புறா வளர்ப்பு தகராறு முற்றியதில் ஒருவர் கொலை

புறாக்கள் வளர்ப்பு தொடர்பாக இரு தரப்பினரிடையே இன்று (18) பிற்பகல் பேலியகொட, மீகஹவத்த பகுதியில் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் வத்தளை, ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இத்தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் […]

தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 882 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நாளாந்த சோதனை நடவடிக்கை தொடர்பான தகவல்களை பொலிஸார் வௌியிட்டுள்ளனர். நேற்று (17) நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் அடிப்படையில், போதைப்பொருள் தொடர்பில் 882 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன், 09 சந்தேக நபர்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், ஒருவர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின் […]

தேசிய அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தல் விதிகளை மீறிய 3 மருந்தகங்களுக்கு அபராதம்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு கல்கமுவ, நிக்கவெரட்டிய மற்றும் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றங்களினால் 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வைத்தியரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்தமை, அனுமதிப்பத்திரம் இன்றி மருந்தகத்தை நடத்தியமை மற்றும் தகுதிவாய்ந்த மருந்தாளர் இன்றி மருந்தகத்தை இயக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தனித்தனியாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து, இக்குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மருந்தகத்திற்கு 3 இலட்சம் ரூபாய் அபராதமும், அம்பகோட்டே, […]

ஈரான் ஆர்ப்பாட்டம் – பலி எண்ணிக்கை 5000 ஆக அதிகரிப்பு

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் திகதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அனைத்து மாகாணங்களில் போராட்டம் பரவியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கமேனி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி […]

‘டித்வா’ புயலினால் அதிக பாதிப்புக்குள்ளான கொத்மலையில் சிரமதானப் பணிகள்

‘டித்வா’ புயலினால் அதிக பாதிப்புக்குள்ளான கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் கொத்மலை மகா பீல்ல கால்வாய் ஆகியவற்றைச் சிரமதானப் பணிகள் மூலம் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (17) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிகள் நாளை (19) வரை நடைபெறவுள்ளன. கொத்மலை பனங்கம்மன பகுதியில் சுமார் 20 கிராமங்களுக்கான பிரதான வீதி முழுமையாக நிலச்சரிவுக்குள்ளானதால், கடந்த 2 மாதங்களாக அந்த கிராமங்களின் குடியிருப்பாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இதனைக் கருத்திற்கொண்டு, அனுராதபுரத்திலிருந்து […]

கச்சேரி நல்லூர் வீதியில் கோர விபத்து; ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – கச்சேரி நல்லூர் வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கெப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயமடைந்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசுவமடு நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மரங்கள்

முல்லைத்தீவு – விசுவமடு நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோதமாக பெறுமதி மிக்க மரங்கள் வெட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பான முறைப்பாடுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஸ்வமடு பகுதியில் அண்மைக்காலமாக மக்கள் குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள் மற்றும் நெத்தலி ஆறு பகுதிகளில் உள்ள மரங்கள் இரவு வேளைகளில் திருடப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கடந்த 15ஆம் திகதி பொங்கல் தினத்தன்று வீட்டின் உரிமையாளரான 85 வயதுடைய முதியவர் […]

வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து; மூவர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் குறித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் பயணித்த நிலையில் மகளின் கால்கள்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. […]

இலங்கையில் வயதானவர்களில் 34 சதவீதமானோர் இருதய நோயால் பாதிப்பு!

உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய, இலங்கையில் உள்ள வயதானவர்களில் 34 சதவீதமானோர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அர்ஜூன திலககரத்ன தெரிவித்தார். அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கான புதிய இதய வடிகுழாய் பிரிவின் கட்டட அடிக்கல் நாட்டு விழா சம்பிரதாயபூர்வமாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற சுகாதார (வைத்திய சேவை) பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் […]

நிலாவில் ஆடம்பர ஹோட்டல் 2032 ஆண்டில் திறக்கப்படும்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு புதிய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், சந்திரனில் உலகின் முதல் நிரந்தர ஹோட்டலை அமைக்கும் பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. ​இது குறித்து விரிவாக பார்க்கலாம். உலக நாடுகள் நிலவை ஆராய்வதில் தற்போது மிகுந்த கவனம் செலுத்துகின்றன. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஏற்கெனவே நிலவில் விண்கலங்களை வெற்றிகரமாக தரையிறக்கி முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக இந்தியா, நிலவின் தென் துருவத்தைத் தொடும் முதல் நாடு என்ற […]