ஏடிவி வாகனம் மரமொன்றின் மீது மோதி விபத்து; சிறுவன் உயிரிழப்பு

ஒட்டாவா நகருக்கு மேற்கே உள்ள ஒரு கிராமப்புறப் பகுதியில், 5 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற ஏடிவி வாகனம் (All-Terrain Vehicle) மரம் ஒன்றின் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘புருடெனெல், லிண்டாக் மற்றும் ராக்லான்’ (BLR) என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் பண்ணையில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தின் போது சிறுவன் தலைக்கவசம் (Helmet) அணிந்திருந்ததாகப் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். பலத்த காயமடைந்த அந்த சிறுவன் முதலில் ஆம்புலன்ஸ் மூலம் […]
உறவை மீண்டும் வலுப்படுத்த கனடிய பிரதமர் கார்னி இந்தியா விஜயம்

கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney)விரைவில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வந்த ராஜதந்திர கசப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் நிகழவுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்து, கலந்துரையாடியிருந்தனர். அப்போது, இந்தியாவுக்கு விஜயம் செய்யும்படி இந்தியப் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை மார்க் கார்னி […]
றோயல் ஒட்டாவா மனநல மருத்துவ மையத்தில் ஆர்ப்பாட்டம்

ஒட்டாவாவில் உள்ள றோயல் ஒட்டாவா மனநல மருத்துவ மையத்தில் (Royal Ottawa Mental Health Centre) அறிவிக்கப்பட்டுள்ள பணிநீக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். மருத்துவமனையின் நீண்டகால பராமரிப்புப் பிரிவான ‘றோயல் ஒட்டாவா பிளேஸ்’ (Royal Ottawa Place) பகுதியில் 15 பணியிடங்கள் உட்பட மொத்தம் 20 பணியிடங்களை ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படுபவர்களில் பெரும்பாலானோர் மருத்துவத் தாதிகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு உதவியாளர்கள் (PSWs) ஆவர். இந்த […]
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 237 விலை உயர்ந்த புறாக்களை இந்தியாவில் இருந்து இரகசியமான முறையில் பிளாஸ்ரிக் கொள்கலன்களுக்குள் மறைத்து கடல் மார்க்கமாக புறாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த புறாக்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த சந்தேகத்தின் பேரில் மூவர் நெடுந்தீவு கடற்படை மற்றும் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளை அடுத்து கைதான மூவரும் 237 புறாக்களும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் படகும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக […]
கனடாவில் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும்; பலர் வேலையிழக்கும் அபாயம்?

கனடாவில் 2026ஆம் ஆண்டு மட்டும் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமகாலத்தில் பல உணவகங்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. ஊழியர்களுக்கான சம்பளம், காப்புறுதி மற்றும் வாடகை ஆகியவற்றுக்காக உணவக உரிமையாளர்கள் செலவழிக்கும் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில், உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் காரணமாக […]
தொடருந்து ஒன்றின் மீது கட்டுமான கிரேன் விழுந்ததில் 22 பேர் வரை பலி

தாய்லாந்தில் தொடருந்து ஒன்றின் மீது கட்டுமான கிரேன் விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்துடன் 55 பேர் வரை காயமடைந்துள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் 195 பயணிகளை ஏற்றிச் சென்ற தொடருந்து, பேங்கொக்கிலிருந்து புறப்பட்டு நாட்டின் வடகிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளது. இன்று காலை 10 மணியளவில் அதிவேக, தொழில்நுட்பம் கொண்ட தொடருந்து பாதையை அமைக்கப் பயன்படுத்தப்படும் கட்டுமான கிரேன் ஒன்று குறித்த தொடருந்து பெட்டிகள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தின் விளைவாக தொடருந்து தடம் புரண்டு […]
23,344 பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு நியமனம்!
நாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 23,344 பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உடனடியாக இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக ஆசிரியர் சேவைக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்ய இரண்டு தனித்தனியான போட்டிப் பரீட்சைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாவது பரீட்சை தற்போது அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகளுக்காக மட்டுமே நடத்தப்படும். இரண்டாவது பரீட்சை நாட்டிலுள்ள ஏனைய அனைத்து பட்டதாரிகளுக்கும் பொதுவானதாக அமையும். இந்த இரண்டு பரீட்சைகளிலும் பெறப்படும் பெறுபேறுகளின் அடிப்படையில், […]
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைத்த எதனையும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது

இந்த அரசாங்கத்தினால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைத்த எதனையும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் தனது தோல்வி நிலையை இந்த சமூகத்தின் மத்தியில் பாரிய அளவில் வெளிப்படுத்தி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். குரங்குகளை கணக்கெடுப்பது போன்று, கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் போன்று கல்வி […]
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை

டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகம் இன்று (14) அறிவித்துள்ளது. இக்கொடுப்பனவிற்கான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் ஏற்கனவே 15,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களும் இந்த புதிய கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி சமீபத்திய வரவுசெலவு திட்ட அறிக்கையில் அறிவித்தபடி, பேரிடரால் பாதிக்கப்பட்ட […]
‘விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை மத்திய அரசு தடுக்கும் முயற்சி தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்’ – ராகுல்!

“விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை மத்திய அரசு தடுக்கும் முயற்சி தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார் என்றும் கூறியுள்ளார். ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், ராகுல் காந்தியும் இப்போது விஜய்க்கு ஆதரவாக […]