கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சாணக்கியன் அழிக்கப் பார்க்கின்றார்!

மட்டக்களப்பில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்யும் செயற்பாட்டினை நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா முயற்சி செய்து வருகின்றனர் என ஈ.பி.டி.பி. கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “மகிந்த ராஜபக்ச காலத்தில் தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர்களின் வளர்ச்சிக்காக 9 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்பட்டன. இதில் 7 எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றின் பொருட்கள் திருடப்பட்டு செயலிழந்து மீண்டும் […]

தேசிய பூங்காவில் கூடாரம் அமைத்து விலங்கு வேட்டை

வில்பத்து தேசிய பூங்காவில் கூடாரங்களை அமைத்து, காட்டு விலங்குகளைக் கொன்று பாரிய மோசடி ஒன்று முன்னெடுக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வில்பத்து தேசிய பூங்காவின் தெல்பீபுவெவ பிரதேசத்தை அண்மித்த பகுதியில் கூடாரங்களை அமைத்து காட்டு விலங்குகளை வேட்டையாடி, நெருப்பு மூட்டி இறைச்சியை உலர்த்தும் மோசடியை முன்னெடுத்து வந்த வேட்டைக்காரர்கள் குழுவொன்றுடன் துப்பாக்கிகள் மற்றும் பெருமளவான இறைச்சித் தொகையைக் கைப்பற்ற வனஜீவராசிகள் அதிகாரிகள் நேற்று (19) நடவடிக்கை எடுத்திருந்தனர். வனஜீவராசிகள் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய […]

கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக கறுப்புப் பட்டி போராட்டம்

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் இன்று (20) கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹோமாகம வாராந்த சந்தைக்கு அருகில் ஒன்று கூடிய அந்தக் குழுவினர், அவ்விடத்திலிருந்து கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தியவாறு ஹோமாகம பிரதேச சபை வரை ஊர்வலமாக வந்ததோடு, சபை அமர்வு மண்டபத்திற்குள்ளும் சென்று அங்கும் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, […]

நலன்புரி நன்மைகள் விவாதம்

நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பான விவாதம் இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ‘திட்வா’ புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இன்மை தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கையிடவும், அது தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. வியாழக்கிழமை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு, வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமூலம் […]

மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களைக் காணவில்லை

ன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்விரு மீனவர்களும் இன்று அதிகாலை 2.00மணியளவில் ஒருநாள் மீன்பிடிப் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு கடலில் மிதந்துகொண்டிருந்ததை மற்றொரு மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்கள் கண்டு, அது குறித்து கரைக்குத் தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலைத் தொடர்ந்து, குறித்த மீனவர்களைத் தேடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் சிலாபம், வெல்ல, கருச பாடுவ பிரதேசத்தில் […]

ஊழல் இல்லாமல் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ‘பாலதக்ஷ மாவத்தை’ மேம்பாலத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “திருடியும், வீண்விரயம் செய்தும் நாட்டை அழித்தமையாலும், நாட்டை வங்குரோத்து அடையச் செய்தமையாலும் ஏற்பட்ட பொருளாதாரக் குற்றங்களின் சாபத்திற்கு முழு நாடும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. நாங்கள் அந்த சவால்களை வெற்றிக்கொண்டு, […]

கிரிக்கெட் தொடர் ; கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளின் போது கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பிரேமதாச மைதானத்தில் போட்டிகள் நடைபெறவிருக்கும் எதிர்வரும் 22, 24 மற்றும் 27 ஆகிய திகதிகளில் விசேட போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக பொலிஸ் அறிவித்துள்ளது. கொழும்பு போக்குவரத்து பிரிவின்படி, போட்டிகள் நடைபெறும் நாட்களில் மைதானத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் நண்பகல் […]

வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தில் “கந்தரோடை விகாரை ” என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை (19) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் ” கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து , பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் […]

மேர்வின் சில்வாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டரீதியான வருமானத்தை விஞ்சி சொத்துக்களைக் குவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இலஞ்ச ஊழல் விசார​ணை ஆணைக்குழுவின் நெறிப்படுத்தலின் கீழ், முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகளாகப் பெயரிடப்பட்டிருந்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்களைச் […]

அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரீன்லாந்துக்கு சீனா அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறிவரும் குற்றச்சாட்டை சீனா இன்று கடுமையாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா “சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரை பயன்படுத்தி சுயலாபங்களை அடைய முயற்சிப்பதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது. பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ‘சீனா அச்சுறுத்தல்’ என்பதை ஒரு காரணமாகக் கொண்டு சுயலாபங்களை தேடுவதனை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த […]