ஓய்வுபெற்ற வைத்திய உதவியாளருக்கு விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கடற்படையின் ஓய்வுபெற்ற வைத்திய உதவியாளர் ஒருவரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் இன்று (14) மதியம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். முறைப்பாட்டாளரின் மூத்த மகளை இந்த ஆண்டு பாடசாலை […]

ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் மின் திட்டம் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் மன்னார் பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்துடனான இக்காற்றாலை மின்நிலையம் 10 விசையாழிகளைக் (Turbines) கொண்டுள்ளதுடன், இதன் வருடாந்த மின் உற்பத்தி 207,000,000 கிலோவொட் மணித்தியாலங்களாகும். இத்திட்டம் 2027 மார்ச் மாதத்தில் […]

எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகன உரிமையாளர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில், 92 ரக பெட்ரோல் இல்லை எனக் கூறி நாட்டின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ‘யூரோ 3’ (Euro 3) ரக பெட்ரோலை விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குத் தகவல் கிடைத்திருந்தது. அத்தகவலுக்கு அமைய செயற்பட்ட களுத்துறை மாவட்ட […]

தடைப்பட்டிருந்த மின்சாரம் வழமைக்குத் திரும்பியது!

ட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நவலக்ஷபான மற்றும் பொல்பிட்டிய மின் விநியோக மார்க்கங்களில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு காரணமாக இன்று (15) பிற்பகல் நுவரெலியா, மொனராகலை, பதுளை மற்றும் பழைய லக்ஷபான ஆகிய துணை மின்நிலையங்களின் மின் விநியோகம் முழுமையாகத் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக, குறித்த துணை மின்நிலையங்கள் ஊடாக மின்சாரம் வழங்கப்படும் பகுதிகளில் திடீர் மின்சாரம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபை […]

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையின் விசேட சுற்றிவளைப்பு

கனடாவில் பெயர் வெளியிடப்படாத பீல் க்ரைம் ஸ்டாப்பர்ஸ் தகவலின் அடிப்படையில், பீல் பிராந்திய காவல்துறையின் மூலோபாய மற்றும் தந்திர அமலாக்க காவல் பிரிவு அதிகாரிகளின் தேடுதலின் விளைவாக ஒரு துப்பாக்கி மற்றும் ஃபென்டனில், கோகெய்ன், மெத்தாம்பெட்டமின் ஆகியவற்றில் மொத்தம் 24,000 டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவர்மீது தற்போது 18 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என தெரிவிக்கும் பீல் க்ரைம் பிரிவினர் மக்களுக்கு சில முக்கிய அறிவித்தலை வெளியிட்டுள்ளார்கள். ‘உங்கள் தகவலும் மாற்றத்தை உருவாக்கலாம். பெயர் […]

‘திட்வா’ புயல்; 93% மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

  ‘திட்வா’ புயலின் பின்னர் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 85 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பதிலளித்தவர்களில் 95 வீதமானோர் தங்கள் பகுதிகளில் குடியிருப்பு, கைத்தொழில் அல்லது சமூக உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதில் வீடுகள் மற்றும் வீதிகளே […]

உள்ளூராட்சி சபைகளின் சேவைகளை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிக்கிறது!

பிரஜாசக்தி என்ற பெயரில் உள்ளூராட்சி சபைகளின் சேவைகளை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழரசுக் கட்சியின் தைப்பொங்கல் விழா இன்று வடமராட்சி மடத்தடி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஒரு கட்சியாக நாங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கிறோம். ஜனாதிபதி அவர்கள் கலந்துகொள்கின்ற இந்த அரச பொங்கல் […]

ஒட்டாவா மாநகரக் கவுன்சிலர் மீதான வழக்கு விசாரணை

ஒட்டாவா மாநகரக் கவுன்சிலர் மேத்யூ லுலோஃப் (Matthew Luloff) மீதான வழக்கின் விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி மேத்யூ லுலோஃப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அந்த மனுவை ஒன்டாரியோ நீதிமன்ற நீதிபதி மைக் பாய்ஸ் நிராகரித்தார். ஒட்டாவா நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் மற்றும் அறைகள் இல்லாத காரணத்தினால், 2025 ஒக்டோபரில் நடக்க வேண்டிய இந்த விசாரணை தற்போது எதிர்வரும் […]

8 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா பிரதமர் சீனா விஜயம்

பிரதமர் மார்க் கார்னி தனது நான்கு நாள் பயணமாக, பெய்ஜிங் சென்றடைந்தார். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கனடா பிரதமர் ஒருவர் சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் நிலவும் சிக்கல்கள் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் கனடா பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக, மார்க் கார்னி இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். வரும் 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார். […]

கியூபெக் அரசு அறிமுகப்படுத்தியுள்ள வைரஸ் பரிசோதனை முறைமை

கியூபெக் மாகாணத்தில் கருப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக, பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ‘பேப் டெஸ்ட்’ (Pap Test) முறைக்கு மாற்றாக, அதிகத் துல்லியமான ‘HPV’ வைரஸ் பரிசோதனை முறையை கியூபெக் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கருப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் மாகாணத்திலிருந்து இந்த நோயை முழுமையாக ஒழிப்பதே கியூபெக் அரசின் இலக்காகும். இதன்படி, 25 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் கருப்பை வாய் கொண்ட நபர்களுக்கு இனி 5 ஆண்டுகளுக்கு […]