புத்தளத்தில் விபத்து; இருவர் பலி
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (13.01.2026) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார், மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார். மேலும், காயமடைந்த பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் இருவரும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை […]
மைத்திரி குடும்பத்தில் உலகின் மிகவும் பிரபலமான கார்!

நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்தின் அதன் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக நிறுவனத்தால் இந்த 25 கார்கள் தயாரிக்கப்பட்டன. அந்த 25 கார்களின் ஒன்றை டட்லி சிறிசேன வாங்கியுள்ளார். டல்லி சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.10 கோடி பெறுமதியான தங்கம் யாழ். நகைக்கடையில் திருட்டு

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான, 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் குறித்த இளம் பெண், தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாகத் தங்க நகைகளைத் திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் […]
சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக இலங்கை மீது ஐ.நா குற்றச்சாட்டு

சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக இலங்கை மீது ஐ.நா குற்றச்சாட்டு! இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கும் அல்லது நீதித்துறை கட்டமைப்பிற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கும் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் தற்போதும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இத்தகைய […]
கொட்டகலையில் வெள்ள நிவாரணம் கோரி போராட்டம்!

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் தங்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, கொட்டகலை – ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை 4.30 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ரொப்கில் சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் புயல் காரணமாக, சுமார் 46 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. […]
2027 வரை தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் ஒத்திவைப்பு
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு முன்னெடுத்த விசாரணை […]
யாழ்.தாயக மக்கள் கட்சி அலுவலகத்துக்குத் தீ!

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும் கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்தின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தின் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் காரணமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான […]