உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியது அமெரிக்கா

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அமெரிக்கா நேற்று உத்தியோகபூர்வமாக வெளியேறுகிறது. இது உலகளாவிய ரீதியிலும் அமெரிக்காவிலும் சுகாதாரப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2025 ஆம் ஆண்டில் தனது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே, ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து தாம் விலகப்போவதாக அறிவித்தார். அமெரிக்க சட்டப்படி, விலகுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும். […]
உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் இயக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இடைநிறுத்தம்!

ஜப்பானில் உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) நிலையத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பின்னர், ஜப்பானின் அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டன. இந்நிலையில், நிகாட்டா மாகாணத்தில் உள்ள இந்த அணுமின் நிலையத்தின் 6-வது அணு உலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் புதன்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டன. எனினும், உலை செயல்பாட்டுக்கு வந்த சில […]
அமெரிக்கா டிக்டொக் தடையிலிருந்து தப்பியது!

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு விதிக்கப்படவிருந்த தடையை நீக்கும் வகையில், அதன் அமெரிக்க செயல்பாடுகளை டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு பெற்ற முதலீட்டாளர் குழுவிடம் ஒப்படைக்க அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ‘TikTok USDS Joint Venture LLC’ என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கப் பயனர்களின் தரவுப் பாதுகாப்பு, அல்காரிதம் பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றை கண்காணிக்கும். டிக்டொக்கின் தாய் நிறுவனமான சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் (ByteDance), புதிய […]
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் பயணித்த கப்பல் விபத்து

தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் பகுதிக்கு அருகே, பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 21 பேருடன் சென்ற வெளிநாட்டுச் சரக்குக் கப்பல் இன்று வெள்ளிக்கிழமை (ஜன 23) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்றையதினம் அதிகாலை 1:34 மணியளவில் இந்தக் கப்பல் விபத்துக்குள்ளானது குறித்த தகவல் சீனக் கடலோரக் காவல்படைக்குக் கிடைத்தது. தகவலறிந்தவுடன் இரண்டு மீட்புக் கப்பல்களை சீனா அங்கு அனுப்பியது. இதுவரை 13 பேரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 08 பேரை தேடும் பணி தீவிரமாக […]
கல்வி மறு சீரமைப்பு தொடர்பில் நாட்டு மக்கள் எந்தளவுக்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள்?

அரசின் கல்வி மறு சீரமைப்பில் ஆறாம் தர ஆங்கில பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் தவறுதலாக இணைக்கப்பட்டது என்று எவராலும் கூறித் தப்பிவிட முடியாது. இது வேண்டுமென்றே உள்ளடக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹேசா விதானகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) அன்று இடம் பெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி மறு சீரமைப்பு தொடர்பில் நாட்டு மக்கள் எந்தளவுக்கு […]
ஜப்பான் பிரதமர் பாராளுமன்றத்தை கலைத்தார்

ஜப்பான் பிரதமர் தகைச்சி பாராளுமன்றத்தைக் கலைத்து, திடீர்த் தேர்தலுக்கு வழி வகுத்தார். ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமர் சனே தகைச்சி பாராளுமன்றத்தைக் கலைத்ததைத் தொடர்ந்து, பெப்ரவரி 8 ஆம் திகதி ஜப்பான் தேர்தல் நடத்த உள்ளது. பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெறவிருக்கும் திடீர்த் தேர்தலுக்கு முன்னதாக, ஜப்பானியப் பிரதமர் சனே தகைச்சி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் பாரம்பரியமாக “பன்சாய்” என்ற முழக்கத்தை எழுப்பியதால், கீழ் சபையை அதிகாரப்பூர்வமாகக் கலைக்கும் கடிதத்தை ஜப்பான் பாராளுமன்ற […]
அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட கைது

அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் இன்று வௌ்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்டார். 4.6 கோடி ரூபாய் சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்தோனேசியாவில் கடற்கரையில் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர். குகையின் சுவரில் காணப்படும் சிவப்பு நிற கை ஓவியம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மற்ற ஓவியங்களில்பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளின் அம்சங்களைக் கொண்ட மனித உருவங்கள் காணப்பட்டன. குகைச் சுவரில் கைகளை வைத்து, […]
பேரிடரால் பாதிக்கப்பட்ட வணிகங்களை மீண்டும் தொடங்குவதற்கு நிதியுதவி

பேரிடரால் பாதிக்கப்பட்ட வணிகங்களை மீண்டும் தொடங்குவதற்கான நிதியுதவி தொடர்பில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. பிரதேச செயலகத்தில் சிறு மற்றும் நுண் நிறுவனங்களுக்கான வணிகமாக தொழில்துறை அமைச்சினால் பதிவு செய்யப்பட்டவைக்கு மட்டும் 01) ஒரு அலகிற்கு ரூ. 200,000 02) அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு வீட்டில் பதிவு செய்யப்படாத தனிநபர், சிறு மற்றும் நுண் வணிகங்களுக்கு ஒரு அலகிற்கு ரூ. 200,000 03) ஒரு கட்டிடத்தில் மேற்கொள்ளப்படும் வணிக வணிகங்களுக்கு ஒரு அலகிற்கு ரூ. […]
மலையகத்தில் பயிற்சி நிலையங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள் வைத்தது சாபக்கேடு

மலையகத்தில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட பயிற்சி நிலையங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள் வைக்கப்பட்டிருப்பது சாபக் கேடான விடயம் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான நிலையங்களுக்கு மலையக போராளிகள் மற்றும் தியாகிகளின் பெயர்களை சூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) அன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அம்பிகா சாமுவேல் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு […]