விளக்கமறியலில் உள்ள கஸ்ஸப தேரர் சிறைச்சாலை உணவை நிராகரித்தார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், சிறைச்சாலையினால் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை (தானத்தை) நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபிக்கும் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஏனைய 05 சந்தேக நபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (14) […]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழ் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் தினமான நேற்று வவுனியாவில் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், இந்த அறுவடைத் திருவிழா நமது மக்களுக்கு வலிமையையும், ஒற்றுமையையும், கண்ணியத்தையும், நம்பிக்கையையும் கொண்டுவரட்டும். மேலும், உண்மை, நீதி, மற்றும் தமிழ் வரலாறு மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பதற்கான […]
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு
அஹங்கம – தித்தகல்ல பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) பதிவாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றபோது, தாக்குதலில் காயமடைந்த பெண்ணும் மூதாட்டியும் கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அஹங்கம – தித்தகல்ல பகுதியை சேர்ந்த 80 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. […]
நாடளாவிய ரீதியில் 2026 கல்வி ஆண்டிற்கான பாடசாலை நடவடிக்கைகள்
நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2026 கல்வி ஆண்டிற்கான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பான விசேட அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளைப் பின்வருமாறு முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2025ஆம் ஆண்டில் தரம் 1 இற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவான […]
கல்வி மறுசீரமைப்பு எவ்வித திட்டங்களும் இல்லாதது – ஜோசப் ஸ்டாலின்

அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பு எந்தவித தயார் படுத்தலும் இல்லாமலே செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 6ஆம் தரத்துக்கான பாடத்தொகுப்பு மூன்று மாதங்களுக்கே தயாரித்திருக்கிறது. அரசாங்கம் இதனை வாபஸ் பெற்றுக்கொண்டிருக்காவிட்டால், மாணவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இலங்கை ஆசிரியர் சங்கம் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (15) நடத்திய ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் தரம் 6ஆம் வகுப்புக்கான […]
தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

பயணிகள் போக்குவரத்து சேவையின்போது தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு செல்ல தீர்மானித்திருக்கிறோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (15) நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், மேல்மாகாணத்தில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக மேல்மாகாண பயணிகள் […]