மங்காத்தா, தெறி ஒரே நாளில் ரீ-ரிலீஸ்!

விஜய்யின் தெறி படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் தெறி, ஜனவரி 23 ஆம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்படவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அஜித்தின் மங்காத்தாவும் அதே நாளில் ரீ-ரிலீஸுக்கு வரவிருப்பதால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். திரைத் துறையில் இருந்து விஜய் ஓய்வுபெறவுள்ள நிலையில், அஜித்தின் மங்காத்தாவும் விஜய்யின் தெறியும் ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பொங்கல் விடுமுறையில் விஜய்யின் ஜன நாயகன் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால், தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக […]
யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் நினைவேந்தல்

யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று(17.01.2026) நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி, பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு படுத்தியுள்ளனர். இதன்போது, பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இந்த எழுச்சி நிகழ்வில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம் மற்றும் தமிழ் தேசியம் என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பன பொங்குதமிழ் […]
தமிழர்களின் நிலங்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

பறிபோகும் தமிழர்களின் நிலங்களையும், வளங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என வாகரை பிரதேசத்தில் பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது. உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா இன்று(17.1.2026) மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேணி 4ம் கட்டை பகுதியில் நடைபெற்றபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகரை பிரதேசத்தில் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டது. வன இலாகா,தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு பகுதிகளினாலும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டன. அந்தவேளைகளில் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் காரணமாக […]
சட்டவிரோத மணல் அகழ்வு; வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்

கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஐந்து சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி பன்னங்கண்டி முரசு மோட்டை கண்டவளை பெரியபரந்தன் ஆகிய பகுதிகளில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட நடவடிக்கை; ஒரே நாளில் 596 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக, பொலிஸ் பிரிவுகள் மட்டத்தில் அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த விசேட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். அதற்கமைய, பொலிஸாரால் 30,386 பேர் சோதனையிடப்பட்டதுடன், இதன்போது சந்தேகத்தின் பேரில் 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த நடவடிக்கையின் போது, குற்றங்களுடன் […]
நிறுத்தப்பட்ட பல ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
‘திட்வா’ புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டைக்கும் திருகோணமலைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் ரயில் ஜனவரி 20 ஆம் திகதி முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் ‘புலத்திசி’ நகர கடுகதி […]
மத்திய கிழக்கில் தீவிர நிலையில் போர்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் சற்று முன்னர் அலி கமெனி வெளியிட்ட பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி, தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ட்ரம்பை குற்றவாளி என குறிப்பிட்டு பதிவு ஒன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில், “ஈரானிய தேசத்தின் மீது இழைத்த உயிரிழப்புகள், சேதங்கள் மற்றும் அவதூறுகள் காரணமாக அமெரிக்க ஜனாதிபதியை ஒரு குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். இத்தகைய செயற்பாடுகளை நான் […]
சியோலின் புறநகர்ப் பகுதியில் பாரிய தீ விபத்து

தென் கொரியாவின் தலைநகர் சியோலின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சியோலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குரியோங் (Guryong) என்ற குடியிருப்புப் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை (16) சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டனர். இதுவரை உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி […]
தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் புதிய வரிகள்

டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs) விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எந்த நாடுகளுக்குப் புதிய வரிகள் விதிக்கப்படும் என்பது குறித்தோ அல்லது அந்நாடுகளுக்கு எதிராகப் பின்பற்றப்படும் வரி கொள்கை என்ன என்பது குறித்தோ வெளியிடப்படவில்லை. கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான டிரம்பின் தீர்மானத்திற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து […]
நபர் ஒருவரைத் தாக்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறை
நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் பரிசோதகர், 2020 ஆம் ஆண்டில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போதே இவ்வாறு நபரைத் தாக்கி காயப்படுத்தியிருந்தார். தற்போது சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் […]