பரந்தன்- முல்லைத்தீவு – ஒலிம்பிக் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை

பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் இருந்து செல்லும் ஒலிம்பிக் வீதியை அகலித்து புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் கிராமத்தில் வசித்துவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற ஒரு வீதியாக பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் இருந்து குறித்த கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதிகளில் ஒன்றாக ஒலிம்பிக் வீதி காணப்படுகின்றது. இந்த வீதியானது கோம்பாவில் கிராமத்திலிருந்து செல்லும் ஒருபகுதி கடந்த 2019ஆம் ஆண்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட […]
கடந்த 2025 டிசம்பரில் பணவீக்கம் அதிகரிப்பு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று 21) வெளியிட்டுள்ள தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 2.4% ஆகக் காணப்பட்ட முதன்மை பணவீக்கம், டிசம்பர் மாதத்தில் 2.9% ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் நவம்பர் மாதம் 3.6% ஆக இருந்த உணவு பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4.4% ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கடந்த நவம்பர் மாதத்தில் 1.5% ஆகக் காணப்பட்ட உணவு அல்லாப் பணவீக்கம், […]
அரசியலமைப்பு விவகாரம் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிற நடவடிக்கைகள் – எம்.ஏ.சுமந்திரன்

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் நேற்று (21) யாழில் சந்தித்து பேசிய நிலையில் குறித்த விடயத்தை எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் […]
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி; அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இடைநிறுத்தம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தும் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தவுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவர் நேற்று(21) இதனைத் தெரிவித்தார். கிரீன்லாந்தின் உரிமையைக் கையகப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தவறினால், சில ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகப் பழிவாங்கும் நோக்கில் சுங்க வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்திய சில நாட்களிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. கடந்த ஜூலை இறுதியில் […]
மலைநாட்டை விரைவாகப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பு!

நிர்மாணம் மற்றும் நிலப்பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா புயலினால் அழிவடைந்த மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதில் தடையாக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மத்திய மலைநாட்டை விரைவாகப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதுடன், காடுகளை மீண்டும் வளர்க்கும் திட்டம் குறித்து ஆசிய […]
ஸ்ரீ பாத யாத்திரைக்கு வருகை ஜெர்மன் நாட்டவர் மீது குளவித் தாக்குதல்

ஸ்ரீ பாத யாத்திரைக்கு வருகை தந்திருந்த ஜெர்மன் நாட்டவரும் ஐந்து இலங்கையர்களும் இன்று(21) குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக நல்லதன்னிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 83 வயதான ஜெர்மன் நாட்டவர் வஸ்கடுவவில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் இருந்து ஹட்டன் வீதியில் ஸ்ரீ பாத பயணித்துக் கொண்டிருந்தபோது, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் கொலுதென்ன பகுதியில் குளவித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குளவித் தாக்குதலால் காயமடைந்த வெளிநாட்டவர் உட்பட ஆறு பேர் ரது அம்பலமா பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரால் நல்லதன்னியவுக்கு […]
தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாகரிகமற்ற கருத்துக்களால் தமிழ் மக்களை தலை குனிய வைக்கிறார்கள் – சந்திரசேகரன் எம்.பி

தமிழ் மக்களை தலை குனிய வைக்கும் விதத்திலேயே தமிழ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்ற கருத்துக்களை விதைக்கின்றார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் பிரதான உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் (21-01-2026)பிற்பகல் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் தலைகுனியும் விதத்திலேயே நாகரீகமற்ற கருத்துக்களை விதைக்கின்றார்கள் இது ஒட்டுமொத்த தமிழ் […]
செம்பியன்பற்று வடக்கு வீதி புனரமைப்பு பணிகளுக்காக மூடல்

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு வீதி புனரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியின் புனரமைப்பு வேலைகள் பருத்தித்துறை பிரதேசசபையால் நேற்றைய(21) தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் இந்தவீதியினூடான போக்குவரத்துகள் யாவும் 21.01.2026 தொடக்கம் 25.01.2026 திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் மாற்றுப் பாதையின் ஊடாக பயணத்தை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை பிரதேசசபையின் உறுப்பினர் குறிஞ்சிக்குமரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுவிஸ் பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்

சுவிட்ஸர்லாந்து செங்காளன் பாராளுமன்றத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் நேற்று முன்தினம் தனது கடமையைப் பொறுப்பேற்றார். ஜெயகுமார் துரைராஜா 38 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து சுவிற்ஸர்லாந்து வந்த அகதி. இன்று, செங் காளன் நகரின் உயர்ந்த அரசியல் பதவியான நகரமன்றத் தலைவர் (Stadtparlament-Präsident) பதவிக்கு, பசுமை கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். பாராளுமன்ற அவையில் ஏனைய கட்சி உறுப்பினர்களும், அவருடன் இணைந்து பயணிக்கும் நண்பர்களும் கலந்து சிறப்பித்தனர்கள்.பாராளுமன்ற அவையில் திருக்குறளை மூன்று தடவைகள் […]