தங்க விலையில் திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (22.01.2026) காலை 4790 டொலர்களாக பதிவாகியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக 4800 என்ற எல்லையைத் தாண்டிய உலக சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று இந்த சரிவு நிலை பதிவாகியுள்ளது. இருப்பினும், இன்று (22) தங்கத்தின் விலையில் ஓரளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில், இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று தற்பொழுது 381,000 […]
நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரிப்பு

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே டி போர் (Wiebe de Boer) அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வச் சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (21) […]
நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அனைத்து இனக் குழுமங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படுவது அவசியம்!

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அனைத்து இனக் குழுமங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படுவது அவசியமாகும். அவ்வாறு உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பிற்கான பகிரங்க கலந்துரையாடல்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பங்கேற்பு அவசியம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கொழும்பு – ஜானகி ஹோட்டலில் நேற்று புதன்கிழமை (21) வன் டெக்ஸ்ட் இனிஷpயேடிவ்வின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் ஆட்சி நெருக்கடிகள்’ எனும் தொனிப்பொருளில் ஷPரால் லக்திலகவின் தலைமையில் அரசியல் கட்சிகளின் […]
திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசப்

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசப் (Sabina Yusuf) என்ற பெண் பங்குபற்றவுள்ளார். இப்போட்டியில் பங்குபற்றுவதற்காக சபீனா யூசப் என்ற பெண் நேற்று புதன்கிழமை (21) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி பயணமானார். 41வது திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ஜனவரி 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் உலகில் […]
பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றவர் கைது!
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். பெம்முல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான மோட்டார் சைக்கிள் செலுத்துனர் நேற்று காலை 10.50 மணியளவில் போக்குவரத்து பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். […]
கிளிநொச்சி – பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலையின் நிர்மாணப் பணிகள் நேற்று புதன்கிழமை (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் ஹந்துன்நெத்தி தலைமையில், பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஹந்துன்நெத்தி, பரந்தன் இரசாயன நிறுவனத்தை மீளச் செயல்படுத்துவது நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும், உள்நாட்டு உற்பத்தி வலுப்படுத்தலுக்கும் முக்கிய பங்காற்றும் எனக் […]
வடமராட்சி கிழக்கில் குடத்தனையில் விபத்து

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் குடத்தனை பகுதியில் இன்று வியாழக்கிழமை (22) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும் சக உத்தியோகஸ்தரும் , மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளின் வேலைநிறுத்த போராட்டம் முடிந்தது!
அரச வைத்திய அதிகாரிகள் சங்க்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று வியாழக்கிழமை (22) முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நிதி மற்றும் நிர்வாக முறைகேடு சம்பவங்கள் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளரை அவரது பதவியில் இருந்து நீக்க கோரியும், அந்தப் பதவிக்கு வேறொரு பணிப்பாளரை நியமிக்க வேண்டும் எனவும் கோரி அவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை […]
நாமல் தலைமையிலான குழு இந்தியா நோக்கி பயணம்!

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்காக பாராளுடன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குழு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனவரி 26ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழாவை கொண்டாடுவதற்காக இந்த குழு இந்தியா நோக்கி பயணம் மேற்கொள்ளவுள்ளது. நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இந்த குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்ரல் பெர்னாண்டோ, சமிந்தினி கிரியெல்ல, […]
இலங்கைக்கு தென்கிழக்கில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக நாளை 23.01.2026 முதல் எதிர்வரும் 27.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா செய்தி வெளியிட்டுள்ளார். அதேவேளை இன்றும் பிற்பகலுக்கு பின்னர் கிழக்கு […]