கேரள பேருந்தில் ஒருவர் அத்துமீறியதாக விடியோ வெளியிட்ட பெண் கைது

கேரளத்தில் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் விடியோ பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் வடக்கரை பகுதியைச் சேர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா (வயது 35) என்ற பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு விடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், பேருந்து பயணத்தின் போது ஒருவர் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், சமூக ஊடகத்தில் பரவிய விடியோவில் தன் மீதான குற்றச்சாட்டை கண்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் […]

விக்ரம் – 63 திரைப்படத்தின் படப்பிடிப்பு

விக்ரம் – 63 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் வீர தீர சூரன் – 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் அப்படம் துவங்கவில்லை. தொடர்ந்து, அறிமுக இயக்குநர் பொடி கே. ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் தன் 63-வது படத்தில் நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் […]

வசூல் சாதனை செய்யுமா மங்காத்தா?

மங்காத்தா திரைப்படம் மறுவெளியீட்டில் வசூல் சாதனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் குமார், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மங்காத்தா”. அஜித்தின் 50-வது படமான இது அன்றே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அஜித்தின் முதல் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது, இப்படத்தை நாளை மறுநாள் (ஜன. 23) மறுவெளியீடு செய்யவுள்ளனர். ஆன்லைன் முன்பதிவு வாயிலாகவே […]

சிலம்பரசனின் புதிய படம்?

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதையுடன் தொடர்புடைய கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. அடுத்ததாக, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இதனை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் குறைந்துள்ளது

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் (NBRO) எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவி வரும் வரட்சியுடனான காலநிலையால் வளியின் தரம் குறைந்துள்ளது. இன்றையதினம் காலை நிலவரப்படி, பின்வரும் பகுதிகளில் வளியின் தரச் சுட்டெண் (AQI) ஆரோக்கியமற்ற (Unhealthy) நிலையை எட்டியுள்ளது:ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை, பொலன்னறுவை, அநுராதபுரம், வவுனியா, புத்தளம் மற்றும் காலி ஆகிய இடங்களில் வளியின் தரம் குறைந்துள்ளதால், பொதுமக்களுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிட […]

ஐந்து தொழிலாளர்களுக்கு குளவி கொட்டு

ஐந்து ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம்  இன்று புதன்கிழமை  இடம் பெற்றுள்ளது மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்ட பு ப்ரௌன்லோ பிரிவில் பணி புரிந்து கொண்டு இருந்த வேளையில் அதிக உஷ்ணம் காரணமாக குளவி கூடு கலைந்து கொட்டியதில் ஆண் தொழிலாளர்கள் ஐவர் மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் எம்.சிசி குமார் (வயது 31) வீ.நந்தராஜ் […]

நாட்டின் ஆட்சியாளர்கள் விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம் – ரணில் எச்சரிக்கை

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். காலி பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய விகாரைகளுக்குச் சொந்தமானவை விகாரைகளுக்கும், […]

மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியத் திட்டம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. மீனவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்தின் பேரில் ஓய்வூதியத் திட்டங்களைத் தெரிவு செய்ய முடிவது இதன் விசேட அம்சமாகும். இதற்கமைய, புதிய கடற்றொழில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பின்னர் மாதாந்தம் ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 15,000, ரூ. 20,000, ரூ. 25,000 அல்லது […]

இலங்கை அணி அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 22, 24 மற்றும் 27 ஆகிய திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட […]

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி!

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய பேட்டர் விராட் கோலி முதலிடத்தை இழந்துள்ளார். முதலிடத்தை, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2 – 1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் […]