பிரித்தானியாவில் இலங்கைப் பெண் படுகொலை; முன்னாள் கணவனே குற்றவாளி!

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பிந்திய தகவல்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கார்டிப் பகுதியில் தனது முன்னாள் மனைவியை குத்திக் கொலை செய்தாக இலங்கையரான கணவன் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்தாண்டு இலங்கையை சேர்ந்த 32 வயதான நிரோதா நிவுன்ஹெல்ல படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் கொலையுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட முன்னாள் கணவனான 37 வயதான திசார வேரகலகே குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று […]

சர்ச்சைக்குரிய திருமலை புத்தர் சிலை விவகாரம்: 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கு விளக்கமறியலில்…

திருகோணமலை கடற்கரை பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பௌத்த தேரர்கள் உட்பட 10 சந்தேக நபர்களையும், எதிர்வரும் 19ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவானது நேற்று(14.01.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். என். எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2025 நவம்பர் 16ஆம் […]

யாழில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள தடயவியல் பொலிஸார்

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலக கடைத்தொகுதிக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாவடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் அமைத்துள்ள இரண்டு கடைகளை கொண்ட கடைத்தொகுதிக்கு நேற்றையதினம்(14.01.2026) அதிகாலை வேளை தீ வைக்கப்பட்டுள்ளது. இரு நபர்கள் கதவுக்கு தீ மூட்டி விட்டு தப்பி செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. பூட்டப்பட்டிருந்த இரும்பு கதவுகளுக்கே தீ வைக்கப்பட்டமையால் பெரியளவிலான […]

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைப்பு?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையை 50 ரூபாவினால் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை 16 ஆம் திகதி முதல் இந்த புதிய விலை நடைமுறையாகும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

தொடரும் அரச வைத்தியர்களின் வேலைநிறுத்தம்: நோயாளர்கள் பாதிப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீதான நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று (14) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.​ அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி மற்றும் நிர்வாக ரீதியிலான மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு […]

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாருடன் நாகர்கோவில் மக்கள் முறுகல்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை நேற்று அங்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவரை கைது செய்வதற்காக மருதங்கேணி பொலிசார் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டை திடீர் சுற்றிவளைப்பு செய்தனர். இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் […]

நடப்பு ஆண்டின் 13 நாட்களில் 82 பேர் உயிரிழப்பு!

டப்பு ஆண்டின் முதல் 13 நாட்களில் மாத்திரம் விபத்துகளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. ஜி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “கடந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் மட்டும் 77 பெரும் விபத்துகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இடம்பெற்ற விபத்துகளில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகனம் செலுத்தியமையால் ஏற்பட்டவையாகும். இதனிடையே, இந்தக் காலப் […]

இன்று பொங்கலை யாழில் கொண்டாடும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தைப்பொங்கல் திருநாளான இன்று(15.01.2026) வடக்கு மாகாணத்திற்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார். இன்று முற்பகல் 10 மணியளவில் மன்னார் மாவட்டத்துக்கு வருகை தரும் அவர் கொன்னையன் குடியிருப்பு காற்றாலை மின் திட்டத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைப்பார். இதைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு சௌத்பார் காற்றாலை மின்சாரத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவார். இதன்பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வருகை […]

மழைவீழ்ச்சி இன்று முதல் குறைவடையும்

இன்று (15.01.2026) முதல் நாட்டில் மழைவீழ்ச்சி குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மீதமுள்ள பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழால் இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்! – Behind Me ஊடக வலையமைப்பு

தமிழால் இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களை உங்கள் Behind Me ஊடக வலையமைப்பு தெரிவித்துக் கொள்கின்றது. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் இந்த நன்னாளில், இயற்கையையும், உலகுக்கு ஒளியூட்டும் சூரிய பகவானையும் போற்றுவதன் பின்னணியில் உள்ள ஆன்மீகம் மற்றும் அறிவியல் காரணங்கள் எமக்கு மிக அவசியம். மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே நதிக்கரை நாகரிகங்கள் அனைத்தும் இயற்கையை இறைவனின் கொடையாகவே கருதி வந்துள்ளன. குறிப்பாக, பயிர் விளைச்சலுக்கு ஆதாரமாக விளங்கும் சூரியனை வழிபடுவது உலகளாவிய […]