம் வழங்கும் போது நாட்டின் கலாசாரம் எங்கே போனது.என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கேள்வி எழுப்பினார் பாராளுமன்றத்தில் […]

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – பெல்ஜியம் நட்புறவுச் சங்கத்தின் தலைவராக சுசில் ரணசிங்க

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க தெரிவு செய்யப்பட்டார். இந்தச் சங்கத்தின் மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் புதன்கிழமை (21) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பெல்ஜியத்தின் இலங்கைக்கான ஹொனொரரி கொன்சல் கோன்ராட் பிரிஞ்சியர்ஸ் (Mr. Koenraad Pringiers) விருந்தினராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் […]

திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய சுகாதாரத தேவைகள் குறித்து அவதானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலய சூழலில் அமைந்திருக்கின்ற மலசல கூட வசதிகள் மிக மோசமான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவது தொடர்பாக பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை (23) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் உத்தியோகத்தர்கள் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு ஆராயப்பட்டு அதற்கான நிரந்தர தீர்வுகள் தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. […]

திருகோணமலைக்கும் இஸ்ரேலியர்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா?

கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவு காணிகளை சுற்றுலா துறைக்கு எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம் அருகம்பையில் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் இருப்பதுபோன்று திருகோணமலைக்கும் இஸ்ரேலியர்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் இடையீட்டு வினா ஒன்றை எழுப்பியே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை நிறுவுவதற்காக காணி சீர் திருத்த ஆணைக்குழுவினால் […]

ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு சென்று இனவாதத்தை தூண்டிவிடுகின்றார்

ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு சென்று இனவாதத்தை தூண்டிவிடுகின்றார் சிங்கள -பௌத்தர்கள் மீது ஜனாதிபதிக்கு அப்படி என்ன கோபம் எனக்கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர, சிங்கள பௌத்த மக்களை அரசாங்கம் பழி வாங்குகின்றது குற்றம்சாட்டினார் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு சென்று இனவாதத்தை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார்.இது முற்றிலும் தவறு […]

கல்வி மறுசீரமைப்பின் போது முன் பள்ளியிலேயே தரமான கல்வியை வழங்க வேண்டும்!

கல்வி மறுசீரமைப்பின் போது முன்பள்ளிகளையும் அதன் ஆசிரியர்களை பொறுப்பேற்று பிள்ளைகளுக்கு தரமான அடிப்படை கல்வி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது ஶ்ரீநேசன் எம்.பி மேலும் தெரிவிக்கையில், கல்வி மறுசீரமைப்பு என்பது நாட்டுக்கு […]

புதிய சமாதான சபை அமைப்பில் சேருமாறு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து மௌனம் காக்கும் ஐரோப்பிய நாடுகள்

அமெரிக்கா முன்வைத்த புதிய சமாதான சபை அமைப்பில் சேருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்காவின் மரபு ரீதியான நேச நாடுகள் பல இதுவரை பதிலளிக்கவில்லை அல்லது நேரடியாக மறுத்துள்ளன. பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள், இந்த சபையின் அதிகார வரம்பு மிக அதிகமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அது ஐக்கிய நாடுகள் சபையின் பங்கை மறைத்துவிடும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளன. மேலும், இந்த சபையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் பங்கேற்க அழைக்கப்பட்டிருப்பதும், உக்ரைன் போரின் பின்னணியில் பல […]

முத்தரப்பு பேச்சுவார்த்தை; உக்ரைன் – ரஷ்ய போர் முடிவுக்கு வருகிறது?

உக்ரைன் ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு சந்திப்பு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றும் போது, இந்த இரு நாள் சந்திப்பு வெள்ளிக்கிழமை மற்றும் […]

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய தமிழர் சமூகத்தின் வெற்றி, நவீன பிரித்தானியாவின் வாக்குறுதியையும், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் திட நம்பிக்கை மற்றும் உறுதியை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பெற்றோர் இலங்கையில் […]