வெளிநாட்டு மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்கவில் கைது

68 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் இலங்கைப் பயணி ஒருவர் இன்று (17) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார். சந்தேகநபர் இன்று (17) மாலை 5.00 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-654 என்ற விமானம் மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இதன்போது, அவர் தனது 3 பயணப் பொதிகளுக்குள் 44,400 […]

இரணைமடு நீர்த்தேக்கத்தின் 106 ஆவது ஆண்டு பொங்கல் நிகழ்வு

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து கனகாம்பிகை அம்பாள் ஆலய முன்றலில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் வருடம்தோறும் நடைபெறும் பொங்கல் நிகழ்வானது. இரணைமடு நீர்த்தேக்கத்தின் 106 ஆவது ஆண்டு பொங்கல் நிகழ்வாக நடைபெற்றது. குறித்த பொங்கல் நிகழ்வையும் பொலிஸ்மா அதிபர் அவரின் மனைவியுடன் இணைந்து ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து குறித்த ஆலய வளாகத்தில் பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் ஏற்பாட்டில் டித்வா […]

புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ள எரிக் மேயர் அவர்களின் நியமனப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க செனட் சபை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, செனட் சபையின் பரிந்துரைகள் அமெரிக்க ஜனாதிபதிக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. செனட் சபையின் வெளிவிவகாரக் குழு முன்னிலையில் எரிக் மேயர் வழங்கிய விளக்கங்களைத் தொடர்ந்தே இந்தப் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட இராஜதந்திரி ஒருவராகக் கருதப்படும் எரிக் மேயர், இலங்கையின் புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். அவர் அமெரிக்க வெளிவிவகார […]

நாட்டில் மது அருந்துவதால் நாளொன்றுக்கு 50 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மதுபானம் அருந்துவதால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மது அருந்துவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார். அவர்களில், 34.8 சதவீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், அதேநேரம் 0.5 சதவீதத்திற்கும் மிகக் குறைவான அளவில் பெண்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் […]

கரைத்துறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமம் தனித் தீவாக மாறியுள்ளது!

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்திற்கு செல்வதற்கான பிரதான வீதிகள் மற்றும் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் என்பன சீரின்மையால் குறித்த வலைஞர்மடம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளதாக அந்தக் கிராமமக்களால் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் கிராமமக்களின் முறையீட்டினைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெள்ளிக்கிழமை (16) வலைஞர்மடம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு A-35 பிரதான வீதியிலிருந்து வலைஞர்மடத்திற்கு வருகைதரும் மாதா […]

யாழ். மாவட்டத்தில் உள்ளூர் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிப்பு!

ஜனாதிபதி தலைமையில் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (16) இடம் பெற்ற போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 70 பேருந்துகளில் பொது மக்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். யாழில் ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தேசிய வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக “முழு நாடுமே ஒன்றாக” என்கின்ற தேசிய செயற்பாட்டை ஆரம்பிக்கும் முகமாக ‘அகன்று செல்’ என்கின்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற கூட்டத்துக்கே இவ்வாறு அழைத்து வரப்பட்டனர். இதன் காரணமாக யாழ். மாவட்டத்தில் […]

கல்வியில் ஆபாசத்தை புகுத்தும் நடவடிக்கைக்கே நாம் எதிர்ப்பு – சஜித்

தரம் 1 தொடக்கம் 6 வரை கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு எந்த எதிர்ப்பையும் யாரும் காட்டவில்லை. கல்வியில் ஆபாசத்தை புகுத்தும் நடவடிக்கைக்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். கல்வியில் கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை முன்னெடுக்குமாறே வலியுறுத்தி வருகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வைக்கும் மற்றுமொரு கட்டம் இன்று  சனிக்கிழமை (17) முன்னெடுக்கப்பட்டன. இதன் […]

தரைக் கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்த இந்தோனேசிய விமானத்தைக் காணவில்லை?

இந்தோனேசியாவில் 11 பயணிகளுடன் சென்ற விமானம், தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்ததால், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுலவேசி ஆகிய இரு தீவுகளுக்கு இடையில் மலைப்பாங்கான பகுதியை ஏடிஆர் 42-500 விமானம் நெருங்கும்போது, இன்று (ஜன. 17) மதியம் 1.17 மணியளவில் தரைக் கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 11 பேர் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், விமானம் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் கடல்சார் விவகாரம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தைச் […]

சாந்தனுவின் மெஜந்தா டீசர் வெளியீடு!

நடிகர் சாந்தனு நாயகனாக நடிக்கும் “மெஜந்தா” திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இஃக்லூ திரைப்படத்தின் இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “மெஜந்தா”. இசையமைப்பாளர் தரன் குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர்கள் அஞ்சலி நாயர், ஆர்ஜே ஆனந்தி, அர்ச்சனா, பகவதி பெருமாள், படவா கோபி, சரத் ரவி, சௌந்தர பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் சாந்தனு நாயகனாக நடித்துள்ள “மெஜந்தா” திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று […]

நடிகர் கவினின் புதிய படத்தில் இணைந்த சாண்டி!

நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் 9 ஆவது திரைப்படத்தில் நடன இயக்குநர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் 9 ஆவது திரைப்படம் உருவாகி வருகின்றது. இசையமைப்பாளர் ஆஃப்ரோ இசையில் உருவாகும் இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கின்றார். இந்த நிலையில், இந்தப் புதிய திரைப்படத்தில் நடிகரும் நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக, படக்குழுவினர் இன்று (ஜன. 17) சிறப்பு […]