இன்று இரவு முதல் பால் தேநீரின் விலை குறைகின்றது!

இன்று (16) இரவு முதல் அமுலாகும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று முதல் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாகவே, பால் தேநீர் விலையையும் இவ்வாறு குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷ ருக்ஷான் தெரிவித்தார். எனவே அனைத்து சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்களும் தற்போது கிடைக்கப்பெறும் […]
துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவம்; மூவர் கைது
கடந்த 30ஆம் திகதி இரவு கொஹுவல, போதியத்த பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவத்திற்கு, உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொஹுவல பொலிஸாரும் மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்படி, மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று (15) தெமட்டகொடை மற்றும் […]
இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்கு

இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்தார். இதன்படி, ஸ்பெயின் மற்றும் அதனைச் சார்ந்த பிராந்தியங்களில் இருந்து கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதால், அந்த சந்தைகளை மையமாக வைத்து விளம்பரப் […]
டொராண்டோவில் மிகப்பெரிய பனிப்பொழிவுக்கு சாத்தியம்?

டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெருநகரப் பகுதிகளில் இந்த ஆண்டில் மிகப்பெரிய பனிப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தப் பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரை பனி குவியக்கூடும் என்பதால் ‘மஞ்சள் நிற’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் பார்வைத் திறன் (Visibility) மிகக் குறைவாக இருக்கும் என்றும், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொராண்டோ மக்கள் தகுந்த குளிர்கால உடைகளை அணியுமாறும், தேவையற்ற பயணங்களைத் […]
திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மற்றும் தங்கச் சங்கிலிகள் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் வரக்காபொல பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். வரக்காபொல பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி ஓட்டிச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், திருடப்பட்ட மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் […]
சுற்றுலாப் பயணிகள் சென்ற வேன் விபத்து

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர் பயணித்த வேன் ஒன்று, வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றில், நேற்று (15) பிற்பகல் 3 மணியளவில் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, இருப்பினும் இரண்டு வேன்களும் கடும் சேதமடைந்துள்ளன. வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேகத்தில் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிச் சென்று, […]
சாவகச்சேரியில் தேசிய வீட்டு வசதி திட்டம்

தேசிய வீட்டு வசதி திட்டம் சாவகச்சேரியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று பட்டிப் பொங்கல்!

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாட்டுப் பொங்கல் இன்றாகும். இயற்கையை வழிபட்ட பிறகு மாடுகளை வழிபட்டு, அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் இந்த ஆண்டு என்ன சிறப்பு உள்ளது, எந்த நேரத்தில் மாட்டுக்கு பொங்கல் வைத்து, வழிபாடு நடத்த வேண்டும், மாட்டுப் பொங்கல் அன்று எப்படி வழிபட வேண்டும் என தெரிந்து கொள்ளலாம். பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளில் கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கலாகும். வீட்டை சுத்தம் செய்து, தேவையற்ற […]
திரு சந்திரசேகரம் சின்னமணி (சாந்தி அண்ணா)

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு வெள்ளவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு சந்திரசேகரம் சின்னமணி (சாந்தி அண்ணா – முன்னாள் தொழிலதிபர்- காங்கேசன்துறை) அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறையடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னமணி இரத்தினம் தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், இராசமணி(கனகமணி) அவர்களின் அன்புக் கணவரும், ஜெயம்(கனடா), சேகர்(லண்டன்), குணம்(கனடா), தயா(லண்டன்), ரூபி(லண்டன்), சாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், […]
சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கொசாக் தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ புயலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்யவும், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கொள்கை விடயங்கள் குறித்து கலந்துரையாடவும் இந்த தூதுக்குழு நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.