3 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கைத்தொலைபேசிகளுடன் ஒருவர் கைது

சுமார் 3 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 397 கைத்தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கிரீன் சேனல் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த இலங்கை விமான பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கொழும்பு , தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முறையான அனுமதியின்றி, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அறிவிக்காமல், இந்த […]

எல்லேஓயா வில் நீராடச் சென்றவரைக் காணவில்லை?

பெம்முல்ல, எல்லேஓயா மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் ஒருவர் நேற்று (18) நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவர் வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காணாமல் போனவரைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்துக்கு பிரதமர் ஹரிணி விஜயம்

சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் டெவோஸ் – குளோஸ்டர்ஸ் நகரில் இன்று (19) முதல் 23 ஆம் திகதி வரை உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு இடம்பெறுகின்றது. குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். “A Spirit of Dialogue” எனும் தொனிப்பொருளின் கீழ் […]

அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காக ஐந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து 26ஆவது முறையாக நடத்தும் ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா கல்கிஸை, மவுன்ட்லிவினியா ஹோட்டலில் நாளை செவ்வாய்க்கிழமை ( 20) ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காக ஐந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. உபாலி தென்னகோன் (Upali Tennakoon) உபாலி தென்னகோன் 1970களில் பாடசாலை மாணவராக இருந்தபோதே பத்திரிகைகளுக்கு கட்டுரைகள். சிறப்பு அம்சங்கள் மற்றும் செய்திகளை எழுதத் தொடங்கினார். 1977ஆம் […]

நீதிமன்றத்தை நாடிய முன்னாள் எம்.பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் மசோதாவை எதிர்த்து, அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் சுமார் இருபது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிர்வாகம் மற்றும் நீதித்துறைக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றால் சட்டமன்றத்தின் ஓய்வூதியத்தை மட்டும் குறைப்பது நியாயமற்றது.என்ற வாதத்தை முன்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர்கள் வாதிடுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மனுதாரர்கள் சார்பாக வழக்கறிஞர்களாக இருக்கும் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னிலையாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வி்டயத்தில் தங்கள் கருத்துக்களைத் […]

புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்படும் வடக்கு ரயில் மார்க்கம்

புனரமைப்புப் பணிகளுக்காக இன்று (19) முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் மஹவ – அநுராதபுரம் இடையிலான ரயில் பாதை தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார். எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று(19) […]

நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றி

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும், நியூசிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தன. இந்நிலையில் 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. […]

துறைமுகத்தில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்

உப்பு இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், தரமற்றவை எனக் கண்டறியப்பட்ட மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதி தாமதமான மேலும் சுமார் 700 உப்பு கொள்கலன்கள் சுங்கப்பிரிவின் சில இடங்களில் தேங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் நிலவிய உப்புத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, உப்பு இறக்குமதி […]

சட்டவிரோத மதுபானத்துடன் நெல்லியடியில் ஒருவர் கைது

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் நெல்லியடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார். இதன்போது தப்பி ஓடிய மற்றைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்காக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சுற்றிவளைப்பில் 50 ஆயிரம் மில்லிலீட்டர் சட்டவிரோத மதுபானம், 7 இலட்சத்து 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் சட்டவிரோத […]

வேகமாக மாற்றமடைந்துள்ள டொராண்டோ மாநகர அவசர அழைப்பு சேவை

டொராண்டோ மாநகரத்தின் 911 அவசர அழைப்பு சேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவேகமாக மாற்றமடைந்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒரு அவசர அழைப்பிற்குப் பதில் கிடைக்க எடுத்துக்கொள்ளப்படும் சராசரி நேரம் வெறும் 3 வினாடிகளாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அவசர காலங்களில் 911-க்கு அழைக்கும்போது, பயணிகள் 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை இருந்தது. இதனைச் சீர்செய்ய எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளே தற்போது பலன் அளித்துள்ளன. அவசரமற்ற புகார்களை கையாள பிப்ரவரி முதல் […]