பிரெஞ்சு மொழி பேசும் குடியேற்ற இலக்கை கனடா எட்டியது!

க்யூபெக்கிற்கு வெளியே வாழும் பிரெஞ்சு மொழி பேசும் மற்றும் அகேடியன் சிறுபான்மை சமூகங்கள், கனடாவின் பொருளாதாரம், பண்பாடு மற்றும் பிரெஞ்சு மொழியின் உயிர்ச்செழிப்பிற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. தொழிலாளர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பிரெஞ்சு மொழி பேசும் குடியேற்றம் அத்தியாவசியமானதாகத் தொடர்கிறது. இன்று, குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் மதிப்பிற்குரிய லீனா மெட்லெஜ் டியாப், தொடர்ந்து நான்காவது ஆண்டாக, 2025 ஆம் ஆண்டிற்கான கனடா அரசின் பிரெஞ்சு […]

தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர், மு.கா தலைவருடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், “இசைமுரசு” நாகூர் ஈ. எம். ஹனிபா நூற்றாண்டு மலரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி உரையாடினார். இதன்போது இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம் தலைவர் இம்ரான் நெய்னார் கலந்துக்கொண்டுள்ளார்.

கனடாவில் பொருளாதாரச் சிக்கல் தொடர்கிறது!

கனடாவில் அதிகரித்துக்கொண்டு போகும் விலைகள் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக மோதலால் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற நிலை காரணமாக நுகர்வோர் இன்னும் பதற்றமடைந்தே உள்ளனர் என்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட கனடா வங்கி ஆய்வு தெரிவிக்கிறது. மத்திய வங்கியின் காலாண்டு நுகர்வோர் எதிர்பார்ப்புகள் ஆய்வு (Survey of Consumer Expectations) பங்கேற்பாளர்கள், கடன் தவணைகளைச் செலுத்தத் தவற வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், வேலை இழக்கும் அபாயம் உயர்ந்துள்ளதாகவும் உணர்ந்துள்ளனர். சுங்கக் கட்டணங்கள் (tariffs) முக்கிய காரணமாக இருப்பதாகக் குறிப்பிடுவதுடன், குறுகிய காலத்தில் […]

வீட்டுப் பணியாளராக இத்தாலி சென்ற இலங்கை பெண்ணால் முதியவர் ஒருவர் கொலை!

இத்தாலிக்கு வீட்டு பணியாளரான சென்ற இலங்கை பெண் ஒருவர் கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரோம் நகரில் வீடொன்றில் முதியவரை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதான பெண்ணே முதியரை கொலை செய்துள்ளார். பணிப் பெண்ணிடம் கோப்பி கேட்டதற்காக, முதியவரை மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். உயிரிழந்தவர் 94 வயதான நிக்கோலோ கரோனியா எனும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஆவார். உயிரிழந்தவர் இத்தாலிய பொலிஸ் துறையில் மிக நீண்ட காலம் […]

ஜப்பானில் எரிமலை அருகே சுற்றுலா பயணிகள் சென்ற ஹெலிகொப்டர் மாயம்

ஜப்பானின் கியூஷு தீவில் அமைந்துள்ள மௌண்ட் அசோ (Mount Aso) எரிமலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10:52 மணியளவில் ‘அசோ கடலி டொமினியன்’ (Aso Cuddly Dominion) உயிரியல் பூங்காவிலிருந்து 10 நிமிடச் சுற்றுப்பயணத்திற்காக இந்த ஹெலிகொப்டர் புறப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணியளவில், மௌண்ட் அசோவின் ஐந்து சிகரங்களில் ஒன்றான நகடேக் (Nakadake) எரிமலைப் […]

வலுவான அரசாங்கத்தை வழங்க யாரால் முடியும் என்பதை நியூசிலாந்து மக்கள் தீர்மானிக்க வேண்டும் – பிரதமர் கிறிஸ்தோபர் லக்சன்

“இந்த நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற உலகில், ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தை வழங்க யாரால் முடியும் என்பதை நியூசிலாந்து மக்கள் தீர்மானிக்க வேண்டும்” என புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கிறிஸ்தோபர் லக்சன் தெரிவித்துள்ளார் . ஜெசிந்தா ஆர்டெர்னுக்குப் பின்னர் நியூசிலாந்தின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் விமான நிறுவன நிர்வாகியான லக்சன் அரசியலில் மிகக் குறுகிய காலத்தில் உச்சத்தை அடைந்தவர். 2020 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகவும், அதன்பின்னர் ஒரு ஆண்டு கழித்து தேசியக் […]

முழு அமைச்சரவையும் எதிர்காலத்தில் சிறைச் செல்ல நேரிடும்!

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பில் வலுசக்தி அமைச்சருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முழு அமைச்சரவையும் எதிர்காலத்தில் சிறைச் செல்ல நேரிடும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சானக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் […]

ஆளுக்காள் மாறுபட்ட நியாயத்தையே அரசாங்கம் பின்பற்றுகிறது – நாமல் ராஜபக்ச

ராஜபக்ச அரசியலில் அல்லது பொதுஜன பெறமுன கட்சியில் இனவாதம் இல்லை என நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (20.01.2026) ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் உண்மையான பிரச்சினைகளுக்காக முன்னிலை கொடுத்து செயற்பட்டோம்.அந்த பிரச்சினை யாருக்கு என்று தேர்ந்தெடுக்காமல் மும்மதத்தினர் சார்பாகவும் செயற்பட்டோம். வடக்கில் யுத்தம் நடக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கொண்டு செல்லப்பட்ட மடுமாதாவின் உருச்சிலையை மீட்டு மீண்டும் மடுமாதாவின் திருவிழா நடைபெற […]

டொனால்ட் ட்ரம்பின் பிரான்ஸ் நாட்டுக்கும் பகிரங்க எச்சரிக்கை

காசா அமைதி வாரியத்தில் சேருவதற்கான டொனால்ட் ட்ரம்பின் அழைப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் மறுத்தால், 200% வரி விதிப்பேன் என டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார். பிரான்ஸ் தயாரிப்பு மதுபானங்கள் மீது 200% வரி விதித்தால், ஜனாதிபதி மேக்ரான் வாரியத்தில் சேர்ந்துவிடுவார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் முயற்சியால் காசா (ஹமாஸ்)- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. முதல் […]

ஹோட்டல் உரிமையாளர் கொலையுடன் தொடர்புடையவர் தேடப்படுகின்றார்!

தெஹிவளை – கடலோர வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் 2026.01.09 அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கைதுசெய்ய கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளர்கள் குறிப்பிட்ட அங்க அடையாளங்களை கொண்டு AI தொழினுட்பத்தின் உதவியுடன் துப்பாக்கிதாரியின் புகைப்படம் வடிவமைக்கப்பட்டு பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் […]