தவிசாளர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ மனோஜ் கார்திய புஞ்சிஹேவா தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை பிரதேச சபையின் செயலாளர் இரேகா தில்ருக்ஷியிடம் நேற்று (21) மாலை கையளித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே கொலையாளிக்கு ஆயுள்தண்டனை

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கில் டேட்சுயா யாமாகாமிக்கு (Tetsuya Yamagami) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுக்கு முன் தேர்தல் பிரசார உரை ஆற்றிக்கொண்டிருந்த அபேயை யாமாகாமி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். சம்பவ இடத்திலேயே யாமாகாமி கைதுசெய்யப்பட்டார்.வழக்கு விசாரணை சென்ற ஆண்டு தொடங்கியபோது யாமாகாமி கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். எனினும் ஜப்பானின் சட்ட நடைமுறையில், ஒருவர் குற்றத்தை ஒப்புக்கெண்டாலும் வழக்கு விசாரணை தொடரும். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கும்படி அரசாங்கத் தரப்பு […]
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் வருகின்ற ஜன. 25 ஆம் தேதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, மீண்டும் கட்சி நிகழ்வில் விஜய் உரையாற்றவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு மாதமாக ஜன நாயகன் திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்று விவகாரம், கரூர் நெரிசல் பலி வழக்கில் சிபிஐ விசாரணை என அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களை விஜய் சந்தித்து வருகிறார். இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழக சட்டப்பேரவை […]
‘டெய்லி மெயில்’ பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் முன்னிலையாகிய இளவரசர் ஹாரி

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, ‘டெய்லி மெயில்’ (Daily Mail) பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளித்துள்ளார். அதன்போது, அந்தப் பத்திரிகையின் செயல்பாடுகளால் தனது மனைவி மேகனின் வாழ்க்கை “முற்றிலும் நரகமாக” மாறியதாக அவர் உருக்கமாகத் தெரிவித்தார். அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் (ANL) என்ற நிறுவனம், சுமார் 20 ஆண்டுகளாக தனது தனிப்பட்ட தகவல்களைச் சட்டவிரோதமாகச் சேகரித்ததாக இளவரசர் ஹரி உட்பட 7 முக்கியப் பிரமுகர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் […]
பலஸ்தீன சிறுவர்களின் கால்பந்து மைதானத்தை இடிக்கும் முடிவை ஒத்திவைப்பு!

க்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெத்லகேம் நகரில், பாலஸ்தீன சிறுவர்களின் கால்பந்து மைதானத்தை இடிக்கும் முடிவை இஸ்ரேல் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. முறையான அனுமதி இன்றி இந்த மைதானம் கட்டப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக இதை இடிக்க வேண்டியது அவசியம் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது. இந்தநிலையில் இந்த மைதானத்தைக் காக்க ஒரு சர்வதேச பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்ட மனு, அதிகாரிகளைத் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்ததாகத் தெரிகிறது. இது எய்தா (Aida) அகதிகள் […]
கிரீன்லாந்து தீவை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தத் தயாhர்! – டொனால்ட் ட்ரம்ப்

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை வாங்குவதற்குத் தாம் உடனடிப் பேச்சுவார்த்தைகளை விரும்புவதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்தார். உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ள டாவோஸ் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது “அளவற்ற வலிமையையும் ராணுவத்தையும் பயன்படுத்தினால் எங்களை எவராலும் தடுக்க முடியாது, ஆனால் நான் அதைச் செய்ய மாட்டேன். எனக்குப் போர் புரிய விருப்பமில்லை, எனவே நான் பலத்தைப் பயன்படுத்த மாட்டேன்” என்று ட்ரம்ப் கூறினார். சுமார் ஒரு மணி நேரம் […]
நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

நாக்பூரில் நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்துக்கிடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. நாயணசுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இந்தியா முதலில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 238 ஓட்டங்கள் குவித்தது. ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய அபிஷேக் சர்மா சிக்சர், பவுண்டரிகளாக அடித்து 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ஓட்டங்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரிங்கு சிங் 20 பந்தில் […]
கியூபெக் மாகாண கல்வி அமைச்சரும் பதவி விலகுகிறார்!

கியூபெக் மாகாண அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கல்வி அமைச்சர் சோனியா லெபெல் (Sonia LeBel) அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களுக்கு முன்பு, கியூபெக் அரசாங்கத்தின் துணை முதல்வர் ஜெனிவீவ் கில்போல்ட் தனது விலகலை அறிவித்திருந்தார். இப்போது சோனியா லெபெல்லும் விலகியிருப்பது ஆளும் கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த முடிவை அறிவித்த லெபெல், எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை […]
தொலைவிலிருந்து பணியாற்றும் தனது ஊழியர்களுக்குக் கனடா வெளியுறவுத் திணைக்களம் எச்சரிக்கை

கனடா வெளியுறவுத் திணைக்களமானது, நாடு முழுவதும் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றும் தனது ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒட்டாவாவிற்கு இடம்பெயராத ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் கனடாவின் எந்தப் பகுதியில் இருந்தும் பணியாற்றலாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், இப்போது அந்த விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. ஒட்டாவாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து 125 கிலோமீட்டர் தொலைவிற்குள் அனைத்து […]
விதிகளுக்கு உட்பட்ட உலக ஒழுங்கு தற்போது முடிவுக்கு வந்துவிட்டது – பிரதமர் மார்க் கார்னி

அமெரிக்கா தலைமையிலான “விதிகளுக்கு உட்பட்ட உலக ஒழுங்கு” தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) உரையாற்றிய போதே, அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். உலகம் இப்போது ஒரு “பெரிய விரிசலை” சந்தித்து வருவதாகவும், பழைய காலத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பது எந்தப் பலனையும் தராது என்றும் பிரதமர் மார்க் கார்னி எச்சரித்தார். வல்லரசு நாடுகளின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல், கனடா போன்ற நடுத்தர நாடுகள் (Middle Powers) […]