மீன்பிடி படகுகளில் போதைப்பொருள்

தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளிலும் சுமார் 270 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சந்தேகத்திற்குரிய குறித்த இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் தற்போது கரைக்குக் கொண்டுவரப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அருண் விஜய்யின் ரெட்ட தல ஓடிடி வெளியீடு குறித்து

நடிகர் அருண் விஜய் நடித்த ரெட்ட தல திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியான ரெட்ட தல திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. கிரிஸ் திருக்குமரன் இயக்கிய இப்படத்தில் நாயகிகளாக சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில், இப்படம் விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிக்கிறார்!

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநர், நடிகராக இருக்கும் சுந்தர். சி பல வெற்றி திரைப்படங்களைக் கொடுத்துள்ளார். இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான மத கஜ ராஜா, அரண்மணை – 4 ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக எதிர்பாராத வரவேற்பைப் பெற்றன. அடுத்ததாக, நடிகர் விஷாலை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த நிலையில், சுந்தர். சியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரின்ஸ் […]
நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் ‘சீதா பயணம் ‘

தமிழ் திரையுலகின் நட்சத்திர வாரிசான ஐஸ்வர்யா அர்ஜுன் கதையின் நாயகியாக நடித்திருக்கும்’ சீதா பயணம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அசல் சினிமா’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீதா பயணம்’ எனும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், அர்ஜுன், துருவா சர்ஜா , பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, சரண் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் என்ற […]
தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம் – முதல்வர் மு.க. ஸ்டாலின்
பிரதமர் சொல்லும் “டபுள் என்ஜின்” எனும் “டப்பா என்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக – என்டிஏ டபுள் என்ஜின் அரசு நிச்சயம் ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம் என்று மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இந்த நிலையில், இதனை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் […]
டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம்!
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய அதே அணியுடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது. அணியில் புதிதாக ஷாகின் ஷா அஃப்ரிடி மற்றும் […]
அதானி குழுமப் பங்குகள் 13% சரிவு!
மோசடி மற்றும் 265 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கில் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நீதிமன்றத்தின் அனுமதி கோரியுள்ளதாக வெளியான செய்திகளையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 13% வரை சரிந்தன. குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்கின் விலை 9.38% சரிந்து பங்கு ஒன்றுக்கு ரூ.1,891.60 ஆகவும், அதானி பவர் 8.84% சரிந்து ரூ.128.35 ஆகவும், அதானி போர்ட்ஸ் […]
குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல் இது – எடப்பாடி பழனிசாமி
திமுகவுக்கு இது இறுதித் தேர்தல் என்றும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “இந்தியாவே இன்று […]
27ஆம் திகதி ஜன நாயகன் தணிக்கை வழக்கு தீர்ப்பு!

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜன.27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.வி.என்.புரொடக்சன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்தை மறுஆய்வு குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். தனி […]
பாஜக தலைமையிலான என்டிஏ அரசு தமிழகத்துக்கு ரூ. 11 லட்சம் கோடி உதவி
பாஜக தலைமையிலான என்டிஏ அரசு தமிழகத்துக்கு ரூ. 11 லட்சம் கோடி உதவிகளை வழங்கியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரளத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் வந்தார். பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர். கூட்டத்தில் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், […]