மாற்றாற்றல் கொண்ட இளைஞர் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்

மாற்றாற்றல் கொண்ட இளைஞர் ஒருவர் சக்கர நாற்காலி ஊடாக இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். நாட்டின் சுதந்திர தினத்தையொட்டியும்,சில கோரிக்கைகளை முன்வைத்தும் குறித்த இளைஞன் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். வவுனியா- சூடுவந்தகுளம் பகுதியை சேர்ந்த வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி என்பவரே இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டும் ,இலங்கை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட […]
காற்றின் தரத்தில் வீழ்ச்சி: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப்பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் (18) முதல், நாட்டில் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் காற்று தரத்தின் சரிவு 150 முதல் 200 வரை உள்ளது. இது ஓரளவு சாதகமற்ற சூழ்நிலை என்றும், அடுத்த 02 நாட்களுக்குள் இந்த நிலைமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவு்ம் அவர் மேலும் கூறியுள்ளார். […]
கியூபெக் நகராட்சி விவகாரங்கள் துறை அமைச்சர் அரசியலில் இருந்து விலக முடிவு!

கியூபெக் மாகாண அரசியலின் முக்கியஸ்தரும், நகராட்சி விவகாரங்கள் துறை அமைச்சருமான ஜெனிவீவ் கில்போல்ட் (Geneviève Guilbault), தாம் அரசியலில் இருந்து முழுமையாக விலகப்போவதாக அறிவித்துள்ளார். தனது இரண்டு குழந்தைகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்தார். கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோல்ட் சில நாட்களுக்கு முன்புதான் தனது ராஜினாமாவை அறிவித்தார். இவர் கடந்த 2022 முதல் 2025 வரை கியூபெக்கின் துணை முதல்வராகவும், […]
அரச பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வீழ்ச்சி – கியூபெக் நகர கணக்கெடுப்பு!

கியூபெக் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சில மாவட்டங்களில் மாணவர்களின் விடுப்பு விகிதம் 400 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2018-19 கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில், 2024-25 கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருக்கும் நாட்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. கியூபெக் நகரத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களின் விடுமுறைகளானவை, 446 சதவீதம் அதிகரித்துள்ளது. மொன்றியல் நகரத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ‘காரணம் […]
கிராமப்புற ஒன்டாரியோ நகராட்சி சங்க மாநாடு

கிராமப்புற ஒன்டாரியோ நகராட்சி சங்க (Rural Ontario Municipal Association) மாநாட்டில், கிராமப்புற ஒன்டாரியோவில் வேலைவாய்ப்புகளையும் சமூகங்களையும் பாதுகாப்பதற்கான எங்கள் அரசின் திட்டம் குறித்து நான் உரையாற்றினேன் என ஒன்ராறியோவின் பிரதமர் டக் ஃபோர்ட் (Doug Ford) பதிவிட்டுள்ளார். கிராமப்புற ஒன்டாரியோ நகராட்சி எங்கள் மாகாணத்தின் பொருளாதாரத்தின் முக்கிய இயக்க சக்தியாகும். அங்கு உள்ள சமூகங்களுக்கு தேவையான சேவைகள், அடிப்படை வசதிகள் மற்றும் ஆதரவுகளை வழங்க நாம் முதலீடு செய்து வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்ய கனடிய ராணுவ வீரர்களை அனுப்பும் பிரதமர் கார்னி

கிரீன்லாந்துக்கு கனடிய ராணுவ வீரர்களை அனுப்புவதற்கு பிரதமர் மார்க் கார்னி திட்டமிட்டுள்ளார். கிரீன்லாந்தை வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வர்த்தகப் போர் மிரட்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்த முடிவு அமைந்துள்ளது. நேட்டோ (NATO) நட்பு நாடுகளுடன் இணைந்து கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்யக் கனடியப் படைகளை அனுப்பும் இந்தத் திட்டம், அமெரிக்காவுடனான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னாட்சி பெற்ற டேனிஷ் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் நாடுகள் […]
பேலியகொடையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

பேலியகொடை – மீகஹவத்த பகுதியில் கத்தியால் குத்தி ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19) இடம்பெற்றது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகக் கத்திக் குத்தில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவர் வத்தளை – ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர். […]
வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர்

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவர் எந்திரி எஸ்.விமலேஸ்வரன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று(19.01.2026)காலை கிளிநொச்சி நகரில் உள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகத்திற்கு வருகை தந்த புதிய தலைவரை உத்தியோகத்தர்கள் வரவேற்றதைத் தொடர்ந்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அழகான நாடு வளமான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய எமது நாடு வளம்பெற்று வருகின்ற நிலையில் நிறைய பிரச்சனைக்கு மத்தியில் வடமாகாண போக்குவரத்து காணப்படுகின்றது. […]
மக்கள் மத்தியில் தமிழரசை மலினப்படுத்தும் அநுர தரப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது!

தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன் – சுமந்திரன் தொடர்பில் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (19) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவிக்கையில்.. அதேபோன்று இந்த விவகாரத்தில் அநுர தரப்பு குத்தி முறியவும் தேவையில்லை. மக்கள் மத்தியில் தமிழரசை மலினப்படுத்தும் […]
பிரதான நகரங்களில் ஒன்று கூடும் தேரர்களால் ஆபத்து?

ஜபக்சவுக்கு சார்பான பௌத்த பிக்குகள் நாட்டின் பிரதான நகரங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட தயாராகியுள்ளதாக இலங்கை புலனாய்வு தகவல்களை சுட்டிக்காட்டி லண்டனில் இருந்து இயங்கும் சர்வதேச ஐஓடிபிபி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் (IODPP Police) இணையதளத்தில் இது தொடர்பில் அதன் தலைவர் அஜித் தர்மபால மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாட்டை போரின் பிடியிலிருந்து காப்பாற்றிய தலைவரின் பாரியாரான தேசிய தாயை சிறையில் இடப்படுவதை தடுக்கும் முயற்சியாகவே இதை […]