மகிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை மார்ச் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(20) தீர்மானித்துள்ளது. தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக இவர்கள் இருவரும் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது, முன்வைக்கப்பட்ட விடயங்களை […]

வடக்கு கடற்பரப்பில் கடல் அட்டைகளுடன் 13 பேர் கைது!

கிளிநொச்சி வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 13 சந்தேகநபர்கள் கடல் அட்டைகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையினர் திங்கட்கிழமை (19) அதிகாலை கிளிநொச்சி வடக்கு, வலைப்பாடு கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இரவு நேரத்தில் சட்டவிரோதமாக சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்களையும், 1108 கடல் அட்டைகளுடன், நான்கு டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர். அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையைச் […]

அரச பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளை (21) முதல் பெப்ரவரி 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மாணவர்களுக்கு பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை விடுமுறை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும் என்றும் […]

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர் – ஆளுநர்

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றிய ஆளுநர் தெரிவித்ததாவது, போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், வடக்கு மாகாணம் மீளக்கட்டியெழுப்பப்படுவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும், கிராமப்புற வீதிகள் மற்றும் தீவகப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. கொழும்புக்கும் […]

லண்டன் பொன்விழா மாநாடு குறித்து கலந்துரையாட இலங்கை வரும் துரை கணேசலிங்கம்

1974 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது கனடாவை தலைமையாகக் கொண்டு இந்தியா, ஜெர்மன், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, டென்மார்க், மொரிசியஸ் உட்பட 30 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) சர்வதேச பொதுச் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் இன்று (20) திகதி இலங்கைக்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வருடம் லண்டன் மாநகரில் இடம் பெறவுள்ள இயக்கத்தின் 50 ஆவது சர்வதேச மாநாடு தொடர்பாக இலங்கையில் […]

வீடொன்றிலிருந்து வெடிகுண்டுகள் மீட்பு

அனுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் உள்ள முன்னாள் இராணுவ சிப்பாய் வீட்டில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகளை அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) கைப்பற்றியுள்ளது. அனுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியின் வீட்டிலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக பொலிஸ் சிறப்புப் […]

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் வெனிசுவேலா, கனடா, கிரீன்லாந்த்

வெனிசுவேலா, கனடா ஆகிய நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் குறிப்பிட்ட செய்யறிவு (AI) புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து கடத்திச் சென்றனர். இதையடுத்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை முழுவதுமாக அமெரிக்கா ஆக்கிரமிக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதற்கு, ஏராளமான ஐரோப்பிய நாடுகளின் […]

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் செயல் அவரின் பதவிக்கு அழகல்ல!

ஆளுநரின் செயல் அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆர். என். ரவி அவையிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தைக் கொண்டு வந்து உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: ”தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் ஒரு முறை ஆளுநர் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி செயல்பட்டு அவையிலிருந்து வெளியே சென்றுள்ளார்; வெளியே என்று சொல்வதைவிட, வெளியேறிச் சென்றிருக்கிறார். ஆளுநரின் செயல் […]

பாஜக தேசிய தலைவராகப் பொறுப்பேற்றார் நிதின் நவீன்!

பாஜக கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜக தேசிய தலைவராக தற்போதுள்ள மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, கடந்த 2020, ஜனவரியில் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஜெ.பி. நட்டாவின் மூன்றாண்டு பதவிக் காலம் ஏற்கெனவே நிறைவுற்ற பிறகும் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அப்பதவியில் நீடித்து வந்தார். இதையடுத்து, பாஜகவின் புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று திங்கள்கிழமை (ஜன. 19) மாலையுடன் நிறைவடைந்த […]

வடமராட்சி கிழக்கு கரையோர குப்பைகளை அகற்ற ஒத்துழைப்பில்லை!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கரையோரங்களில் காணப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுடைய சமாசம் மற்றும் சங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் யுகதீஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலினால் வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் அதிகளவான குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் தொன் கணக்கில் தேங்கி காணப்படும் இந்த குப்பைகளை […]