இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த 4 மீனவர்களும், சீர்காழியைச் சேர்ந்த 3 மீனவர்களும் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். இவர்கள் 7 பேரும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மீனவர்களையும், அவர்களின் […]

திமுக ஊழல் ஆட்சியை அகற்ற இணைந்துள்ளோம்!

திமுக ஊழல் ஆட்சியை அகற்ற கூட்டணியில் ஒன்றாக இணைந்திருப்பதாக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளனர். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது. இன்று காலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பியூஷ் கோயல், “என்டிஏ குடும்பத்துக்கு மீண்டும் வர […]

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் கையொப்பம்

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தில் நேற்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலம் 2025.12.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026.01.07 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலம், 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க முதன்மைச் சட்டத்தை திருத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதுடன், கரைகடந்த வங்கித்தொழில் மற்றும் வரி தொடர்பான ஒழுங்குபடுத்தலையும் […]

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, நிட்டம்புவ – அரலிய ஒழுங்கை, பின்னகொல்லவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்போது, 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை முச்சக்கர வண்டி ஒன்றில் கடத்திச் சென்றுகொண்டிருந்த போதே குறித்த நபர் கைது […]

இளைஞரை தற்கொலைக்குத் தூண்டியதாக கேரள பெண் மீது வழக்கு

பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவரை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய பெண் ஒருவருக்கு எதிராக, அந்த இளைஞரின் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கேரளா பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பேருந்து பயணத்தின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, அங்கிருந்த பெண் ஒருவர் அவரை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த காணொளி இணையத்தில் மிக வேகமாகப் பரவியதுடன், அந்த இளைஞர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. […]

கணக்காளர் ஒருவர் களு கங்கையில் குதித்திருக்கலாம்?

களுத்துறை பாலத்திலிருந்து கணக்காளர் ஒருவர் களு கங்கையில் குதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கடற்படை நீச்சல் வீரர்கள் மற்றும் உயிர்காப்புப் பிரிவினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தத் தேடுதல் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை வடக்கு பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய கணக்காளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், அவரது கைப்பேசி பாலத்தின் மீது இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் […]

வவுனியாவில் வடமாகாண அச்சுப்பொறியலாளர் சங்கத்தின் மூலோபாய வலையமைப்பு மன்றம்

இலங்கை அச்சுப்பொறியாளர்கள் சங்கம் (SLAP) வவுனியா மாவட்ட அச்சுப்பொறி உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து வவுனியாவில் ஒரு மூலோபாய வலையமைப்பு மன்றத்தை 2025 ஜனவரி 18, அன்று வெற்றிகரமாக நடத்தியது. நாடு முழுவதும் அச்சிடும் துறையை வலுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் SLAP-ன் நோக்கத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக இது அமைந்திருந்தது. தேசிய மற்றும் பிராந்திய அச்சுப்பொறிகளுக்கு இடையே வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குதல், SLAP உறுப்பினர்களை ஊக்குவித்தல் மற்றும் பிராந்திய அச்சு நிறுவனங்கள் தேசிய அச்சிடும் சுற்றுச்சூழல் அமைப்பில் தீவிரமாக […]

கிழக்கு மாகாண ஆளுநர் காலாட் படைப் பிரிவு தளபதிக்கிடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், 22வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ள்யூ.பி.எம்.கே.ஜி.கே. வீரசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது நேற்று(20.1.2026) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. 22ஆவது காலாட் படைப் பிரிவின் 34ஆவது தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் டப்ள்யூ.பி.எம்.கே.ஜி.கே. வீரசேகர, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள அந்தப் படைப் பிரிவு தலைமையகத்தில் தமது பதவியின் கடமைகளை […]

பிரதமர் ஹரிணி ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடல்

ஐரோப்பிய ஒன்றிய சர்வதேச ஒத்துழைப்பு ஆணையர் ஜோசப் சிகேலாவுடன் (Jozef Síkela) இருதரப்பு கலந்துரையாடல்களில் இணைந்த பிரதமர் ஹரிணி, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் கூட்டாண்மையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து கவனம் செலுத்தினார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் 56 ஆவது வருடாந்த கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரதமர் ர் ஹரிணி அமரசூரிய, உலக பொருளாதார மன்றத்தின் உயர் மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். WEF […]

வடக்கு ஒன்டாரியோவில் 19 பேருக்கு பராசிட் தொற்று

வடக்கு ஒன்டாரியோவில் உள்ள கஷெச்சுவான் (Kashechewan) முதல் நாட்டு சமூகத்தைச் சேர்ந்த 19 பேருக்கு கிரிப்டோஸ்போரிடியம் (Cryptosporidium) என்ற பராசிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கஷெச்சுவான் முதல் நாட்டு சமூக அதிகாரிகள், அந்த சமூகத்தைச் சேர்ந்த 19 பேர் கிரிப்டோஸ்போரிடியம் எனப்படும் பராசிட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பராசிட் குடல்சார் அறிகுறிகளை—முக்கியமாக வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்றவற்றை—உண்டாக்குகிறது. போதுமான ஓய்வு மற்றும் நீர்சத்து வழங்கப்பட்டால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தொற்று தானாகவே குணமடைகிறது. எனினும், நோய் […]