மாஞ்சோலை வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பான விசாரணை

முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவை அலுவலகத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27 \ 2இன் கீழ் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதனால் ஜனவரி 9 ஆம் திகதி சுகாதார […]

யாழில் வடக்கு முதலீட்டு மாநாடு 2026

வட பிராந்தியத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை உலகிற்கு திறக்கும் நோக்கில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு முதலீட்டு உச்சி மாநாடு சிறப்பாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வு, ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவ கலாச்சார மையத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மிக பிரமாண்டமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர்,அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், […]

திருமலை புத்தர் சிலை விவகாரம்; உத்தரவை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான கட்டளை இம்மாதம் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) அறிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய இருவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் […]

அரசியலமைப்பு பேரவையில் இருந்து ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் – தயாசிறி

அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறுபான்மை கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஶ்ரீதரன் அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கின்றார். எனினும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் அரசியலமைப்பு பேரவையில் அவர் கைகளை […]

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து உலப்பனே தேரர் வௌியேறினார்

தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாட கற்றல் தொகுதிகள் (Modules) தொடர்பான சர்ச்சை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (22) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான கல்வித் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர், விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தேரர், பிள்ளைகளின் எதிர்காலத்தை அழிப்பதற்காக ஒரு திட்டமிட்ட சதி இடம்பெற்றுள்ளதாகக் […]

இலங்கைக்கு 100 நவீன மின்சார பேருந்துகள்

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் மாசடைவைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வழங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு பேருந்தின் விலை சுமார் 2,25,000 அமெரிக்க டொலர்கள் எனத் தூதுவர் மேலும் தெரிவித்தார். மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல […]

அரச வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு

நாளை (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமையினாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் என்பன […]

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வேலணையில் கண்காணிப்பு கமராக்கள்

வேலணை நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் அசோக்குமாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் கலசார சீரழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வேலணை பிரதேசசபையின் மாதாந்த அமர்வின் போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வேலணை பிரதேசத்தில் சமூகவிரோத செயற்பாடுகளும், சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்து வருவதாக பலதரப்பட்டவர்களிடமிருந்தும் சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில் அதற்கான நடவடிக்கையை எடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு முயற்சி?

பிரஜாசக்தி எனும் நிகழ்ச்சி நிரலூடாக உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு முயற்சி நடப்பதாக வலி வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் குற்றம் சாட்டியுள்ளார். வலி வடக்கு பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்ட மயிலிட்டி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதத்திற்கான பரிசளிப்பு நிகழ்வில் நேற்று(21.01.2026) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட நான்கு உப அலுவலகங்களுக்கும் ஒவ்வொரு நூலகங்கள் […]

வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

ம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தினமும் சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு விதி மீறிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று (21.01.2026) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட வாராந்த வர்த்தக நிலையப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது 3 உணவகங்கள் மற்றும் 5 பலசரக்குக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டன. இந்த நிலையில் பொதுச் சுகாதார நடைமுறைகளை முறையாகப் பேணாத 3 நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றில் B […]