மக்கள் ஜனநாயகம் மீது வைத்திருந்த நம்பிக்கையை தேர்தல் ஆணையம் சரித்துவிட்டது – ராகுல் காந்தி கடும் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது கை விரல்களில் அழியும் மை வைக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் மும்பை, புணே உள்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நேற்று (ஜன. 15) நடைபெற்றது. மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்தத் தேர்தலில் வரலாற்றில் இல்லாத வகையில் 52.94 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. நேற்று காலை நடந்த தேர்தலில் வாக்குப் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு அமைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான பணிகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜகவும், திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் களம்காண இருக்கின்றன. இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தேமுதிக, ராமதாஸின் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் […]

110 வயதில் திருமணம் செய்து தந்தையானவர்; 142 வயதில் காலமானார்!

சௌதி அரேபியாவில் மிக வயதான நபர் என்று அறியப்பட்டு வந்த ஷேக் நாசர் பின் ராடன் அல் ரஷீத் அல் வாடா, தன்னுடைய 142-வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார். சௌதி அரேபியாவின் வரலாற்றில் புதிய நாடாக உருவானது முதல், அதன் அனைத்து ஆட்சியாளர்களின் ஆட்சியிலும் இவர் வாழ்ந்திருக்கிறார் என்பது இவரது குடும்பத்தினர் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அதாவது, சௌதி அரேபியாவின் நிறுவனர் மன்னர் அப்துலாஸிஸ் முதல், தற்போதைய மன்னர் சல்மான் வரை அனைவரின் ஆட்சியையும் […]

தலையில் தேங்காய் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி சுனேத்ரா குணதிலகா என்பவரே உயிரிழந்துள்ளார். தனது வீட்டிற்கு அருகிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பலத்த காயங்களுடன் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பேசாலை கடலுக்கு நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மன்னார் – பேசாலை கடலில் மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் (15.01.2026) நடந்த சம்பவத்தில், பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தைப் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காக சென்ற போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஒருவர் மீட்கப்பட்டு […]

திருகோணமலை சிறைச்சாலைக்கு சென்ற விமல் வீரவன்ச

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பலாங்கொடை கஸ்ஸப தேரரின் சுகவீனம் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சென்றுள்ளார். கஸ்ஸப தேரர் நேற்றுமுன்தினம் (14) முதல் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (15) மாலை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ​இச்சந்தர்ப்பத்தில் இன்று (16.01.2026)திருகோணமலை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.மேலும் அவரை பார்ப்பதற்காக சீலரத்தன தேரரும் திருகோணமலை சென்றுள்ளார். திருகோணமலை டொக்கியாட் கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோத கட்டுமானங்களை மேற்கொண்டமை மற்றும் புத்தர் சிலையை வைத்து […]

ஜனாதிபதி நயினாதீவு விகாராதிபதி சந்திப்பு

நயினாதீவு விகாராதிபதியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது நேற்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது. வடக்கில் தைபொங்கல் கொண்டாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம் யாழ் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மாவைக்கும் கட்சிக்கும் சத்தியலிங்கம் துரோகம் செய்துவிட்டார் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்

சத்தியலிங்கம் பச்சைத் துரோகி. மாவையால் பதில் செயலாளராக கொண்டு வரப்பட்டவர். ஆனால் அவருக்கும், கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டார் என தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(15.01.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், பொது குழுவில் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலை நடத்த வேண்டாம் என இரா.சம்பந்தனால் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகிய இருவருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மத்திய குழுவில் […]

டுபாயில் கைதான சந்தேகநபர்கள் மூவரும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டனர்!

டுபாயில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று (16) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பெண் ஒருவரும் நாட்டிற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த பெண் கல்கிசை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதிக விலைக்கு அரிசி விற்ற 3 வர்த்தகர்களுக்கு அபராதம்

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜா-எல மற்றும் கந்தானை பகுதிகளைச் சேர்ந்த இந்த வர்த்தகர்கள், கட்டுப்பாட்டு விலையை மீறி ஒரு கிலோ அரிசியை 308, 275 மற்றும் 280 […]