தேசிய மற்றும் மாகாண அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் கலந்துரையாடல்

தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பான விடயங்கள் குறித்து பாராளுமன்ற உபகுழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட இந்த உபகுழு, அதன் தலைவியான பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த விடயங்கள் ஆராயப்பட்டன. அதிபர் சேவையின் முதலாம் தரத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் அதிபர் பதவியை மாத்திரமே வகிப்பது குறித்து […]
புயலினால் சேதமடைந்தவைகளுக்கு இழப்பீடு செலுத்தும் பணியில் இருந்து கிராம சேவகர்கள் விலகல்

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19) முதல் விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அந்தச் சங்கத்தின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொடுப்பனவு வழங்கும் செயல்முறையை அரசாங்கம் இன்னும் முறையான வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். […]
ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் கூட்டத்தை புறக்கணித்த செல்வம் எம்.பி

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் (சங்கு) கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் (சங்கு) முக்கிய அரசியல் கலந்துரையாடல் ஒன்று நேற்று காலை முதல் பிற்கல் வரை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதில் அக்கட்சியின் கூட்டணி கட்சிகளான ஈபிஆர்எல்எப், புளொட், ஜனநாயக போராளிகள் கட்சி, சமத்துவ கட்சி ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கட்சியின் தலைவரும், அக் […]
‘ஆர்ட்டெமிஸ் II’; நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA,தமது அடுத்தகட்ட நிலவு பயணமான ‘ஆர்ட்டெமிஸ் II’ திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, ‘ஓரியன்’ (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு […]
பாரிய புயலினால் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட அதிசயம்

கண்டி கலஹா, தெல்தோட்டவத்தை பகுதியிலுள்ள ஆலயத்திற்கு அருகில் பெருந்தொகை மதிப்புள்ள இரனத்தினகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கலஹா, தெல்தோட்டவத்தை பகுதியிலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தை பார்வையிட சென்ற ஒருவர் பல்வேறு வண்ணங்களில் பாரிய கல் ஒன்று கிடப்பத்தை கண்டெடுத்துள்ளார். கண்டுபிடிக்கப்பட்ட கல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேலதிக தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளது. குறித்த பகுதியில் பாரிய மண் சரிவு காரணமாக பல […]
பொற்பதி மணல்காடு இணைப்பு வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பொற்பதி மணல்காடு இணைப்பு வீதியை புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணல்காடு கிராமத்திற்கும் பொற்பதி கிராமத்திற்கும் இடையேயான சுமார் 500 மீற்றர் விதி பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமையால் பொற்பதி மற்றும் மணல் காடு கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொற்பதி மற்றும் மணல்காடு கிராமங்கள் மீன்பிடி தொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் 500மீற்றர் வீதி சீரின்மை காரணமாக சுமார் 8 km தூரம் சுற்றி சென்று வருகின்றனர். மேலும் […]
சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்?

ரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ள குற்றப்பத்திரிகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பெயரும் சேர்க்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சிபிஐ விசாரித்து வருகின்றது. கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், தற்போது தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வழக்கில் […]
இந்தியாவில் நிபா வைரஸ்; கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!

நிபா வைரஸ் குறித்து அனைத்து சுகாதார அலுவலர்களும் கண்காணிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பறவைகள் மூலமாக மனிதருக்கு ஏற்படும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் […]
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!
சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், கணினி, உடற்கல்வி, தோட்டக் கலை, கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனா். தொடக்கத்தில் இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 5,000 நிா்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.12,500 வழங்கப்படுகிறது. சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் ஆகியவற்றை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் […]
புதுக்குடியிருப்பில் முதன்முறையாக பட்டத்திருவிழா

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் முதன்முறையாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பட்டத்திருவிழாவும் பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன. புதுக்குடியிருப்பு குயின் பூங்காவில், பட்டப்போட்டி, சுவையான உணவுகள், பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளுடன் மிக சிறப்பாக புதுக்குடியிருப்பு குயின் பூங்காவில் நேற்றையதினம் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முதன்முறையாக குயின் பூங்காவில், பட்டப்போட்டி, உணவு, பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் மிக சிறப்பாக நேற்றையதினம் (18.01.2026) காலை ஆரம்பமாகி இரவு 10 மணி வரை இடம்பெற்று நிறைவு பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் பட்டப்போட்டி, […]