தற்போதைய அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சி மனநிலையிலேயே உள்ளது – நாமல் ராஜபக்ஷ
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னரும் தமது பழைய போராட்டக் குணத்தையும், அச்சுறுத்தல் விடுக்கும் பாணியையும் கைவிடவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சர் லால் காந்த மகா சங்கத்தினரை அவமதித்தும், அரச அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பை அச்சுறுத்தியும் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என நினைத்தால் […]
அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடு காணப்படுகிறது: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும், இது குறித்து அரசாங்கத்திற்குள்ளேயே பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாகவும் கோட்டை மாநகர சபை உறுப்பினர் சமத் விஜேசுந்தர தெரிவித்தார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கல்விச் சீர்திருத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பதாக அரசாங்கத் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார். இந்நாட்டிற்கு கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது […]
இது இனவாத அரசாங்கம்; இதற்கு பல விடயங்களை உதாரணமாக கூற முடியும் – இரா. சாணக்கியன்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தற்றுணிவுடன் பேசினார் என தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா. சாணக்கியன் அதற்கு நான் நன்றிகூறுகின்றேன் என்றார். ஒரு பௌத்தர் கூட வாழாத இடத்தில் விகாரையை கட்டி அந்த விகாரைக்கு பஸ்களில் ஆட்களை அழைத்துச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு தீ வைக்க முயற்சித்த போது கடந்த கால ஆட்சியாளர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் ஆனால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாயை திறந்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற […]
எலுவங்குளம் – புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி கையெழுத்து சேகரிப்பு

மன்னாரிலிருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எலுவங்குளம் ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் பிரதான வீதியைத் திறக்கக் கோரி, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று (23) காலை மன்னார் பேருந்து நிலையத்தில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் – எலுவங்குளம் ஊடாக புத்தளத்திற்கான பிரதான வீதியைத் திறப்பதற்கான ஏற்பாட்டுக் குழுவினால் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த வீதியைத் திறந்து மக்களின் பாவனைக்கு விடுவிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற […]
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மல்வத்து அஸ்கிரிய மகா நாயக்க தேரர்கள் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய ஆகிய இரு பீடங்களினதும் மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இன்று காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின் மகா நாயக்கர் அதிவணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் அதிவணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோரைச் சந்தித்துள்ளார். இதன்போது முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து மகா நாயக்க தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகத் […]
இறுதிக் கட்டத்தில் மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயன்முறை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டு இது முன்னெடுக்கப்படுவதாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த சபை குறிப்பிட்டுள்ளது. மின்சாரத் துறையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவிசாவளை வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி
கேகாலை – அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், அவிசாவளை திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது இருவர் படுகாயமடைந்து கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். கொட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு […]
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகள் ஆரம்பம்

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்யும் இந்த ஆண்டுக்கான விசாரணை மேற்கொள்ளும் பணி கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது. நேற்றைய தினம் வவுனியாவில் விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான செயலமர்வு நீதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிலையில் இன்று (23.01) விசாரணைகளை மேற்கொள்ளும் பணி கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது. காணாமல்போன ஆட்கள் பற்றிய கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற 112 முறைப்பாடுகள் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஸ் கட்டுலந்த […]
36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள […]
இலங்கை வந்த விசேட வைத்தியக் குழு!

‘திட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டு பதுளை மாவட்டத்திலுள்ள “சுரக்ஷா” முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து 5 விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று இன்று (23) நாட்டை வந்தடைந்துள்ளது. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவின் அழைப்பின் பேரிலேயே இந்தக் குழுவினர் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வைத்தியர்கள் கலந்துகொள்ளும் மருத்துவ முகாம் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளதுடன், இதில் உள்நாட்டு வைத்தியர்கள் உட்பட […]