பௌத்த அடையாளங்கள் தமிழீழ ஆதரவாளர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன – தேரர் குற்றச்சாட்டு

தனி தமிழீழ கோட்பாட்டுவாதிகள் மற்றும் தீவிரவாதிகளால் வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த அடையாளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை மீள பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படலாம் என கலகம குசலதம்ம தேரர் குற்றம்சாட்டியுள்ளார். இணைத்தளம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர், அழிக்கப்படும் பௌத்த அடையாளங்கள் இது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அவதானம் செலுத்தி, அதாவது கல்வி மறுசீரமைப்பிற்கு முக்கியத்தும் வழங்கியது போல தலையிட வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கில் பல […]

ஜனாதிபதி யாழில் கலந்து கொண்ட நிகழ்வுக்கு அழைக்கவில்லை – சுமந்திரன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்விற்கு தங்களுக்கான அழைப்பு வரவில்லை என்று இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று(16-01-2026) கிளிநொச்சி நீதிமன்றத்தில் கிராம அலுவலர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு எதிராக நடைபெற்ற வழக்கு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். தவிசாளர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நேற்று ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுக்கு அரசாங்கம் அழைக்கவில்லை பதவியில் உள்ள தவிசாளர்களுக்கு […]

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 29.11.2025 அன்று வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தங்க வைக்கப்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு சுகாதார பரிசோதகரின் அனுமதி இன்றி உணவு வழங்க முற்பட்ட போது அதனை தடுத்த கிராம சேவையாளர் மீது தாக்கியதாக தெரிவித்து கிராமசேவையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த சம்பவத்தை பொலிசார் 02.12.2025 அன்று நீதிமன்றத்திற்கு […]

யாழ்ப்பாண மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு அரசாங்கம் இப்போது உருவாகி உள்ளது – ஜனாதிபதி

இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் தனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று (16) முற்பகல் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி, மீசாலை, வீரசிங்கம் […]

மதுபானசாலையில் மது அருந்தியவர்களிடம் பணம் கேட்ட முகாமையாளர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் உள்ள மதுபானசாலையில் மது அருந்திய கும்பலிடம் பணம் கேட்ட அதன் முகாமையாளரின் தலையில் மதுபான போத்தலினால் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (16) பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வசதி கொண்ட மதுபானசாலையில் கடந்த 9ஆம் திகதி இரவு மது அருந்துவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த கும்பல் சென்று மதுபானம் அருந்தியுள்ளது. […]

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினருக்கு எதிராக 3 குற்றப்பத்திரிகைகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் 3 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை (16) கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், ஊழியர் சிலர்களின் பெயர்களைச் சேர்த்து, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசுக்கு பாரிய […]

கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப வியட்நாம் தூதுவர் உறுதி!

அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ (Ditwah) சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாசவுக்கும், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி. ட்ரின் தி டாமுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (16) அமைச்சில் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில், அண்மையில் ஏற்பட்ட திட்வா சூறாவளி நிலைமையினால் இலங்கையின் […]

முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்வி முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரி போராட்டம்!

முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், 6 ஆம் வகுப்புக்கான ‘தொகுதி முறை’யை (Module System) உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரி 2026 ஆம் ஆண்டில் 6 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று வெள்ளிக்கிழமை (16) இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக அமைதிப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். பாடப்புத்தகச் சுமையைக் குறைத்து, மாணவர்களுக்கு இலகுவான முறையில் கல்வியை வழங்கும் நோக்கில் இந்த புதிய தொகுதி முறையை விரைவுபடுத்துமாறு இதன்போது பெற்றோர்கள் வலியுறுத்தினர். தமது கோரிக்கைகளை […]

பல்கலைக்கழகங்கள் சட்டமூலத்தை ஆராய்ந்து அங்கீகரித்தது துறைசார் மேற்பார்வைக் குழு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கை அதிபர் சேவையில் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இணைப் பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் (தரம் 1) ஆகியோரிடையிலிருந்து துறைத் தலைவரொருவரைத் தெரிவு செய்வதற்கும் துறைச் சபையை இயலச் செய்வித்தல், துறைத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைய முன்னர் துறைத் தலைவர் ஒருவரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்கு பேரவையை இயலச் செய்வித்தல் மற்றும் துறையொன்றின் தலைவரொருவரின் […]

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய அழுத்தத்தினாலேயே பிக்குகளுக்கு எதிராக வழக்கு – விமல் வீரவன்ச

திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய அழுத்தத்தினாலேயே பிக்குகளுக்கு எதிராக வழக்கு போடப்பட்டுள்ளது. இறுதியில் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளே சிக்கலில் மாட்டிக் கொள்ளப்போகின்றார்கள் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். திருகோணமலை பிரதான கடற்கரை புத்தர்சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பான வழக்கில் திருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை சுகம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். திருகோணமலை சிறைச்சாலைக்கு வெள்ளிக்கிழமை […]