முசரத் மிஸ்பாவிற்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாராட்டு!

‘2025 ஆம் ஆண்டுக்கான SAARC பெண்மணி’ விருதை வென்ற பாகிஸ்தானின் பிரபல தொழில்முனைவோரும் சமூகப் பணியாளருமான முசரத் மிஸ்பாவிற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து புதன்கிழமை (14) பாராட்டு விழா நடத்தியுள்ளார். ‘WCIC பிரதியாபிஷேக பெண் தொழில்முனைவோர் விருதுகள் 2025′ (WCIC Prathibhabhisheka Women Entrepreneur Awards 2025) நிகழ்வில், 2025 ஆம் ஆண்டுக்கான SAARC பெண்மணி’ விருதை தொழில்முனைவோரும் சமூகப் பணியாளருமான முசரத் மிஸ்பா […]

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் யாழ் தேசிய மக்கள் சக்தி அலுவலகத்திற்கு விஜயம்

யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் புதன்கிழமை (14) யாழில். உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார். அங்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , எஸ். பவானந்தராசா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, க.இளங்குமரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் ஆகியோர் அடங்கிய குழுவினரை சந்தித்து கலந்துடையாடினார்.

இலங்கையின் கடற்றொழில் துறையின் பேண்தகு தன்மையைப் பாதுகாக்க வேண்டும்

ர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் துறையின் பேண்தகுதன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR) ஒரு முக்கிய கொள்கை ரீதியான தீர்மானத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சுசந்த கஹவத்த, இந்த நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார். அது பின்வருமாறு அமைந்துள்ளது… அதற்கமைய, 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல், வெளிநாட்டு கடல் எல்லைகளைச் […]

போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து; யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் அதிகாலை 1.40 மணியளவில் போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 24ஆம் இலக்க விடுதியில் அவர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இதன்போது குறித்த நபர் தாதிய உத்தியோகஸ்தர்களுடன் முரண்பாடு, பொருத்தமற்ற வார்த்தைகளை பேசி, விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார். […]

நாட்டின் கடல் எல்லை வருமானம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு குறித்து…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போது, நாட்டின் கடல் எல்லை வருமானம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு குறித்து பல முக்கிய கருத்துக்களை முன்வைத்தார். இலங்கையின் கடல் எல்லைப் பகுதியில் தற்போது 8 சதவீதமாக உள்ள ‘வெள்ளை வலயத்தை’ (White Zone) 23 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று 2023 […]

வெருகல் முகத்துவாரம் பகுதியில் கரையொதுங்கிய மரத்தாலான படகு!

திருகோணமலை மாவட்டம், ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் கடற்கரையில், மரத்தால் தயாரிக்கப்பட்ட மிதப்பு படகு போன்ற பொருளொன்று இன்று புதன்கிழமை (14) காலை 5 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. இந்த மிதப்பு படகு மியன்மார் அகதிகள் வந்திருக்கக்கூடிய படகாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த படகில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதுடன், பல்வேறு சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, குறித்த இடத்திற்கு அதிகளவான பொதுமக்கள் வருகை தந்து […]

கிளிநொச்சி “முழுநாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு கலந்துரையாடல்

விஷ போதைப் பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான “முழுநாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட மட்ட கலந்துரையாடல் இன்று (14) கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. “போதை இல்லாத நாடு.மகிழ்ச்சியான நாளை” என்பதனை உருவாக்குவதனை தொலைநோக்காக கொண்ட மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கு மாவட்ட செயற்பாட்டுக் குழுவினை ஸ்தாபிப்பதற்கான இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய இராமலிங்கம் சந்திரசேகரது தலைமையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால […]

கடுமையான மூடுபனி; வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

இலங்கையில் இந்த நாட்களில் நிலவும் கடுமையான மூடுபனி காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும்போது சாரதிகள் கவனமாக இருக்குமாறு வீதி மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாகன முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனம் செலுத்தவும், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது. கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடு : ஆபத்தான பொருளுடன் சிக்கிய இளைஞர் கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடு : ஆபத்தான பொருளுடன் சிக்கிய இளைஞர் வாகனங்களை கட்டுப்படுத்தக்கூடிய வேகம் எனவே, வானிலை குறித்து வாகன […]

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் மஹிந்த சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்றது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதராக தனது இராஜதந்திர சேவையை முடித்துக்கொண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளார். இச் சந்திப்பின் போது ஜூலி சங், அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்புவதற்கு மற்றும் வலுப்படுத்துவதற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது நன்றியையும் […]

மின்சார கம்பியில் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

வறக்காபொல பொலிஸ் பிரிவின் ஹுனுவல பகுதியில் உள்ள ஒரு வயலில் செவ்வாய்க்கிழமை (13) மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதியினர், வறக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து, வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹுனுவல, துலிஹிரிய பகுதியைச் சேர்ந்த 60 மற்றும் 58 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், வயலை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க இழுக்கப்பட்ட மின்சார கம்பியில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஹுனுவல பகுதியைச் சேர்ந்த 34 […]