உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் நாடாக மீண்டும் முதலிடத்தில் சிங்கப்பூர்

விசா இன்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வசதியின் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு (Henley Passport Index) – 2026 பட்டியலில், சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த பட்டியலின்படி, சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணம் செய்யும் உரிமையை பெற்றுள்ளனர். உலகளாவிய பயண சுதந்திரத்தில் இது மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. 2-வது இடத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஹென்லி பாஸ்போர்ட் […]
தாய்லாந்து ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

தாய்லாந்தில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலிருந்து வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உபோன் ராட்சதானி மாகாணத்தை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் 195 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ரயில், நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிக்கியோ மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது. அப்பகுதியில் அதிவேக ரயில் பாதை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதற்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் […]
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோரைத் தண்டிக்கவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருக்கிறது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோரைத் தண்டிக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அக்கடப்பாடு நிறைவற்றப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றிய ‘நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் […]
இலங்கைப் பாராளுமன்றக் குழு 28வது பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பு

2026 ஜனவரி 14ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்றுவரும் 28வது பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையிலான இலங்கைப் பாராளுமன்றக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்தியப் பாராளுமன்றத்திலிருந்துவழங்கப்பட்ட அழைப்பையேற்று இக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். இந்திய மக்களவையின் (லோக் சபா) சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், நான்கு பகுதியளவு தன்னாட்சியான பாராளுமன்றங்கள் உள்ளடங்கலாக 42 பொதுநலவாய நாடுகளின் 61 […]
28 கிலோ கஞ்சா பருத்தித்துறையில் மீட்பு

பருத்தித்துறையில் 28 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (14.01.2026) பிற்பகல் இன்பருட்டி கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கைப்பற்றப்பட்ட 28 கிலோ கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேக நபரும் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பு அதிகாரி பிரியந்த […]
மர்ம நோயால் உயிரிழந்த கைதி
நீதிமன்ற சிறை கூண்டில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலன்னறுவை விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொண்டுவரப்பட்ட கைதியே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் பொலன்னறுவையைச் சேர்ந்த 74 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மின்னேரியா பகுதியில் புத்தர் சிலையைத் திருடிய குற்றச்சாட்டில் குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், யாரும் அவருக்கு பிணை நிற்க […]
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்?

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிதம் சிங், தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர் சிங்கப்பூர் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் சிங்கபூர் பிரதமர் லாரன்ஸ் வாங், பிரதம் சிங்கை அவரது எதிர்க்கட்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த விஷயத்தை கவனமாகப் பரிசீலித்த பிறகு, பிரிதம் சிங்கின் குற்றவியல் தண்டனைகளும், […]
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க லண்டனில் புதிய தொழில்நுட்பம்

பிரித்தானியாவில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இலகுவாக கண்டுபிடிக்க Live Facial Recognition எனும் தொழில்நுட்பத்தை பொலிஸார் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது லண்டனில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ள நிலையில், தலைநகரை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் பல தேடும் சந்தேக நபர்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு ஆபத்தானவர்கள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை இந்தத் தொழில்நுட்பம் நிகழ்நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்து பொலிஸாருக்கு எச்சரிக்கை சமிக்ஞை வழங்கும். […]
கொட்டகலை பகுதியில் நடைபெற்ற போராட்டம் பொய்யானது?

ஹட்டன் – கொட்டகலை பகுதியில் நடைபெற்ற போராட்டம் பொய்யானது என தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் நேற்று(14.01.2026) அதே இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், லொப்கில் பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 பேருக்கு இருபத்தையாயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதியான 13 பேருக்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றதாக இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது குறித்து கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவி யாகுலமேரி […]
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சிறீதரன் எம்.பி சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டின் உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த் இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(14.1.2026) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான பயணங்களில் உள்ள இடைவெளிகள், பொறுப்புக் கூறல், நீதியை நிலை நாட்டுவதில் இன்றைய அரசும் அக்கறையுடன் செயற்படாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரால் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அத்தோடு, வடக்கு கிழக்கில் இன்றும் விடுவிக்கப்படாமல் இராணுவ வசம் உள்ள தமிழ் மக்களின் […]