சுதந்திர சதுக்கத்தில் தேசிய சுதந்திர தின வைபவம்!

இந்த ஆண்டுக்கான சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 78வது , தேசிய சுதந்திர தின வைபவம் பிப்ரவரி 4 ஆம் திகதி காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள AI?

கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) நடத்திய புதிய ஆய்வில், சுமார் 1.83 மில்லியன் இலங்கை தொழிலாளர்கள், ( வேலை செய்யும் மக்கள் தொகையில் தோராயமாக 22.8 சதவீதம் ) செயற்கை நுண்ணறிவுக்கு (GenAI) உள்ளாகக்கூடிய தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பில் AI , ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களுக்கு அச்சுறுத்தலாக தற்போது AI மாறியுள்ளமை குறித்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் வீட்டுத்திட்ட கொடுப்பனவை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

யாழ். மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்கு பின் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில், “2019 ஆம் ஆண்டு தற்போதைய ஆளுநர் அப்போதைய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் காலத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரை வழங்காமல் உள்ளது. இதன் காரணமாக குறித்த பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட […]
களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள் கைப்பற்று

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் செவ்வாய்கிழமை (20) அன்று மனித நுகர்வுக்கு ஒவ்வாத பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16Kg கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டன. களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் இந்த பழுதடைந்த மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் போது வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் தணிக்கை வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்க தாமதித்ததால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தணிக்கை சான்றிதழ் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தணிக்கை வாரியத்தின் தரப்பில், “ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய கால அவகாசம் கேட்டு […]
டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் பங்களாதேஷ் இணக்கமில்லை!

டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம் பங்கேற்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டித்து பிசிசிஐ-ன் அறிவுறுத்தலின் […]
நுவரெலியாவில் போராட்டம்

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று (20) முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா பிரதேசத்தில் 2026ஆம் ஆண்டில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். சர்ச்சைக்குரிய ஆங்கிலப் பாட கற்றல் தொகுதியை தவிர, ஏனைய பாடங்கள் தொடர்பான கற்றல் தொகுதிகளை காலம் கடத்தாமல் மாணவர்களுக்குக் உடனடியாக கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர். மேலும் எதிர்வரும் நாட்களில் […]
ஆசிரியர் இடமாற்றங்களால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்பு!

பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளதாக ஆளுங்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினருமான செ.திலகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட பிரஜாசக்தி வறுமை ஒழிப்பின் சமூக அபிவிருத்திக் குழு தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (19) ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தார் […]
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை; 578 சந்தேக நபர்கள் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த சோதனைகளின் போது, நேற்று (19) 578 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மாத்திரம் 29,504 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போது இந்த அளவிலான சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 282 […]
தனியார் துறையின் சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத்த குறிப்பிடுகையில், அதற்கமைய குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திருத்தச் […]