அனுமதி பெறாது யாழ்.பல்கலைக்கழகத்தில் கற்ற கண்டிப் பெண்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த கண்டியைச் சேர்ந்தவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமானது. அதன் போது புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்ட கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு […]
புத்தர் சிலை சம்பவம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று (19) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தரம் 6 கல்வி மறுசீரமைப்பை கோரி போராட்டம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. “தரம் 06 பெற்றோர் ஒன்றியம்” என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் இன்று (19) காலை முதல் கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதே கோரிக்கையை முன்வைத்துப் பொலன்னறுவை மற்றும் காலி உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர்கள் தெரிவித்தனர். எனினும் புதிய […]
பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், புதிய திருத்தங்கள் உள்ளடங்கிய புகையிரத நிலைய அதிபர் சேவையின் ஆட்சேர்ப்பு நடைமுறையின் 05 பிரதிகளை, அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரின் கையொப்பத்திற்காக சமர்ப்பிப்பதில் தாமதம் மற்றும் அந்த ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான இடைக்கால ஏற்பாடுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதில் தொடர்ந்து ஏற்படும் தாமதம் காரணமாக இந்த உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் […]
வாழைத்தோட்டம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் கைத்துப்பாக்கி மீட்பு

வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்தே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அங்கிருந்து 29 தோட்டாக்களைக் கொண்ட வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த துப்பாக்கியை அந்த இடத்திற்குக் கொண்டு வந்து போட்ட சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக வாழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கனடாவில் மிகப் பெரிய சிறுவர் ஹாக்கி போட்டி

உலகிலேயே மிகப் பெரிய சிறுவர் ஹாக்கி போட்டியான விண்டர் கிளாசிக் நிகழ்வில் ஓக்வில் ரேஞ்சர்ஸ் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சியளித்தது என ஒன்ராறியோவின் பிரதமர் டக் ஃபோர்ட் (Doug Ford) பதிவிட்டுள்ளார். இவ்விசேஷமான நிகழ்வு இளம் விளையாட்டு வீரர்கள், குடும்பங்கள் மற்றும் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பை கொண்டாடுவதோடு, விளையாட்டு ஒன்டாரியோ முழுவதும் சமூகங்களை எவ்வாறு ஒன்றிணைக்கிறது என்பதையும் அறிய முடிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஃபீஃபா உலகக் கோப்பையை கனடா இணைந்து நடத்துகிறது; சுகாதார அவசரநிலைகள் குறித்து கரிசனை!

“கனடா ஃபீஃபா உலகக் கோப்பையை இணைந்து நடத்துகிறது. அதே நேரத்தில் சுகாதார அவசரநிலைகள் அதிகரிக்கும் சாத்தியத்திற்கும் தயாராகி வருகிறது. இந்த கோடை காலத்தில் டொரோண்டோவும் வான்கூவரும் ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளை இணைந்து நடத்தத் தயாராகும் நிலையில், கூடுதலாக உருவாகக்கூடிய தேவையை கனடாவின் ஏற்கனவே மிகுந்த அழுத்தத்தில் உள்ள சுகாதார அமைப்பு மேற்கொண்டு ஏற்படும் அவசர மருத்துவ சுகாதார தேவகைளைச் சமாளிக்க முடியுமா என்ற கரிசனையும் எழுந்துள்ளது. திங்கட்கிழமை கனடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னல் (CMAJ) வெளியிட்ட […]
கனடாவில் புதிய சுகாதார மையம்

கனடாவில் Etobicoke மற்றும் Mississauga முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் புதிய சுகாதார மையத்தைத் திறப்பதற்கான பாதையில் நாம் இன்னொரு படி முன்னேறியுள்ளோம் என ஒன்ராறியோவின் பிரதமர் டக் ஃபோர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்கால Gilgan Family Queensway Health Centre-இல் இருந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனவும் புதிய கட்டிடத்தின் இறுதி கம்பி நிறுவப்பட்டதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது எனவும் அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளுக்காக நாம் சிறந்தவற்றையே செய்ய வேண்டும்
அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை மேற்கொள்வதைத் தவிர்த்து, அனைத்துப் பிள்ளைகளினதும் மகிழ்ச்சிக்காக முடிவுகளை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புத்தளம் சஹிரா முஸ்லிம் கல்லூரிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, அப் பாடசாலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் பிரதமர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். பாடசாலையில் உயர்தர விஞ்ஞானப் பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் […]
தந்தையின் தூக்க கலக்கத்தால் தரையில் விழுந்த சிசு பலி
அழுது கொண்டிருந்த தனது 2-1/2 மாத சிசுவை கையில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்த தந்தைக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தில் சிசு தரையில் விழுந்து தலை சிமெண்ட் தரையில் அடிபட்டதில் சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அலுபோமுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த ருசேரி கெஷாயா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாயும் தந்தையும் மரண விசாரணை அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்ட போது, மரணம் தொடர்பாக எந்த சந்தேகமும் இல்லை எனவும் சிசுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை […]