தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டமானது, இன்று (16.01.2026)மாலை பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி ஒருங்கிணைப்பில் நடைபெற்றுள்ளது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளி விவகார பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, டிட்வா புயல் காரணமாக திறம்பட பணியாற்றிய சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் பிரதியமைச்சர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் தம்பலகாமம் பிரதேச […]

கொலம்பியா தோட்டத்தில் 10 வீடுகள் தீயில் எரிந்து சேதம்

நுவரெலியா – ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் மதியம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்து காரணமாக அத்தோட்டத்தில் அமைந்துள்ள 10 வீடுகள் தீயில் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. இதன்போது எவருக்கும் எவ்வித காயங்களுக்கும் ஏற்படாத போதிலும்; வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. அப்பகுதி மக்கள் தைப்பொங்கல் பண்டிகையைச் கொண்டாட சென்றிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயே 10 வீடுகளுக்கு பரவியுள்ளதாக பொலிஸார் […]

காரைக்கால் கடற்றொழிலாளர்கள் கைது

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் நாட்டுப்படகுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த காரைக்கால் கடற்றொழிலாளர்கள் 14 பேர் ஒரு விசைப்படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(16.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காரைக்கால் கடற்றொழிலாளர்கள் நாட்டுப்படகு கடற்றொழிலாளர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் செயற்படுவதால் தமிழக கடற்றொழிலாளர்கள் பாதிப்படைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்றும் இலங்கை கடற்பரப்புக்குள் சென்று அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளால் ஏனைய தமிழக கடற்றொழிலாளர்கள் பாதிப்படைவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. […]

டெல்லி விமான நிலையத்திலிருந்து அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

டெல்லி விமான நிலையத்திலிருந்து நியூயோர்க் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏர்பஸ் A350 விமானம், ஈரான் தற்காலிகமாக தனது வான்வழியை மூடியதன் காரணமாக, புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட போதிலும், 240 பயணிகளுடன் ஓடுபாதையில் நிறுத்த முற்பட்ட போது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. பயணிகள் விமானத்திலேயே இருந்த நிலையில், ஓடு பாதையிலிருந்து நிறுத்துமிட பகுதிக்கு டெக்ஸியிங் செய்து கொண்டிருந்தபோது, விமானத்தின் வலது பக்க என்ஜினுக்குள் சரக்கு பெட்டி […]

சிறைச்சாலையிலிருந்த இளைஞன் ரினோசனின் மரணத்தில் சந்தேகம்; வழக்கு விசாரணை

சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்னராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு பொலிஸாரினால் கடந்த மாதம் 02 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அங்கு சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 07 ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் குறித்த இளைஞன் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக […]

அமெரிக்காவில் மேற்கு கடற்கரையில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வறண்ட வானிலை

அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி (Ground frost) ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கியோர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அஸ்கிரிய, கொதட்டுவ மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூன்று சந்தேகநபர்கள் நேற்று (15) கிரிபத்கும்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் இன்று (16) பேராதனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் வெலிஹிரிய பிரதேசத்தில் […]

ஜெர்மனிய சுற்றுலா பயணிக்கு கத்திக் குத்து: இலங்கையில் சம்பவம்

களுத்துறை, அளுத்கம பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த 77 வயதான ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர், சக நாட்டுப் பயணி ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஹான்ஸ் வில்லெம்பெல்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காலை 9:30 ஹோட்டல் உணவகத்தில் அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது வயிற்றில் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் அளுத்கம பொலிஸார் குற்றப் […]

லண்டனில் மனைவியை படுகொலை செய்த இலங்கையருக்கு 29 வருட சிறை!

பிரித்தானியாவின் லிவர்பூலில் கடை ஒன்றில் இலங்கை பெண்ணான தனது மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு 29 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லிவர்பூல் கிரவுன் நீதிமன்றில் நேற்று வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 44 வயது மனைவி நிலானி நிமலராஜாவை கத்தியால் 18 முறை குத்திக் கொன்ற நிமலராஜா மதியாபரணம் என்ற 47 வயதுடைய இலங்கையருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி நடந்த […]