ஆள்மாறாட்டம் செய்து இலவச விமானப் பயணம் செய்த கனடாவைச் சேர்ந்தவர் கைது!

கனடாவைச் சேர்ந்த ஓர் ஆடவர் விமானி, விமானச் சிப்பந்தி போல் ஆள்மாறாட்டம் செய்து பல முறை இலவசமாக விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். 33 வயது டால்லாஸ் பொகோர்னிக் (Dallas Pokornik) கனடாவின் டொரோண்டோ நகரில் கைது செய்யப்பட்டார். 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பொகோர்னிக் டொரோண்டோவில் ஒரு விமான நிறுவனத்தில் விமானச் சிப்பந்தியாகப் பணியாற்றினார். பின்னர் அவர் பொய்யான ஊழியர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி 3 விமான நிறுவனங்களில் விமானிகளுக்கும் விமானச் சிப்பந்திகளுக்கும் ஒதுக்கி […]
முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய கல்வி மறுசீரமைப்பு – ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்த, முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, தேசிய கல்வி நிறுவகத்தை அடிப்படையாகக் […]
ஈரான் ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் பலி!

ஈரானில் அண்மையில் வெடித்த ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் மாண்டதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டங்களில் மாண்டோர் எண்ணிக்கை குறித்த முதல் அதிகாரபூர்வ அறிவிப்பு அது. மாண்டவர்களில் குறைந்தது 2,400 பேர் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் என்று கூறப்பட்டது. மற்றவர்கள் குறித்த விவரங்களைத் தொலைக்காட்சி வெளியிடவில்லை. எனினும் அமெரிக்காவைத் தளமாக கொண்டுள்ள மனித உரிமை அமைப்பு ஆர்ப்பாட்டங்களில் மாண்டோர் எண்ணிக்கை குறைந்தது 4,560 என்கிறது. கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 28ஆம் திகதி ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. இதற்கிடையே […]
24 வயதுடைய இளைஞன் காதல் விவகாரத்தால் உயிர் மாய்ப்பு!

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் சாமி அறையில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இளைஞன் ஒருவர் புதன்கிழமை(21) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் புதன்கிழமை(21) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த காரைதீவு -12 […]
’’ஐக்கிய நாட்டு நிறுவனம் திறனற்றது’’ – டொனல்ட் டிரம்ப்

ஐக்கிய நாட்டு நிறுவனம் திறனற்றது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். நிறுவனம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உதவியாக இருக்கவில்லை என்று அவர் சொன்னார். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் திறன் குறித்து தமக்குப் பெரிய நம்பிக்கை இருந்ததாகவும் ஆனால் நிறுவனம் ஒருபோதும் அதன் திறனை வெளிப்படுத்தவில்லை என்று அவர் கூறினார். அமைதிக் குழுவில் சேர அமெரிக்கா உலக நாடுகளுக்குத் தொடர்ந்து அழைப்புகளை விடுக்கும் வேளையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிதாக ஹங்கேரியும் (Hungary), மொரோக்கோவும் (Morocco) அழைப்பை […]
மேல்முறையீடுகள் 130,000 பேரின் அஸ்வெசுமவில் சிக்கல்

மேல்முறையீடுகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைத் திறக்கத் தவறியது போன்ற காரணங்களால் 130,000 க்கும் மேற்பட்ட மக்களின் அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் சிக்கலான நிலையில் உள்ளதாக பொருளாதார மேம்பாட்டு, துணை அமைச்சர் நிஷாந்த ஜெயவீர நேற்று புதன்கிழமை (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நலன்புரி வாரியத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற அனைவருக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அஸ்வெசும கொடுப்பனவுகளைக் கோரியவர்களில், தேர்ந்தெடுக்கப்படாத ஒரு பெரிய குழு இருப்பதாகவும், அந்தக் குழு தற்போது தேர்வு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் […]
நியூசிலாந்தில் நிலச்சரிவு: பலர் மாயம்

நியூசிலாந்தின் வடக்குத் தீவு முழுவதும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து பலர் காணாமல் போயுள்ளனர். நியூசிலாந்தில் நிலச்சரிவுகளுக்குப் பிறகு காணாமல் போன குழந்தைகள் உட்பட பலரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர். நாட்டின் வடக்குத் தீவின் கிழக்கு கடற்கரை முழுவதும் பலத்த மழை பெய்ததால் வீடுகள் வெளியேற்றப்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன. வியாழக்கிழமை பிற்பகல், உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணியளவில் (புதன்கிழமை 20:30 GMT) வடக்குத் தீவில் உள்ள மவுண்ட் மவுங்கானுய் விடுமுறை பூங்காவில் […]
பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் – பிரதமர்

“தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; மாறாக அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சாதகமான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைத்தல் வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி […]
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் சட்டமூலத்துக்கு எதிராக 4 மனுக்கள்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவின் நகல் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, மேற்படி சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை பெறப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை நான்கு. இந்த மனு அரசியலமைப்பின் 121(1) வது பிரிவின்படி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சபை நடவடிக்கைகள் தொடங்கும் போது சபாநாயகர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் சட்டமூலம் நீதி […]
பிராம்ப்டன் நகராட்சியின் 2026 பட்ஜெட் ஆலோசனைச் சந்திப்பு

கடந்த இரவு நடைபெற்ற பிராம்ப்டன் நகராட்சி – உங்கள் உள்ளாட்சி அரசு ஏற்பாடு செய்த BramBudget2026 தொலைபேசி டவுன் ஹால் கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவருக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பிராம்ப்டன் நகராட்சி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது. 5,800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதில் பங்கேற்று, நகராட்சியின் பட்ஜெட் ஆலோசனைச் செயல்முறைகளுக்கு வழிகாட்டும் வகையில் கேள்விகள், கருத்துகள் மற்றும் முன்னுரிமைகளைப் பகிர்ந்துகொண்டனர். மாலை முழுவதும், குடிமக்கள் நேரடி கருத்துக்கணிப்புகள் (live polling) மூலம் தங்களது […]