பொலிஸாரின் அசமந்தபோக்கே மட்டக்களப்பில் ஏற்பட்ட தீ விபத்து

மட்டக்களப்பில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் ஆதாரங்கள் கொடுத்தும், பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என மட்டக்களப்பு நகர் வர்த்தகர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்றைய தினம்(14.01.2026) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவிருந்த எனது ஹோட்டல் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் […]
தைப் பொங்கல் விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி – யாழில் ஜனாதிபதி அநுர

பொங்கல் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, விசேட பூஜைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட “பொங்கல் விழா“ இன்று (15) வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டுள்ளார். இதன்போது, பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை […]
அலரிமாளிகையில் தேசிய தைப்பொங்கல்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், அலரிமாளிகையில் தேசிய தைப்பொங்கல் வழிபாடு, இன்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றது.
யானைக்கு வழிவிட்ட பஸ் சரிந்து விபத்து

கொழும்பிலிருந்து தெஹியத்தகண்டிய நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து புதன்கிழமை (14) இரவு 11.30 மணியளவில் திம்புலாகல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும், ஓட்டுநர் சிறு காயங்களுடன் மனம்பிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனம்பிடிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மனம்பிடிய பொலிஸார், வீதியைக் கடக்கும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை வீதியை விட்டு நகர்த்த வேண்டியிருந்ததாக சாரதியும் நடத்துனரும் பொலிஸாரிடம் தெரிவித்ததாகத் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் […]
ஸ்பெயின் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் மகாராணியைக் காண்கிறது!

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் மகாராணியைக் காண இருக்கிறது. தற்போதைய மன்னர் ஆறாம் பிலிப் மற்றும் ராணி லெட்டிசியாவின் மூத்த மகளான 20 வயது இளவரசி லியோனர், ஸ்பெயினின் அடுத்த வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 1800-களில் ஆட்சி செய்த இரண்டாம் இசபெல்லாவுக்குப் பிறகு லியோனர் ஸ்பெயினின் மகாராணியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, ஸ்பெயினின் மகுடம் ‘ஹவுஸ் ஆஃப் போர்பன்’ (House of […]
மின்சாரம் தாக்கி மாணவன் பரிதாபமாக பலி

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பிரதேசத்தில் நேற்று(14.01.2025) மாலை மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். கிண்ணியா காக்காமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும், காதர் முஹம்மது சாதிக் என்ற 13 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்று(14) மாலை குறித்த சிறுவன் தனது வீட்டில் மின் ஆளியை (Switch) அழுத்தியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறுவன் உடனடியாக மீட்கப்பட்ட […]
கொழும்பு – மாளிகாவத்தையில் வர்த்தக நிலையமொன்றில் தீ

கொழும்பு – மாளிகாவத்தை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ பரவல் இன்று வியாழக்கிழமை (15) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ பரவலை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்,(Government Medical Officers’ Association – GMOA) எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தத் தவறியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். எதிர்வரும் 23 ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் […]
பயணப் பொதிக்குள் 12 கிலோ கேரளா கஞ்சா

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். வடமராட்சி திக்கம் பகுதியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கடத்தி செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை பொலிஸார் வழி மறித்துள்ளனர். அதனை அடுத்து இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளையும் , தாம் கொண்டு வந்த பயண பொதியையும் கைவிட்டு தப்பி சென்றுள்ளனர். […]
ஆட்சியில் பங்கு பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ்
தமிழகத்தில் 1967-க்குப் பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாத காங்கிரஸ் கட்சி, இந்த முறை எப்படியாவது ஆட்சியில் பங்கு பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விஜய் தலைமையிலான தவெக போட்ட தூண்டிலில் சிக்கி, வரும் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா, தவெகவுடன் கூட்டணியா என்பதில் தொடர்ந்து காங்கிரஸ் குழப்பத்தில் இருந்து வருகிறது. 2019, 2021, 2024 பொதுத் தேர்தல்களில் நிலையாக இருந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி […]