ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜன நாயகன், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 9 ஆம் தேதி வெளியாகவிருந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி – முதல்வர் ஸ்டாலின்
வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ. 111 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக 1.39 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால், நேரிட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின், டிச. 1 ஆம் […]
காசாவில் தீவிர பனிப்பொழிவு

பாலஸ்தீன காசா பகுதியில் கடுமையான குளிர் மற்றும் தீவிர பனிப்பொழிவு காரணமாக இதுவரை குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிர பனிப்பொழிவு காரணமாக சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மேலும் பலர் காயமடைந்தனர். இந்தநிலையில் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் தொடர்வதன்ன காரணமாக மீட்பு பணிகள் சவாலான நிலைக்கு உள்ளாகியுள்ளன. மீட்பு குழுக்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று, உயிரிழந்தோரைக் காப்பாற்ற முயற்சித்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பனிப்பொழிவு மற்றும் கடுமையான […]
ஈரானில் முழுமையாக முடக்கியுள்ள இணையச் சேவை

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசாங்கம் இணையச் சேவையை முழுமையாக முடக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், ஈலோன் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவை ஈரானியர்களுக்கு ஒரு முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக மாறியுள்ளது. ஈரானில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, ஸ்டார்லிங்க் நிறுவனம் அங்குள்ள பயனாளர்களுக்கான மாதந்திர சந்தா கட்டணத்தைத் தள்ளுபடி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டணம் செலுத்தாத நிலையிலும் தங்களுக்கு இணையம் கிடைப்பதாக ஈரானில் உள்ள […]
இலங்கை கிரிக்கெட் அணிக்கான ரி20 உலகக் கிண்ண உத்தியோகபூர்வ ஜெர்சி

இலங்கை கிரிக்கெட் அணிக்கான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண உத்தியோகபூர்வ ஜேர்சியை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) உத்தியோகபூர்வ ஆடை பங்காளியான மூஸ் குளோதிங் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது. இந்த பங்காளித்துவத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை இது குறிக்கிறது. அது மட்டுமல்லாமல், முன்னெப்போதையும் விட இலங்கை கிரிக்கெட் அணியுடன் ரசிகர்ளை நெருங்கச் செய்யும் முகமாக வடிவமைக்கப்பட்ட முதலாவது டிஜிட்டல் அனுபவமான மூஸ் ரசிகர் செயலியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவை அனைத்தும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் 2023இல் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட […]
உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி: ஆப்கானையும் வீழ்த்தியது இலங்கை

ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் இன்று ஆரம்பமாகும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை, அதற்கு முன்னோடியாக நடைபெற்ற இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றிகளை அடுத்து உற்சாகம் அடைந்துள்ள இலங்கை இளையோர் அணி உலகக் கிண்ண கிரிக்கெட்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது. தென் ஆபிரிக்க இளையோர் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனது முதலாவது பயிற்சிப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 12 ஓட்டங்களால் இலங்கை இளையோர் […]
வெள்ள நீர் தேங்கும் பிரதேசமாக சாய்ந்தமருது பெண்கள் சந்தை

நிமிடம் மழை பெய்தால் போதும் வெள்ள நீர் தேங்கும் பிரதேசமாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பெண்கள் சந்தை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று மட்டுமல்ல பருவ காலத்தில் கூட அடிக்கடி வெள்ள நீரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற சந்தைப்பகுதியாகவும் இச்சந்தையை சூழ உள்ள மாநகர சபைக்கு உட்பட்ட உள்வீதிகளும் வெள்ள நீரில் மூழ்குவதை அவதானிக்க முடிகின்றது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இவ்வாறு ஏற்படும் வெள்ள நீர் […]
திருட்டு மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி இரு இளைஞர்கள் பலி!
திருட்டு மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று(15) காலை இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். நாவற்குழி பாடசாலைக்கு அருகில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வட்டக்கட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருட்டு மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக […]
75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கலை அமெரிக்கா நிறுத்தவுள்ளது?

ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, நைஜீரியா உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா (Immigrant Visa) வழங்கலை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் என, அமெரிக்க வெளியுறவுத் துறை உள்குறிப்பை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விசாக்களை மறுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையிடல் (screening) மற்றும் சரிபார்ப்பு (vetting) […]
எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் – ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில், நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார். தைப்பொங்கலை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுப்பி வைத்துள்ள […]