இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்த விசேட நிகழ்வு

இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ரீதியில் இயலாமையுடைய நபர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில் இடம்பெறவிருப்பதாக இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் “இயலாமையுடைய நபர்களுக்கான உணர்திறன் மிக்க பாராளுமன்றம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இயலாமையுடைய நபர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சிகளின் […]
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து
சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தீர்மானங்களை தானாகவே எடுக்கின்றார். அது தவறான நடவடிக்கை என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் செய்தது தவறான நடவடிக்கை. ஆரம்பத்தில் இருந்து அவர் சிறுபான்மை கட்சிகள் சார்பான அங்கத்தவராக அரசியலமைப்பு சபையில் […]
சர்வதேச உதவி மாநாட்டை கூட்டுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

கண்டி மாவட்டத்தின் கம்பளை, சரசவிகம, தெல்தோட்டை மற்றும் தொலுவ போன்ற பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சுழற்காற்று மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா தெரிவித்தார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் போதுமான நிதி […]
காலி சிறைச்சாலையில் கிணற்றில் விழுந்த கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
காலி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த கைதி ஒருவர் திடீரென கிணற்றில் விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அக்மீமன, கொனமுல்ல பிரதேசத்தில் 22 வயதுடைய கைதி ஆவார். கைதி போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் அக்மீமன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது […]
‘இந்தியாவில் கல்வி’ வழிகாட்டல் கண்காட்சி

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில், சிகரம் அக்கடமி மற்றும் சேப் (SAPE) நிறுவனம் இணைந்து நடாத்திய ‘இந்தியாவில் கல்வி’ (Study in India) கல்வி வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் […]
2026; டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கானதிட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல், டிஜிட்டல் பொருளாதார அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு, நாணயத்தாள் அற்ற பொருளாதார (Cashless Economy) ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, அரச நிறுவனங்களை […]
மதங்களுக்கிடையிலான சகவாழ்வு; கத்தோலிக்க ஆயர்கள் குழு – மகா தேரர்கள் இடையில் கலந்துரையாடல்!

கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆயர்கள் குழு ஒன்று மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா தேரர்களைச் சந்தித்து மதங்களுக்கிடையிலான சகவாழ்வு குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கலந்துரையாடியது. கண்டிக்கு விஜயம் செய்த இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆயர்கள் குழு ஒன்று, சியாம் மகா நிகாயவின் மல்வத்ததை பீட மகாநாயக்கர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரைச் சந்தித்து, நாட்டின் தற்போதைய நிலைமை […]
4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி

சீனாவில் 4-வது ஆண்டாக 2025-ம் ஆண்டிலும் இந்த பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சீன தேசிய புள்ளியியல் அதிகாரசபை வெளியிட்ட தகவலை அடிப்படையாக கொண்டு இன்று வெளியான செய்தியில், 2025-ம் ஆண்டில் சீனாவில் 1,000 பேருக்கு 5.63 என்ற அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது. 2023-ம் ஆண்டில் இது 1,000 பேருக்கு 6.39 குழந்தை பிறப்புகள் என்ற அளவில் இருந்தது என தெரிவிக்கின்றது. எனினும், 2024-ம் ஆண்டில் பிறப்பு […]
இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தியாவின் வடமேற்கு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 35 கிலோமீற்றர் ஆழத்தில், 06 ரிக்டர் இந்த நிலநடுக்கம் அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தநாட்டு நேரப்படி இன்று திங்கட்கிழமை (19) காலை 11.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளதுடன், இதுவரை எவ்வித சேதமும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இருப்பினும், தொடர்புடைய பகுதியில் மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், […]
‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் !

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் (SLPI) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ‘இருளை போக்கக்கூடிய வழி’ (අඳුර දුරු කළ හැකි මඟ) என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதில் ஊடக அமைப்புகள், […]