மக்களின் காணிகளை வழங்குங்கள் விகாரைக்குரிய காணியில் தையிட்டி விகாரையை கட்டித்தர நாம் தயார்!

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (20) ஊடக சந்திப்பை மேற்கொண்ட அவர் மேலும் கூறுகையில், தையிட்டி விகாரையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அது அமைக்கப்பட்ட விடையம் குறித்தே மக்கள் போராடுகின்றனர். இதே நேரம் கடந்த அரசுகள் போன்று அனுர […]
ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய’’குஷ்’’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய “குஷ்” போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் உணவு விற்பனையில் ஈடுபட்டு வந்த மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது. அவர் போதைப்பொருள் தொகையை மலேசியாவில் எடுத்து சிங்கப்பூருக்கு சென்று, அங்கிருந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-468 மூலம் கட்டுநாயக்க […]
அரச கட்டிடங்களில் சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகள்!

சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளைப் பயன்பாட்டில் இல்லாத அரச கட்டிடங்களில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாட்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களினால் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சகல சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன என்றார் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) அன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. சமிந்திராணி கிரியெல்ல எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், […]
கினிகத்தேனையில் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; மூன்று சிறுவர்கள் கைது
கினிகத்தேனை பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி, கினிகத்தேன – கோணவல பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், அவரை சந்திக்கச் சென்ற சந்தர்ப்பங்களில் அவர் தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு காதலனும் அவரது நண்பர்களும் இணைந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸ் […]
புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்தால் ஒத்துழைப்பு

தற்போது அமுல்படுத்தியுள்ள கொள்கைத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து, புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தினால் .அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க நாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் […]
தோட்டத் தொழிலாளர்களுக்கு 6 மாதங்களுக்கு ஊக்குவிப்பு: அதன்பின்னர் வங்கியில் வைப்பு

தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான 2026 வரவு-செலவு திட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான முறைமை. பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை வழங்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபாய் 1,550/-வரை அதிகரித்தல் மற்றும் வருகைக்கான நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக அவர்களுக்கு ரூபா 200/- வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2026 வரவுசெலவு திட்டத்தில் முன்மொழிந்துள்ளார். அதற்கமைய, குறித்த முன்மொழிவை அமுல்படுத்துவதற்காக 5,000 மில்லியன் ரூபாய் […]
மண்முனைப்பற்று காணி விவகாரம் ; நீதிமன்றம் இனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது!

மண்முனைப்பற்று காணி விவகாரம் தொடர்பில் நீதி மன்ற நடவடிக்கை எடுக்கும்போது இன அடிப்படையைக் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினையில், அங்கிருக்கின்ற அரச காணிகளில் வசிக்கின்ற தமிழ் மக்களுக்கு எந்தவொரு வழக்கும் தொடுக்கப்படவில்லை. ஆனால் அங்கு வாழ்கின்ற முஸ்லிம் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. எஎ ஹிஸ்புல்லா .எம் பி.யின் குற்றச்சாட்டினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) […]
யாழ்ப்பாண கல்விச் சமூகம் கல்வி மறுசீரமைப்புக்கு ஆதரவு!
பிரதமர் ஹரிணி அமரசூரிய மீதான விமர்சன தாக்குதல்களைக் கண்டிக்கும் அதேவேளை அவரினால் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி மறுசீரமைப்பு முயற்சிகளை முழுமையா ஆதரிப்பதாக யாழ்ப்பாண கல்விச் சமூகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலாநிதிகள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், மருத்துவ நிபுணர்கள். பொறியியலாளர்கள் வங்கியலாளர்கள், பொருளியலாளர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் என 55 க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டுள்ள அந்த அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி. ஹரிணி அமரசூரியவை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படும் அருவருப்பான, பெண் […]
நாட்டில் விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மாதாந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை 1,42000 லிருந்து 2,00,000 ஆகவும் அதிகரித்துள்ளதென சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) இடம் பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், சுமார் 1.9 மில்லியன் […]