சட்டப் போராட்டத்தில் வெற்றிக் கண்ட கனடா சிவில் உரிமைக் கழகம்

கடந்த 2022-ஆம் ஆண்டு ஃப்ரீடம் கான்வாய் (Freedom Convoy) போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு அவசரகாலச் சட்டத்தை &(Emergencies Act) பயன்படுத்தியது நியாயமற்றது என்று கனடா கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு, மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்த இந்த சட்டப் போராட்டத்தில், கனடா சிவில் உரிமைக் கழகம் (CCLA) மற்றும் பிற அமைப்புகளுக்குப் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஒட்டாவா மற்றும் எல்லைப் […]

தீர்வினைத் தராவிட்டால் மீண்டும் போராட்டம் – முத்து நகர் விவசாயிகள்

தீர்வினை தராவிட்டால் மீண்டும் தமது போராட்டத்தை தொடரப் போவதாக திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தமது விவசாய நிலங்களை தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின்சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சுமார் 70 நாட்களாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் திட்வா புயல் காரணமாக கைவிட்டனர். இதன் பின்னர் நேற்றையதினம் (18)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் தெரிவிக்கையில், விவசாயத்தை நம்பியே வாழ்வாதாரம் இருந்தது இதனால் 352 […]

எந்தவொரு சூழ்நிலையிலும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கைவிடப்படாது

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கைவிடப்படாது என ஆளும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னிலகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி ஆகியோர் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். கல்விமறுசீரமைப்பு நடவடிக்கைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் கைவிடப்படாது என அமைச்சர் பன்னிலகே தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பில் எழுந்துள்ள தொழிநுட்ப பிரச்சினைகள் சரி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் […]

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து – 21 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. அதிவேக ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கத்து தண்டவாளத்தில் மோதியதாக ஸ்பெயினின் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் ஹுயெல்வா நோக்கி எதிர்த் திசையில் பயணித்த […]

2026 டி20 உலகக் கிண்ணம்; பங்களாதேஷிற்கு கால அவகாசம்

2026 டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி பங்கேற்பது குறித்தும், குறிப்பாக அவர்கள் இந்தியாவுக்குச் செல்வது குறித்தும் ஜனவரி 21 ஆம் திகதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. டாக்காவில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த கால அவகாசத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு இதுவாகும். டி20 உலகக் கிண்ணத்தில் விளையாட விரும்புவதாகவும் ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக […]

இன்று முதல் மீண்டும் கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்கள் இன்று காலை 8 மணிமுதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு வெளிப்படையான […]

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 […]

நவகமுவ துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது

நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (18) களனி, கொஹொல்வில பகுதியில் வைத்து இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பிரவேசித்த வேனின் சாரதியாக குறித்த நபர் செயற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களனி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என […]

பௌத்த மதத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது – வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர்

நாட்டின் பண்பாடு மற்றும் நாகரிகத்தை அழிக்கும் சதி ஒன்று நடைபெற்று வருவதாக அஸ்கிரி பீடாதிபதி மஹா நாயக்கர், வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முத்தியங்கண ராஜமஹா விகாரையில் நடைபெற்ற மத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த காலகட்டத்தில் பௌத்தமதத்திற்கு பல தடைகள் இருப்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை எனவும் இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் மக்களுக்கும், பௌத்த மதத்துக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து மற்றும் அதனை […]