நிதி மோசடிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள ஊழியர்களை மிகவும் சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று (19) காலை கொட்டாவை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது மோசடிகள் குறித்து ரத்மலானை, கல்கிசை, மகரகம, திஸ்ஸமஹாராம உள்ளிட்ட நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சந்தேகநபர் பல்வேறு வர்த்தக நிலையங்களுக்குச் […]
பங்களாதேஷின் நிலைப்பாடு குறித்து ஐசிசி காலக்கெடு

இந்தியாவுக்கு சென்று ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க பங்களாதேஷுக்கு ஜனவரி 21வரை (நாளைமறுதினம்) ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது. டாக்காவில் கடந்த சனிக்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷுக்கு ஐசிசி இந்த காலக்கெடுவை விதித்தது என அறியக்கிடைத்ததாக கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது. ஐசிசிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையில் ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது, தனது ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளை விளையாடத் தயார் எனவும் […]
மன்னர் சார்ல்ஸ் அமெரிக்க பயணத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை!

கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தல் கருத்துகளைத் தொடர்ந்து, பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் அரசுமுறைப் பயணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுவரை அந்தப் பயணம் குறித்து எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும், லிபரல் டெமோக்ராட் கட்சித் தலைவர் எட் டேவி, ட்ரம்ப் தொடர்ந்து கிரீன்லாந்தை மிரட்டும் நிலை நீடித்தால், ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணம் நடத்தப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், மன்னராட்சியை […]
நாடுதழுவிய ரீதியில் வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை?

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட அனைத்து வைத்தியர்களும் ஒன்றிணைந்து நாடு தழுவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை கட்டமைப்பினுள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி, ஒரு சில நடவடிக்கைகளிலிருந்து வைத்தியர்கள் விலகியிருக்கும் தொழிற்சங்கப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், இதன் இரண்டாம் கட்டமாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அரசாங்கம் உணரும் வகையில் […]
மாணிக்க கல் சட்டவிரோத அகழ்வு தொடர்பில் புதிய நடவடிக்கைகள்

மாணிக்கக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்குத் தேவையான மூல மாணிக்கக்கற்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் வரி நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது. இத்துறை சார்ந்தவர்களுக்குச் சலுகைகளை வழங்குவதையும்,மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டும் இலக்கை அடைவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபையின் தலைவர் எஸ்.பி. சமிந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து […]
செம்மணி மனித புதைகுழிக்குள் வெள்ளம்; வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் , அவற்றினை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்வரும் , 09ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக […]
இ.போ.ச பேருந்து விபத்து வழக்கு: சாரதிக்கு ஒரு ஆண்டு கடூழியச் சிறை

ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்தை குறுகிய வீதியில் கவனயீனமாக செலுத்தி நபரொருவரின் மரணத்திற்கு காரணமான வழக்கில், கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து சாரதியொருவருக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ரூ.15,000 அபராதமும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நஷ்டஈடும் செலுத்துமாறு கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குறித்த சாரதியின் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
யாழில் ஜனாதிபதி ஆற்றிய உரை; இனங்களுக்கிடையே மோதலைத் தூண்டுவதாக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் ஆற்றிய உரை, இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக நேற்றைய தினம் (19) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமய’ அமைப்பின் இளைஞர் விவகார செயலாளர் குமார ராஜரத்ன உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரே இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர். ஜனாதிபதியின் கருத்துக்கள் நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இது தொடர்பில் உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். […]
வடமராட்சியில் எலிக்காய்ச்சலால் குடும்பஸ்தர் பலி!

யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (19) உயிரிழந்துள்ளார். வடமராட்சி அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் அஜந்தன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை (19) அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் […]