கடற்படை நடவடிக்கை; சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 மீனவர்கள் கைது!
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 23 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் ஜனவரி 14 முதல் 19 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 மீனவர்கள் , ஐந்து டிங்கி படகுகள் மற்றும் ஒரு இழுவைப் படகு ஆகியவற்றுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருகோணமலையில் உள்ள ஜெயநகர், தக்வநகர், காலி […]
தித்வா புயல்; புதைந்த வாகனங்களை மீட்டெடுக்க முடியாத நிலை!

நாட்டில் ஏற்பட்ட தித்வா புயல் காரணமாக நுவரெலியா மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டது. இதில் வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மொத்தமாக நான்கு வாகனங்கள் புதைந்தன அவற்றில் சில வாகனங்களை இன்றுவரை மீட்டெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றன. இதே மண்சரிவில் புதையுண்டு எட்டு பேர் உயிரிழந்தனர் இவர்களின் உடல்களை நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் சில நாட்களுக்குப் பிறகே மீட்கப்பட்டன காரணம் மீட்பு பணியின் போது இடையூறு ஏற்படும் வகையில், அடிக்கடி […]
கல்லூண்டாயில் பற்றி எரிந்த குப்பை மேடு

கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடானது தீப்பற்றி எரிந்துள்ளது. வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ். மாநகர சபையின் குப்பை மேடே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. இது குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் அந்த பகுதிக்கு சென்று நிலைமையை பார்வையிட்டுள்ளனர். பின்னர் விரைந்து செயற்பட்டு யாழ். மாநகர சபைக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த யாழ். மாநகர சபையின் தண்ணீர் வாகனம் […]
கனடாவில் வாகன சோதனைகள் இனப் பாகுபாட்டிற்கு வழிவகுக்கின்றன!; வழக்கு விசாரணை

எந்தவொரு காரணமும் இன்றி போலீஸார் வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்யும் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மிக முக்கியமான வழக்கை கனடா உச்ச நீதிமன்றம் நேற்று விசாரிக்கத் தொடங்கியது. இந்தச் சோதனைகள் இனப் பாகுபாட்டிற்கு (Racial Profiling) வழிவகுப்பதாகக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மொண்ட்ரியலைச் சேர்ந்த ஜோசப்-கிறிஸ்டோபர் லுவாம்பா என்ற கறுப்பின இளைஞர் இந்த வழக்கைத் தொடர்ந்தார். எந்தக் குற்றமும் செய்யாத நிலையிலும், 18 மாதங்களில் சுமார் 10 முறை போலீஸார் தன்னை வழிமறித்துச் சோதனை செய்ததாக […]
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் கார்னி

சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மார்க் கார்னி நேற்று அந்த நகரைச் சென்றடைந்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், கனடாவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதே மார்க் கார்னியின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். முன்னாள் வங்கியியல் விற்பன்னரான மார்க் கார்னி, உலகப் புகழ்பெற்ற தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டவர் ஆவார். அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, கனடாவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் […]
பிரித்தானியாவில் தைப்பொங்கல் விழா

பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், டவுனிங் ஸ்ட்ரீட் எண் 10-ல் சிறப்பு தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை (16 ஜனவரி 2026) இடம்பெற்றுள்ளது. அமைச்சர் ஸ்டீவ் ரீட் மற்றும் பிரித்தானியாவின் முதல் தமிழ் வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை நடத்தியுள்ளனர். தொழிற்கட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதற்குப் பின்னர், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டவுனிங் ஸ்ட்ரீட்டில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், […]
வானிலை மாற்றம்
நாடு முழுவதிலும் நிலவுகின்ற வறட்சியான வானிலை நாளை மறுதினம் முதல் அதாவது 23 ம் திகதி முதல் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். நாட்டை […]
சிறையில் வாடும் எங்கள் உறவுகளை விடுவித்து அவர்கள் குடும்பங்களை ஆற்றுப்படுத்துங்கள் ; துரைராசா ரவிகரன்

தமிழ் மக்களின் காணிகளை தொடர்ச்சியான கையகப்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து விட்டு, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை வழங்குவது எந்தளவுக்கு நியாயமாகும். எங்கள் விளைநிலங்களை,தோட்டங்களைத் தாருங்கள். தரையிலும் கடலிலும் எங்களைத் தொழில் புரிய வகை செய்யுங்கள், காணாமல் ஆக்கப்பட்ட – சிறையில் வாடும் எங்கள் உறவுகளை விடுவித்து அவர்கள் குடும்பங்களை ஆற்றுப்படுத்துங்கள். அதுவே உண்மையான ஆறுதல் நலன்புரித் திட்டம் என .இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை […]
பருத்தித்துறை இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைபொருட்கள் விற்பனைக்கு தடை

பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் உள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று (20) காலை நடைபெற்றபோதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கனரக வாகனங்கள் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் காலை 6:45 மணி முதல் 8 மணி வரையும், பாடசாலை முடிவடையும் நேரத்தில் பகல் […]
கிரீன்லாந்து தீவை வாங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை – ட்ரம்ப்

கிரீன்லாந்து தீவை (Greenland) வாங்கும் தனது திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், கிரீன்லாந்து தீவை அமெரிக்கா வசப்படுத்துவது “தேசிய மற்றும் உலகப் பாதுகாப்பிற்கு மிக அவசியம்” என்று கூறியுள்ளார். இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகள் மீது புதிய வர்த்தக வரிகளை (Tariffs)விதிக்கப்போவதாக அவர் எச்சரித்துள்ளார். “இதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” […]