இராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்

இராமநாதபுரத்தின் தோப்பு வலசை கடற்கரை பகுதியில் வாகனம் ஒன்றில் வந்த சிலர் பொதிகளை இறக்கி வைத்து விட்டு சென்றிருப்பதாக இன்று (20) அதிகாலை தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக தோப்புவலசை கடற்கரை பகுதியில் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். குறித்த பொதிகளில் 116 கிலோகிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் […]
ஷாங்காயில் வரலாறு காணாத பனிப்பொழிவு

சீனாவின் ஷாங்காயில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மிகவும் குளிரான காலநிலையுடன் இணைந்து பனிப்பொழிவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக நகரத்தின் சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2018க்குப் பிறகு ஷாங்காயில் இதுபோன்ற பனிப்பொழிவு ஏற்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சுமார் 12 மாகாணங்களில் கடுமையான குளிர் காலநிலை நிலவுவதாகவும், பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலைதீவில் இலங்கையர்கள் இருவர் கைது

மாலைதீவு சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் மாலைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் 43 வயதான கங்கணமலகே திலக் சோமச்சந்திர மற்றும் 46 வயதான தேவநிதிகே பிரியந்த சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி வேலனா சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆலோசனை […]
பிரான்ஸ் தூதுவருடன் மலையக மக்கள் தொடர்பாக மனோ கணேசன் முக்கிய கலந்துரையாடல்

மலையக மக்களின் காணி உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் உடன், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். மலையக சமூகத்தின் கௌரவம், பாதுகாப்பு, நீதி மற்றும் விட்டுக்கொடுக்க முடியாத அடித்தளமாக ‘காணி உரிமைகள்’ அமைய வேண்டும் என்பதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நிரந்தர வீட்டுவசதிகளைப் பெறுவதில் மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பாகுபாடுகள் குறித்தும், […]
முன்னாள் அமைச்சர் மனுஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீளப் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, கொரியாவுக்கான ஈ 8 விசா ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணையில், முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, மனுஷ நாணயக்கார இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதனைத் திரும்பப் பெறுவதற்கு மனுஷ நாணயக்காரவின் சட்டத்தரணிகள் அனுமதி கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர்களான எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் […]
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணி; ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி
இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகளின் கூட்டணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், மீனவ சமூகத்தவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல், இயலளவை கட்டியெழுப்புதல் மற்றும் மீன் வளங்களைப் பேணும் வகையில் முகாமைத்துவம் செய்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதித்துள்ளது. சூரை மீன் பிடிக்கும் தொழிலானது இந்து சமுத்திர வலயத்தின் தேசிய பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, தொழில் உருவாக்கம் மற்றும் கடலோர சமூகத்தவர்களின் சமூக பொருளாதார உறுதிப்பாட்டுக்கு […]
திருகோணமலையில் மோட்டார்சைக்கிள் மோதி விபத்து
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பேக்கரி உற்பத்தி பொருட்களை ஏற்றிக் கொண்டு காலை நேர வியாபாரத்திற்காக சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த திருகோணமலை போக்குவரத்து […]
கனடா தூதுவருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

கனடா செல்லவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்டினைச் சந்தித்து இரு தரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள கனடா உயர் ஸ்தானிகராலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
23 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை!

ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாகவும் இந்த வெளியேற்றம் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் (Ain al-Assad) விமானப்படைத் தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதை ஈராக் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இனி, அமெரிக்காவுடனான உறவானது நேரடி இராணுவ தலையீடாக இல்லாமல், இரு தரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் மேலும் அறிவித்துள்ளது. கடந்த […]
ரொறன்ரோ ஓஷாவாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

ஓஷாவாவின் தெற்குப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் டர்ஹாம் பிராந்திய போலீஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தில் 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் காயமடைந்துள்ளார். அப்பகுதியில் ஏற்பட்ட மோதலில், ஒரு போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் பலமுறை சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த மற்றொரு போலீஸ் அதிகாரியும், அந்தச் சந்தேக நபரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தேக நபரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்றும், அவர் கத்தி மட்டுமே […]