ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி ஓய்வை அறிவித்தார்

ஆஸ்திரேலிய மகளிரணி கேப்டன் அலீசா ஹீலி அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய மகளிரணி மார்ச்சில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் பெர்த்தில் நடைபெறும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் போட்டிக்குத் தலைமை வகிக்கும் ஆஸ்திரேலிய மகளிரணி கேப்டன் அலீசா ஹீலி, இந்தத் தொடருடன் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான அவர், இந்தாண்டு இறுதியில் பிரிட்டனில் […]

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் […]

நியூஸிலாந்துடன் இந்தியா இன்று 2-ஆவது ஆட்டம்

இந்தியா – நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புதன்கிழமை (ஜன. 14) நடைபெறுகிறது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய விராட் கோலியுடன், கேப்டன் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் இந்த ஆட்டத்திலும் அணியின் ஸ்கோருக்கு பலம் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை […]

இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவா்களை விடுவிக்கக் கோரி ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் இதுவரை சிறைபிடிக்கப்பட்ட 83 மீனவா்கள், 252 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க அந்த நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வா் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 10 மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை (ஜன. 13) சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும், தமிழக மீனவா்கள் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் […]

தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்!

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. தலைநகர் டெஹ்ரான், புனித நகரான மஷ்ஹாத் ஆகிய இடங்களில் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்துள்ளன. ஈரானில் […]

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்; யாழில் கலந்துரையாடல்

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் ( PSTA) தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பில் தெளிவு படுத்தும் கலந்துரையாடல் நேற்று(13.01.2026) யாழ் பொது நூலக மண்டபத்தில் வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக முன்மொழியப்பட்ட PSTA பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் புதிய சட்டமாக வர உள்ளது. இது நாட்டின் […]

இலங்கை அரசை எதிர்த்து ட்ரம்பிடம் முறையிடவுள்ள பௌத்த பிக்கு

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வலவாங்குனவேவே தம்மரதன தேரர் விமர்சித்துள்ளார். அவை நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய தேரர், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாட்டை அழிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குறித்த நிலைமையை விளக்குவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, தனக்குத் தெரிந்த ஒரு மாணவர் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் ட்ரம்ப் குடும்பத்தை […]

சுவீடன் நாட்டுப் பெண் நீர்கொழும்பில் கட்டடத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழப்பு!

நீர்கொழும்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து கீழே வீழ்ந்து 26 வயதுடைய சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி நீர்கொழும்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் 9ஆவது மாடியில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண் திருமணமானவர் என்பதும், அவரது கணவர் ஒரு தொழிலதிபர் என்பதும் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் அவரது கணவர் வணிக நிமித்தமாக குருநாகல் பகுதிக்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர் கீழே […]

ஆறு மாதங்களாக தேங்கியுள்ள 300 புதிய வாகனங்கள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 300 புத்தம் புதிய வாகனங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்துறை குறித்த வாகனங்களை விடுவிப்பதற்காக அவற்றின் அசல் மதிப்பை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வரிகளை கோருவதாக தனிப்பட்ட வாகன இறக்குமதியாளர்கள் முறையிட்டுள்ளனர். இந்த விடயத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து இறக்குமதி விதிமுறைகளையும் கடைப்பிடித்ததாக தனிப்பட்ட வாகன உரிமையாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பின்னர் சுங்கத்துறை கூடுதல் வரிகளை விதித்துள்ளது, இதில் பொருந்தக்கூடிய சுங்க வரியில் கிட்டத்தட்ட 50 சதவீத […]

கடந்த போகங்களில் கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பணம் குறித்து…

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த போகங்களில் விவசாய அமைப்புக்களால் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பெருந்தொகையான நிதி முறைகேடாக கையாளப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவு மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றில் விவசாயிகள் சார்பாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பு, கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள மகிழங்காடு கமக்கார அமைப்பு இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் ஆகியவற்றால் ஊழல் முறைகேடுகள் […]