உடல்நலக்குறைவால் நாசாவிலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நான்கு விண்வெளி வீரர்களும் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் (NASA) மைக் ஃபிங்கே (கெப்டன்), ஜீனா கார்ட்மேன், ஜப்பானின் கிமியா யுய் மற்றும் ரஷ்யாவின் ஒலெக் பிளாட்டோனோவ் ஆகிய நால்வரே பூமிக்குத் திரும்பியுள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த நான்கு விண்வெளி வீரர்கள், ஒருவருக்கு ஏற்பட்ட “தீவிர” உடல்நலக் குறைவு காரணமாக திட்டமிட்ட காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவசரமாக வெளியேற்றப்பட்டு, கலிபோர்னியா கடற்கரை அருகே கடலில் பாதுகாப்பாக இறங்கினர். நான்கு […]
நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கிய மச்சாடோ

வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார். அந்தப் பதக்கத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியவரவில்லை. இந்தச் சந்திப்பு “மிகச்சிறப்பாக” அமைந்ததாகக் குறிப்பிட்ட மச்சாடோ, வெனிசுலா மக்களின் சுதந்திரத்திற்காக டிரம்ப் மேற்கொண்ட அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இதனைச் செய்ததாக மச்சோடா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தனது நாட்டின் எதிர்கால திசையைத் தீர்மானிப்பதில் […]
கைகளால் தைக்கப்பட்ட மரக்கப்பல் ஓமன் துறைமுகத்தை சென்றடைந்தது

இந்தியாவின் பண்டைய காலக் கடல்சார் வணிகப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில், ஆணிகள் இன்றி முற்றிலும் கைகளால் தைக்கப்பட்ட ‘ஐஎன்எஸ்வி கவுண்டின்யா’ (INSV Kaundinya) என்ற மரக்கப்பல், 17 நாட்கள் பயணத்திற்குப் பிறகு ஓமன் நாட்டின் மஸ்கட் துறைமுகத்தைச் சென்றடைந்தது. இந்த கப்பல் கட்டுவதற்கு ஆணிகளோ அல்லது உலோகப் பிணைப்புகளோ பயன்படுத்தப்படவில்லை. தேங்காய் நாரால் செய்யப்பட்ட கயிறுகளைக் கொண்டு மரப்பலகைகள் ஒன்றாகத் தைக்கப்பட்டு, இயற்கையான பிசின்கள் மூலம் ஒட்டப்பட்டுள்ளன. 5-ஆம் நூற்றாண்டில் அஜந்தா குகை ஓவியத்தில் காணப்பட்ட ஒரு […]
இரத்தினபுரியில் இரு வர்த்தக நிலையங்களில் தீ

இரத்தினபுரி – பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு கடைகளில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயைக் கட்டுப்படுத்த, தீயணைப்புத் துறை, இராணுவம் மற்றும் பிற அவசரகாலக் குழுக்களின் பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. இதன்போது, தீ ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில், இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஓட்டுநர் உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை

எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் ஓட்டுநர் உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த சேவை தற்போது 11 மாவட்டங்களில் ஒன்லைனில் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் ஓட்டுநர் உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுநர் உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதன் மூலம், ஒரு மாதத்திற்குள் ஓட்டுநர் உரிமங்களைப் பெற […]
திருவள்ளுவர் நாளையொட்டிய பிரதமர் மோடியின் பதிவு
திருவள்ளுவர் நாளையொட்டி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று தைப்பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கலை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் தெய்வப் புலவராம் திருவள்ளுவரை நினைவுகூரும் வகையில் இன்று (ஜன.16) திருவள்ளுவர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ணம் ; இன்று மூன்று போட்டிகள்

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 16ஆவது அத்தியாயத்தில் இரண்டாம் நாளான இன்றைய தினம் 3 போட்டிகள் நடைபெறுகின்றன. நடப்பு உலக சம்பியனும் நான்கு தடவைகள் சம்பியன் பட்டத்தை சூடியதுமான அவுஸ்திரேலியா இன்று நடைபெறும் ஏ குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்தாடுகிறது. இப் போட்டி விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இக் குழுவில் இலங்கையும் இடம்பெறுவதால் இப் போட்டி முடிவு இலங்கைக்கு முக்கியம் வாய்ந்ததாக அமையும். சி குழுவில் இடம்பெறும் முன்னாள் […]
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக்; செல்சியை வென்ற ஆர்சனல்

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில், செல்சியின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக பென் வைட், விக்டர் ஜையோகெரெஸ், மார்டின் ஸுபிமென்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செல்சி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ பெற்றிருந்தார்.
அமெரிக்காவை எளிதாக வீழ்த்திய இந்திய அணி
பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட (யு-19) ஆடவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான குரூப் – ஏ பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வேயின் புலவயோ நகரில் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 107 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி வீரர் ஹெனில் படேல் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். இந்த நிலையில், மழை காரணமாக […]
மீண்டும் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள்!

ஜம்மு – காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமான டிரோன்கள் மீண்டும் நேற்று (ஜன. 15) தென்பட்டன. இதனை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் டிரோன்கள் எல்லையைத் தாண்டும் சம்பவம் நடந்துள்ளது. இவை பெரும்பாலும் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நுழைவதற்கான வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிவதற்காக அனுப்பப்பட்டவையாக இருக்கலாம் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான […]