இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் நேற்று (20) சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போட்டி அட்டவணையை தொடர சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் எனவும் பங்ளாதேஷ் அணியின் போட்டிகள் திட்டமிட்டவாறு இந்தியாவில் நடைபெறும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை புதன்கிழமை (21) மாலை உறுதிப்படுத்தியது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியதைத் தொடர்ந்து, எதிர்கால வழிமுறை குறித்து கலந்தாலோசிக்க கூட்டப்பட்ட ஐசிசி பணிப்பாளர்கள் சபை கூட்டத்திற்குப் பிறகு வீடியோ-கலந்துரையாடல் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதென ஐசிசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் […]
மத்திய ஆபிரிக்கக் குடியரசில் அமைதிக்காக்கும் பணிகளுக்காக சென்ற இலங்கை விமானப்படை வீரர்கள்

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக, இலங்கை விமானப்படையின் 11வது படைப்பிரிவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இன்று (21) காலை அந்தக்குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த குழுவிற்கு கட்டளை அதிகாரியாக குரூப் கெப்டன் ஆசிரி பத்திரகே செயற்படுகின்றார். அதில் இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து விமானப்படை வீராங்கனைகள் உட்பட மொத்தம் 110 விமானப்படை உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அமைதிக்காக்கும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த […]
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நியாயமானதல்ல
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நியாயமானது அல்ல என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (21) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவியிலிருந்து நீக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடையும் வரை இவ்வாறானதொரு முடிவை அமைச்சு […]
விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழா

கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரை, விசேட ஞாபகார்த்த உறை, தபால் அட்டைகள் வெளியீடு 2026 மார்ச் 24ம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரையுடன் கூடிய விசேட ஞாபகார்த்த உறை மற்றும் இரண்டு விசேட தபால் அட்டைகளை பழைய மாணவர் சங்கம் ஊடாக வெளியிட 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற முன்னாள் […]
சுறா தாக்கிய நான்கு சம்பவங்கள்; கடற்கரைகளை மூடிய அவுஸ்திரேலியா

கடந்த இரண்டு நாள்களில் சுறா தாக்கிய நான்கு சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள ஏராளமான கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.கனத்த மழை காரணமாக கடல் நீர் மங்கலானது என்றும் அது சுறாக்களை ஈர்த்திருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறினர். சிட்னியிலில் (Sydney) ஆடவர் ஒருவர் கடலில் அலையாடியபோது சுறா அவரைத் தாக்கியது. அதையடுத்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் வடக்கே உள்ள மேக்வாரி துறைமுகத்தைச் (Port Macquarie) சுற்றியுள்ள கடற்கரைகள் மூடப்பட்டன. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் […]
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை – நாமல் ராஜபக்ஷ
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை. கதிர்காமத்துக்கு செல்வதற்கு தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. வடக்குக்கு சென்று ஜனாதிபதி இனவாதம் பேசக்கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற தித்வா புயலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, புதிய கல்விக் கொள்கைக்கு […]
சாங்கி விமான நிலையத்தில் பெட்டிகளை எடுத்துச் செல்ல ஓட்டுநர் இல்லா வாகனங்கள்

சாங்கி விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் தானியக்க வாகனங்கள் அறிமுகமாகியுள்ளன.ஆளின்றி இயங்கும் வாகனங்களைக் களமிறக்குவது இதுவே முதல் முறை. சிங்கபூர் பிரதியமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) வாகனங்களை அறிமுகம் செய்தார். மூப்படையும் ஊழியரணியின் சுமையைக் குறைக்கப் புதிய முயற்சி உதவும் என்றார் அவர். மோசமான வானிலை காரணமாகச் சேவைத் தடங்கல் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கவும் வாகனங்கள் கைகொடுக்கலாம் என்றார் வாகனங்களின் சோதனை ஓராண்டுக்கு நடந்தது; 5,000க்கும் அதிகமான சோதனைப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.வாகனங்களில் கேமராக்களும் […]
காஸா அமைதி வாரியத்தில் இணைந்தார் நெதன்யாகு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று காஸா அமைதி வாரியத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இணைந்துள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் முழுவதுமாகச் சேதமடைந்துள்ள காஸா நகரத்தின் மறுசீரமைப்பிற்கும், அங்குள்ள பாலஸ்தீனர்களின் மறுவாழ்விற்கும் தேவையான நடவடிக்கைகள் அமெரிக்க அரசின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, காஸா நகரத்தை நிர்வாகம் செய்வதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இடம்பெறும் அமைதி வாரியத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகின்றார். அந்த வாரியத்தில் […]
டித்வாவினால் உயிரிழந்தோரில் பலருக்கு மரணச் சான்றிதழ்
‘டித்வா’ புயலினால் உயிரிழந்த 525 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். மேலும் சில சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.